செய்முறை
சட்டியில் நல்லெண்ணை ஊற்றி குடை மிளகாயை வதக்கவும். வதக்கி வந்ததும் உருளைக்கிழங்கு, கரட் இரண்டையும் போட்டு வதக்கவும் பின் கீரையையும் போட்டு வதக்கவும். முட்டையை நன்றாக அடிக்கவும் அதனுடன் சீஸ், பால் என்பவற்றினை சேர்த்து அடித்த பின் வதக்கி வைத்திருக்கவும். மரக்கறிகளை முட்டைக் கலவையுடன் சேர்க்கவும். உப்பு, மிளகு தூள் போட்டு கலக்கவும் பின் சிறிய குழி உள்ள பாத்திரத்தில் இக் கலவையை ஊற்றி 20 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
சிவப்பு குடை மிளகாய் | பாதி |
முட்டை | 03 |
கீரை | ½ கப் |
உருளைக்கிழங்கு, கரட் | அவித்தது |
பால் | ¼ கப் |
சீஸ் | ¼ கப் |
உப்பு | தேவையான அளவு |
மிளகுதூள் | தேவையான அளவு |
நல்லெண்ணைய் | தேவையான அளவு |
தோசை பிட்டு இடியப்பத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms.பா.நிவோஜா