செய்முறை
சட்டியில் நல்லெண்ணையை ஊற்றி குடைமிளகாயை வதக்கவும். வதங்கி வந்ததும் கரட்டையும் போட்டு வதக்கவும். பின் கீரையையும் போட்டு வதக்கவும். இன்னுமொரு கோப்பையில் முட்டையை நன்றாக அடிக்கவும். பின் முட்டைக்கலவையுடன் சூடாக்கிய பாலை சேர்த்து அடித்த பின்னர் வதக்கி வைத்துள்ளதை முட்டைக்கலவையுடன் சேர்க்கவும். பின் உப்பு, மிளகுதூள் போட்டு கலக்கவும். பின் சிறிய குழி உள்ள பாத்திரத்தில் ( முக்குழிச்சட்டி) ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி பின் முன் கலக்கிய கலவையை விட்டு வேக வைத்து இறக்கவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
சிவப்பு இடைமிளகாய் | 01 |
முட்டை | 03 |
கீரை | தேவையான அளவு |
கரட் | 01(சீவியது) |
பால் | 02 மேசைக்கரண்டி அளவு |
உப்பு | தேவையான அளவு |
மிளகுதூள் | தேவையான அளவு |
நல்லெண்ணைய் | தேவையான அளவு |
மாலைநேர தேனீருடனோ அல்லது பாடசாலைக்கு எடுத்துச் செல்லவோ ஏற்ற உணவு.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms.பாலாறு நிவோஜா