பிள்ளை “பூப்படைதல்” என்பதை மாதவிடாய் ஆரம்பிக்கும் அன்றே எய்துவதாகக் கருதுகின்றோம். அது தவறே உண்மையில் பூப்படைதல் சார்ந்த ஏராளமான உடல் வளர்ச்சி மற்றும் தொழிற்பாடுகள் கிட்டத்தட்ட அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றன.
ஆகவே நாம் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுப்பதற்கு மாதவிடாய் தொடங்கும் வரை காத்திருப்பது பழமையானது மாறாக 10 தொடக்கம் 12 வயதிலிருந்தே நாம் கீழ்வருமாறு உணவூட்டலை வழிப்படுத்த வேண்டும்.
பெண்பிள்ளை ஒருவரின் உடல் வளர்ச்சியும் இனவிருத்திக்கான தொழிற்பாடுகளும் அதிகூடியளவில் 14 தொடக்கம் 18 வயதிலேயே உடலில் நிகழ்கின்றன.
அக்காலப்பகுதியில் ஒரு நாளிற்கான அவரின் புரதத் தேவை 12 கிராமினாலும் இரும்புச் சத்தின் தேவை இரண்டு மடங்காகவும் அதிகரிக்கின்றது.
மேலும் விற்றமின்களான ஏ, பி, சி, கே, போலிக்கமிலம் போன்றவற்றினதும் கனியுப்புகளான நாகம், செம்பு, செலனியம், போன்றவற்றின் தேவையும் அதிகரிக்கின்றது.
எனவே அவற்றை நிறைவு செய்யும் உணவுகளையே நாம் தெரிவு செய்து உண்ணுதல் அவசியம். புரதத்தேவையை ஈடு செய்ய மீன், பால், முட்டை, இறைச்சி, மட்டுமன்றி, போஞ்சி, பருப்பு, சோயாமீற், கௌபி, பயறு போன்றவற்றைக் உண்ணக்கொடுக்கவும்.
கடும்பச்சை இலைக்காய்கறிகள், பழங்கள், முட்டை, பால், சீஸ், ஈரல், மீன், எண்ணெய் போன்றவற்றை உண்பது விற்றமின் ஏ, விற்றமின் சி, மற்றும் போலிக்கமிலம் என்பவை சமாத்தியப்படுதல் என்பதை தொடர்ந்து கொடுக்கப்படும். பத்தியக்கறியில் பல மருத்துவ குணங்களைக் கொண்ட பொருள்கள் இருப்பது உண்மையே உதாரணமாக நச்சீரகத்தில் இரும்புச் சத்து உள்ளது. வெந்தயத்தில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைகட்டுப்படுத்தும் குணம் உண்டு. எனவே இவற்றை விரும்பும் பட்சத்தில் கொடுக்கலாம்.
எனினும் நீராகாரங்களைத் தவிர்ப்பது மிகமிகத் தவறானதே. அது மாத்திரமல்ல பல வகை மரக்கறிகள், பழங்கள், என்பவற்றைத் தவிர்ப்பது கூடாது. அதற்கு மாறாக சொக்லெட், தேநீர், கோப்பி, மென்பானங்கள் என்பவற்றை அறவே தவிர்ப்பின் பின் ஆரோக்கியமான எதிர்காலம் எமது கையில்!!
Dr.பிரதீபனா செல்வராகவன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ் போதனா வைத்தியசாலை.