வலிப்பு நோய்க்கான முதலுதவி
ஒருவருக்கு வலிப்பு ஏற்படின் அவருக்கு காயங்கள் ஏற்படுத்த கூடியவற்றை அப்புறப்படுத்தல், நோயாளியைத் தரையில் படுக்கவிடல், அவரது சுவாசத்துக்கு தடை ஏற்படாதவாறு தலையை சற்றுப் பின்னால் சாய்ந்த நிலையிலும் சரித்து படுக்கவிடல், முடியுமாயின் நோயாளியை இடது பக்கத்துக்குச் சரிந்து படுக்க விடுவது சிறந்தது.
- மற்றும் நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தல், வலிப்பினால் நோயாளிக்கு நாக்கு கடிபடாமல் தவிர்த்துக்கொள்ள றப்பர் சட்டம் அல்லது உருட்டப்பட்ட துணித்துண்டு போன்றவற்றை வாயில் வைக்கலாம். இரும்பு பொருள்கள் எதனையும் திணிக்க கூடாது.
- வலிப்பு நிகழ்ந்த நேர அளவு, உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவதானித்து வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும்.
- முகத்தில் நீர் தெளிக்கலாம்.
- வலிப்பு பானங்கள் எதுவும் பருகவேண்டாம்.
- சிறு பிள்ளைகளுக்கு வலிப்பு ஏற்படின் கூடிய விரைவில் வைத்தியசாலைக்கு எடுத்து வருதல் சிகிச்சை பெறுதல் அவசியம். இது பிள்ளையின் உடல் மனவளர்ச்சிகளில் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும்.
- காய்ச்சலால் குழந்தைகள், சிறுவர்களுக்கு வலிப்பு ஏற்படின் உடைகளை தளர்த்திடல் அல்லது அகற்றிவிடல், காய்ச்சலை குறைப்பதற்கு குளிர்ந்த நீரைக்கொண்டு உடலை நனைக்க வேண்டும். முக்கியமாக கழுத்து, அக்குள், நெற்றி, அரைப் பகுதிகளை மீண்டும் துடைத்துவிடல் காய்ச்சலைக் குறைப்பதற்கான மருந்துகள் வலிப்பு மருந்துகளை ஒழுங்கான இடைவெளியில் கொடுத்தல் அவசியம்.
- வலிப்பு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை கிரமமாக எடுத்தல் வேண்டும். இது நோய் குணமாவதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு உதவும். அத்துடன் மருத்துவரின் ஒப்புதலின்றி உங்கள் மருந்துகளைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ அல்லது அடிக்கடி எடுத்துக் கொள்ளவோ கூடாது.
- வலிப்பு ஏற்பட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலான வேலையைத் தேர்ந்து எடுங்கள்.
- கல்வி கற்கும் மாணவர்களுக்கு வலிப்பு நோய் இருப்பின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், வலிப்பு நோயின போது செய்யும் முதலுதவி பாதுகாப்பு முறைளை அறிந்து இருத்தல் அவசியம்.
- நீண்ட தூர பயணங்கள், வெளியூர் பயணங்களின் போது வலிப்புக்கான மருந்துகளை எடுத்துச் செல்ல வேண்டும். விமானப் பயணங்களின் போது காதுக்கான ஒலித்தரப்பு சாதனங்களைப் பொருத்துதல் நல்லது.
- தீக்காயங்களை தவிர்ப்பதற்கு நேரடியாக தீயைத் தவிர்த்தல்
- குளிக்க செல்லும் போது யாரிடமாவது தெரிவித்துவிட்டு செல்லுதல், அறைக் கதவினை உட்பக்கமாக தாளிட்டு செல்லக்கூடாது. நீந்தச் செல்லும்போது நண்பர்களுடன் சேர்ந்து செல்லுதல், ஆழமான நீர் நிலைகளில் நீந்துதல் தவிர்த்தல்.
- வலிப்பு நோய் உள்ள பெண்கள் கர்ப்பம் அடைய முன்பு வைத்திய ஆலோசனை பெறுதல் நல்லது. கர்ப்பத்தின் போது போஷாக்கான உணவு மருந்துகளுடன் போலிக்கமிலம் அதிகம் உள்ள உணவுகள், மாத்திரைகள் எடுத்தல் குழந்தையின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.
- மூளையில் குருதி உறைவதால் ஏற்படும் வலிப்பைத் தடுப்பதற்கு பொட்டாசியம் அதிகம் உள்ள உணவை நோயாளி உள்ளெடுக்க வேண்டும். உதாரணம் கீரை, பருப்பு வகைகள், பால், முந்திரிப்பருப்பு, வாழைப்பழம், பயறு போன்ற உணவுகள் எடுத்தல்
- நோயாளிக்கு மருந்துடன் உடல் மன சமூக பாதுகாப்பு அவசியமானது. நோயாளியின் ஆழ் மனதுக்கு ஒவ்வாத வீட்டு சூழ்நிலை, அலுவலகச் சூழ்நிலை, பாடசாலைச் சூழ்நிலைகளை நோயாளி சமாளிப்பதற்கு ஏற்றவாறு பாதுகாப்பான ஆரோக்கியமான மன நிலையை பெறுவதற்குகந்த உள வள ஆலோசகரிடம் ஆலோசனை பெறுதல் சிறப்பானது.
- வலிப்பினை தூண்டக்கூடிய காரணிகளை தவிர்த்தல், பாதுகாப்பான நடவடிக்கைகளை எடுத்தல் சிறப்பானது. உதாரணம் – அதிக சத்தம், விமானப்பயணம், அதிக மதுபானம், அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தல், போதைப்பொருள் பாவித்தல், அதிக நேரம் வழித்திருப்பது, உடலில் அதிகரித்த வெப்பநிலைகைளை கண்களை உறுத்தும் ஆடைகள், வேகமாக மின்னும் மின்கலங்கள், அதிக பசி, அதாவது குருதியில் வெல்ல மட்டம் குறைதல் போன்ற வலிப்பினை தூண்டக்கூடிய காரணிகளை தவிர்ப்பதால் வலிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களை குறைத்து நோயாளியை ஆரோக்கியமாக வாழ வைக்கலாம்.
எஸ்.சுதாகரன்.
தாதிய உத்தியோகத்தர்
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ்ப்பாணம்.
Posted in கட்டுரைகள்