உழுத்தம் பருப்பு – ¼ KG
பயற்றம் பருப்பு –
தயிர் – சிறிதளவு
பச்சை மிளகாய் – சிறிதளவு
இஞ்சி- சிறிதளவு
செத்தல் மிளகாய் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1மே.கரண்டி
சூரியகாந்தி எண்ணெய் – தாளிக்க
பச்சை கலரிங் – சிறிது
செய்முறை
பயறை லேசாக சூடாக்கிய பின் தோல் நீக்கி எடுக்கவும். உழுத்தம் பருப்பை நன்கு ஊறவைத்து அரைக்கவும். ஊறவைத்த பயற்றம் பருப்பை வடித்தெடுத்து அரைத்த உழுந்துடன் சேர்த்து தயிர் விட்டு நன்கு பிசையவும். உப்பு அளவுக்கு சேர்க்கவும். பச்சை மிளகாயைத் தூளாக வெட்டி, இஞ்சியை தூளாக வெட்டி சேர்க்கவும். செத்தல் மிளகாயை சிறிதாக வெட்டி கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும் எல்லாவற்றையும் நன்கு சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும்( பாக்கு அளவு உருண்டை) இதை ஆவியில் (steam) அவித்து எடுக்கவும். காலை உணவாகப் பாவிக்கலாம். விரும்பின் சிறிது பச்சை கலரிங்கை சேர்த்து பிசைந்து உருண்டைகளைாக அவித்தால் அழகாக இருக்கும்.
செல்வி சிவானந்தராணி துரைசிங்கம்