அழுத்தம் (Stress) என்பது:
நீங்கள் வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ அதனை அனுபவித்திருப்பீர்கள். (Stress) என்பது, நீங்கள் ஒரு சவாலான மாற்றத்துக்கு வெளிக்காட்டப்படும் போது உடலில் இயற்கையாகவே நிகழும். உங்களை உயர்நிலையில் தயார்படுத்துவதற்கான நிலைமையே ஆகும். அந்த மாற்றம் நெருக்கமான ஒருவரின் மரணச்செய்தியாகவோ அல்லது உங்களை ஓர் எதிரி தாக்கவரும் சூழலாகவே இருக்க முடியும்.
Stress அவசியமான ஒன்று:
பின் அது ஏன் பாதிப்பானதாக மாறுகின்றது?
ஏதாவதொரு (Stress) அழுத்தத்தை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கையில் நீங்கள் Stress இற்கு உள்ளாகின்றீர்கள். அந்த நிலைமையில் உடலில் வெளிப்படும் Hormones மூளை, தசைக்கான குருதிப்பாய்ச்சல், சுவாசவீதம், தசைத்தொழிற்பாடு என்பவற்றை மிகைப்படுத்துகின்றன. அவை உங்களிடம் சடுதியான செயற்திறன் அதிகரிப்பையும், சக்தி வெளிப்படுகையும் நிகழச்செய்கின்றன. Stress இனை ஏற்படுத்திய காரணி ஓர் ஆபத்தான எதிரி எனில் நீங்கள் எதிரியைத் தாக்கியோ, அல்லது மிக விரைவாக தப்பியோடியோ உங்களை காத்துக்கொள்ள முடியும்.
அது ஒரு விளையாட்டுப்போட்டி எனில் அதனைப் பயன்படுத்தி வெற்றியைப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது Stress இனால் பதற்றமுற்றுத் தோல்வியைத் தழுவிக்கொள்ள நேரிடலாம். நேரிடையான, ஆரோக்கியமான விளைவுகளையும் எதிரிடையான ஆரோக்கியமற்ற விளைவுகளையும் ஏற்படுத்தலாம். எவ்வாறான விளைவு என்பதை அதைத் கையாளும் உங்களின் மனநிலை, பரம்பரைப் பின்னணி என்பன தீர்மானிக்கின்றன.
வழமையில் அருட்டப்பட்ட உடலியல் மாற்றங்கள் சவாலான சூழலைக் கடந்த பின் சாதாரணமான நிலைக்குத் திரும்புகின்றன. பொதுவாக எதிரிடையான ஆரோக்கியமற்ற விளைவுகள், வெற்றி கொள்ளப்பட முடியாத சூழல்கள் அருட்டப்பட்ட நிலைமையை நாள் கணக்கிலோ அல்லது வார மாதக்கணக்கிலோ நீடிக்கச்செய்கின்றன. அவ்வாறு வழமைக்கு திரும்புவதில் ஏற்படும் தாமதம் சாதாரண உடல், உளத் தொழிலியலைப் பாதிப்பதுடன் சில நோய்நிலைமைகளைத் (உயர் குருதி அமுக்கம், ஆஸ்த்துமா, வயிற்றுக் கோளாறு, வயிற்றுப்புண்) தீவிரப்படுத்திவிடுவதுடன் புதிதாக உளவியல் நோய் நிலைமைகளையும் உருவாக்க முனைகின்றது.
எதிரிடையான Stress இன் விளைவுகள்
அவை உங்களுடைய உடலில், உணர்வில், நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றன.

இவ்வாறான இயல்புகளின் நீடிப்பு உடலின் உயர்செயற்திறன், நோயெதிர்ப்பு திறன் என்பவற்றைக் குறைத்து நோய்க்குள்ளாகும் தன்மை, ஆயுள்வீழ்ச்சி என்பவற்றை ஏற்படுத்தி விடுகின்றன.
Stress இனைக் கையாளுதல்
கையாள்தலின் முன் Stress இனைக் இனங்கானுதல் தேவையானது. நீங்கள் Stress இனை உணரும் போது உங்களையே சில கேள்விகள் கேட்டு Stress இனைப் பற்றி விழிப்புற்றுக்கொள்ளுங்கள்.
- நான் இப்போது எதை எதை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்?
- இவ்வாறு என்னை மாற்றத் தூண்டியது ஏன்?
- முன்பு இது போல் நான் இருந்திருக்கின்றேனா? அப்படியெனில் எவ்வளவு காலம்?
- இதிலிருந்து விடுபட நான் என்ன செய்ய முடியும்?
இவற்றை முயன்றுபாருங்கள்.
- உங்கள் வாழ்க்கைப்பாதையைத் திட்டமிடுங்கள்.
- பகிர்ந்து கொள்வதற்காக உரையாடுங்கள், உங்களுக்கு நெருக்கமானவருடன் தேவையான அளவிற்குப் பிரச்சினை பற்றி உரையாடுங்கள்.
- உங்கள் உடலில் ஏற்படுத்தப்பட்ட சக்தி அதிகரிப்பை வேலைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், ஆடைகளைத் தோயுங்கள், அறைகளைச் சுத்தம் செய்யுங்கள்.
- ஆறுதல் பெற்றுக்கொள்ளுங்கள், உங்கள் மனம் விரும்பும் இடங்களைத் தெரிவு செய்து நேரத்தைச் செலவிடுங்கள், அது பூங்காவாகவோ, கோயிலாகவோ, கடற்கரையாகவோ இருக்கலாம். உங்கள் மனப்பாரத்தை இளகச் செய்யுங்கள். அது இனிய இசையைக் கேட்பதன் மூலமாகவும் இருக்கலாம்.
- உங்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கக்கூடிய நண்பர்களுடன் பழகுங்கள் சிரிப்பைத் தரக்கூடிய திரைப்படங்களைப் பாருங்கள்.
- சிரித்து வெற்றி பெறுங்கள், வாழ்க்கை நிமிடங்களால் ஆனது எந்தவொரு இழப்பையோ, கவலையையோ, பிரச்சினையையோ ஒரு நிமிடத்துக்கு உங்களால் மறக்க முடியும். அப்படியே அடுத்த நிமிடத்தையும் தாண்டுங்கள் . பின் அடுத்த நிமிடம் ஒவ்வொரு நிமிடங்களையும் வெற்றிகொள்ளுங்கள். வாழ்க்கையை நீண்ட பயணமாகப் பார்ப்பதைத் தவிருங்கள்.
பின் உங்களை, மணித்தியாலங்களை வெற்றி கொள்ளக்கூடியதாக மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் அழுத்தங்களை வெற்றிகொண்டு வாழந்துகொள்ளத்தொடங்குவீர்கள்.
பி.திலீபன்,
மருத்துவ மாணவன்