ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்படும் ஆபத்தான நோய் நிலை இதுவாகும். இலங்கையிற் குழந்தைகளின் வைத்தியசாலை அனுமதியில் இரண்டாவது இடத்தினை இந்த நோய் வகிக்கின்றது.
இது ஒரு வைரஸ் நோய் நிலை. இது Human Metapneumo Virus, Adeno Virus, Parainfluensa Virus, Rhino Virus போன்ற வைரஸ் தொற்றுதலினால் ஏற்படுகின்றது. நோய்த் தொற்றலின் போது சுவாசப்புன்குழாய்கள் அழற்சியுற்றுச் சுரப்புகள் அதிகரிக்கும். இதனால் குழந்தைகளில் சுவாசித்தல் கடினம். காய்ச்சல், இருமல், பால்குடித்தல் கடினம், சுவாசவீதம் அதிகரித்தல் என்பன காணப்படும்.
நோய் ஏற்படின் உடனடியாக அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு Saline Nebulisation ஒட்சிசன் என்பன கொடுக்கப்படும். மக்னீசியம் சல்பேற் சேலைன் உடன் ஊசி மூலம் செலுத்தப்படும். மேலும் பக்ரீரியாத் தொற்று ஏற்பட்டால் அல்லது தடுக்க நுண்ணுயிர் கொல்லியும் வழங்கப்படும்.