ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தியவசியமானது போசனையான உணவு. இயற்கையின் மூல வளங்களைப் பயன்படுத்தி அதனோடு இணைந்து செய்யும் தொழில் தான் விவசாயம். எமக்கு சிறந்த போசனையை தருவது இந்த விவசாய உற்ப்பத்தி பொருட்களே. எங்கள் வீட்டு தோட்டங்களாலும் சேதன விவசாய முறைகளாலும் நாம் போசணையான உணவப்பொருட்களை பெற்றுக் கொள்கின்றோம். இது தவிரவும் எமது நாட்டு சீதோவ்ண நிலையும் எமக்கு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. ஆகவே எமது சுற்றாடலில் இயல்பாகவே கிடைக்கும் கீரை வகைகளின் எண்ணிக்கையோ சொல்லில் அடங்காது.
எமது உடல்நோய் எதிர்ப்ப சக்தியை உடலுக்கு பெற்றுக் கொள்ள எமது நாளாந்த உணவில் கீரைவகைகளைச் சேர்த்தக்பொள்வது அத்தியாவசியம். தோட்டங்களிலும் ,வயல்களிலும்,வேலிகளிலும் படர்ந்து வரும் கீரை வகைகள் பல. முடக்கொத்தான், முசுட்டை, கொவ்வை, தூதுவளை ,முசுமுசுக்கை, சாரணை, பயிரி ,பசளி, பனங்கீரை, குப்பைமேனி, தேங்காய்ப்பூக்கீரை, என பல வகைகள் உண்டு. அது தவிர மழைக் காலங்களிலும்பயமில்லாது உண்ணக் கூடிய அகத்தி, முருங்கை, சண்டி, அம்பெலேல்லா பொன்ற இலை வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பயனுள்ள கீரை வகைகளை நாம் தேர்ந்தெடுத்து சமைத்தாலும் வளரும் பிள்ளைகள் அவற்றை உண்ணாது ஒதுக்கி விடலாம். ஆகவே அவர்களும் விரும்பி உட்கொள்ளும் வகையில் பச்சையாக சாப்பாட்டில் சேர்க்கலாம். பச்சை மிளகாய் சம்பல் அரைக்கும் போது இரண்டு கைப்பிடி கீரை அல்லது வல்லாரை, கறிவேப்பிலை, தூதுவளை ,மணித்தக்காளி ,பொன்றவற்றைச் சேர்த்து பிட்டுடன் அவிக்கலாம். இடியப்பப் பிரட்டல் செய்யும் போது லீக்ஸ் சேர்ப்பது போல் அரிந்த கீரையை சேர்க்கலாம். கரைத்து வைத்து இருக்கும் தோசை மாவுடன் கலந்து சுட்டெடுக்கலாம்.
இவற்றை சுவையான கறியுடன் சேர்த்து சாப்பிடும் போது சிறு பிள்ளைகள் இது கீரை என ஒதக்கி விடமாட்டார்கள். ஆகவே சமையலில் சத்தான உணவுகளை சமைக்கும் போது அதனைச் சுவையாகவும் விரும்பி உண்ணக் கூடிய வகையிலும் தயாரிக்க வேண்டும். மிளகு, சீரகத்தூள் ,வெந்தயம், பெருஞ்சீரகம் ,கறுவா, கராம்பு ,ஏலம் என இயற்க்கையளான மணமூட்டிகள் சுவையூட்டிகள் சேர்த்து சமைத்தல் சாலச் சிறந்தது.
போசணைக் குறிப்பு:
நாம் உண்ணும் உணவு வகைகளில் காணப்படும் இரும்பு சத்து உடலில் அகத்தறிஞ்சப்பட விற்றமின் ‘சி’ அவசியம். ஆகவே கீரை வகைகள் நிறைந்த தேசிப்புளி சேர்ப்பது அத்தியாவசியம். கொதிக்கும் கறிவகைகளுள் தேசிப்புளி சேர்த்தால் அதில் காணப்படும் விற்றமின் ‘சி’ அழிந்துவிடும்.
கொவ்வை:
இயல்பாகவே வேலிகளில் படரும் கொவ்வை அதிக சத்த நிறைந்தது. மருத்தவ பலன் உடையது. விற்றமின் ‘பி’, ‘சி’ போன்ற உயிர்ச்சத்தக்கள் இரும்பு கல்சியம் பொட்டாசியம் போன்ற கனியுப்புக்களும் காணப்படுகின்றன. கொவ்வைக்காய் கொவ்வை இலை குறிப்பாக நிரிழிவு அதிக எடை மற்றும் சமிபாட்டு சிக்கல்களுக்கும் சிறுநீரகக் கல் போன்ற நோய்களுக்கும் தீர்வாக அமைகின்றது. அந்த வகையில் இன்று நாம் கொவ்வை இலையின் சமையல் முறை ஒன்றைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கொவ்வை இலை-05 கைப்பிடி
பச்சை மிளகாய் -02-03
சின்ன வெங்காயம்-05-06
தேஙங்காய்ப்பூ-அரைக் கோப்பை
தேசிப்புளி, உப்பு- அளவாக
செய்முறை:
கொவ்வை இலைகளை ஒடித்து நன்கு அலசி கழுவி உடுக்கவும். கொவ்வை இலை சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் குறுணலாக அரிந்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரிந்த கொவ்வை இலை, பச்சை மிளகாய் ,வெங்காயம் ,தேங்காய்ப்பூ அளவாக ,உப்பு சேர்த்து நன்கு கலந்து எடுக்கவும். தாச்சி சட்டியை (மண் சட்டி விசேடமானது) அடுப்பில் வைத்து சூடாக்கவும் பாத்திரம் சூடான பின்பு கொவ்வை இலைக் கலவையை கொட்டி அகப்பை காம்பால் கிளறவேண்டும்.
இலையிலுள்ள நீரும் உப்பும் சேர்ந்து அவிந்து ஒரு சுண்டல் நன்கு அவிந்து ஒரு சுண்டல் பதமாக வரும்போது பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி உப்பு சுவை பார்த்து தேசிப்புளி சேர்க்கவும். இந்த கீரை சுண்டவை சுடு சோற்றுக்கு மட்டுமல்லாது பிட்டுடனும் சாப்பிடலாம். கரைத்து வைத்த தோசை மாவுடன் சேர்த்து சுட்டு எடுக்கலாம். கீரைச் சுண்டல் வகைகளை சமைக்கும்போது அதிக நீர் விட்டு அவியவிடாது வெறும் சட்டியில் போட்டுச் சூடாக்க வேண்டும்.