டெங்கு காய்ச்சலானது நுளம்பால் பரப்பப்படும் ஒரு தொற்று நோய் ஆகும். இந்த வைரஸ் தொற்றானது மனிதனுக்கு மனிதன், நேரத்துக்கு நேரம் மாறுபட்ட அறிகுறிகளை அதாவது சாதாரண காய்ச்சல் தொடக் கம் உயிர் கொல்லும் டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சி நிலை போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.இது அனைவரையும் பாரபட்சமின்றி பாதித்தாலும் சிறுவர்கள், முதியோர் மற்றும் நீண்ட கால நோய்களுக்குட்பட்டவர்கள் (நீரிழிவு, புற்றுநோய்) போன்றோரை வெகுவாகப் பாதிக்கின்றது.
நோய்க்காவி நுளம்பு
எடிஸ்வகை பெண்நுளம்பு, இவை கறுப்பு நிறக்காலில் வெள்ளை சிறு புள்ளிகளைக் கொண்ட இலகுவில் அடையாளம் காணக் கூடியவையாகக் காணப்படுகின்றன. இந்த நுளம்பு பொதுவாகப் பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றது. இந்த நுளம்புகள் சுத்தமான நீர்த்தேங்கும் எமது சுற்றாடல்களிலேயே முட்டை இட்டு பெருக்கமடைகின்றன. அதாவது பூந்தொட்டிகள். கூரை பீலிகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் பாத் திரங்கள் அலங்காரத் தாவரங்கள், சிரட்டை, டயர் போன்றவற்றிலேயே நீர் தேங்கி நுளம்பு பெருக வழி வகுக்கின்றன. ஓர் ஆரோக்கியமான நுளம்பு ஒரு முறை 100 தொடக்கம் 200 முட்டைகளிடும் அவை ஒரு வார காலத்தில் நுளம்பாக உருவாகின்றது. நோய் தொற்றுள்ளவரை கடிக்கும் போது நுளம்பை அடையும் வைரஸ் அதன் உணவு பாதையை அடைந்து பின் அதன் உமிழ்நீர் வழியாக நோயற்ற ஒருவரைக் கடிக்கும் போது சென்றடையும்.
நோய் அறிகுறிகள்
நோய்த் தோற்றுக்குள்ளாகுபவர்களில் 50 தொடக்கம் 90 வீதமானோர் எது வித நோய் அறிகுறிகளையும் வெளிக் காட்டுவதில்லை . சிறுபகுதியினர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்படுவர். இது 2 தொடக்கம் 7 நாள்களுக்கு இருக்கும். அத்துடன் சிறு அறிகுறிகளுடன் சேர்ந்து காணப்படலாம். அவை தலைவலி, கண்களின் பின் பகுதியின் வலி, உடற்சோர்வு, என்பு வலி, தசைவலி, குமட்டல், வாந்தி, அரிப்பு, மூக்கிலிருந்து குருதி வெளி யேறல், சிறுநீருடன் அல்லது மலத்துடன் குருதி வெளியேறல், தோலில் சிறுசிறு சிவப்பு புள்ளிகள் தோன்றுதல், பெண்களுக்கு அதிகளவு மாதவி டாய் வெளியேற்றம் போன்றனவாகும். ஏனையோர் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சி நிலைக்கு உட்படுகின்றனர். டெங்கு காய்ச்சலானது 3 பிரிவாக பிரிக்கப்படும்.
காய்ச்சல் நிலை, கடுமையான நிலை, மீள் நிலை என்பனவாக அவை அமைகின்றன. காய்ச்சல் நிலையில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படும் இதனைத் தொடர்ந்து காய்ச்சல் குறைந்து ஓரிரு நாள்களில் கடுமையான நிலை ஏற்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும். அத்துடன் உறுப்புக்கள் செயலிழப்பு ஏற்பட்டு அதிர்ச்சி நிலையும் ஏற்படலாம். இந்த நிலை 24 தொடக்கம் 48 மணி நேரமே நீடித்து இருக்கும். பின் மீள் நிலையில நோயாளி பழைய நிலைமையை அடைவர்.
மருத்துவமனையை நாடவேண்டிய சந்தர்ப்பங்கள்
குருதிப்போக்கு அறிகுறிகள் உள்ள போது தொடர்ச்சியான வாந்தி, வயிற்று வலி, சுவாசிப்பதில் கடினம், காய்ச்சல் திடீரென குறைவடைவதுடன் நோயாளி தொடர்ந்தும் சோர்வா கவும் சுகயீனமடைந்தும் காணப்படல் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள், சிறுவர்கள், நீண்ட கால நோய்க்குள்ளானவர்கள், கர்ப்பிணி தாய்மார் இருப்பின் நோய் முற்றிய அதிர்ச்சி நிலை உடல் குளிர்வடைதல், வெளிறி யிருத்தல், நாடித்துடிப்பு அதிகரித்தல், மனக்குழப்பம் போன்ற நிலை மற்றும் உறக்க நிலை என்பன இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடவேண்டும்.
நினைவில் கொள்க
காய்ச்சல் ஏற்படின் இயன்றவரை ஓய்வெடுக்கவும். பகல் நேரத்தில் ஓய்வெடுக்கும்போது நுளம்பு வலையைப் பயன்படுத்தவும். அதிக பானங்களைப் பருகுதல், உடன் தயாரிக்கப்பட்ட பழச்சாறு, தேநீர், கஞ்சி, ஜீவணி போன்றன சிறந்தவை. சாயம் ஊட்டப்பட்ட பழச்சாறு சோடா போன்றவற்றைத் தவிர்க்கவும். காய்ச் சலைக் குறைப்பதற்குப் பெரசிட்டமோல் எடுக்கலாம். தினமும் 4 வேளை களுக்கு மட்டுமே கவனமாக எடுக்கவும். அஸ்பிரின் அடங்கிய மருந்து களை எடுப்பதைத் தவிர்க்கவும். தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சலிருப்பின் மருத்துவமனையை நாடவும்.
டெங்கு இல்லாது ஒழிக்கலாம்
நுளம்பு கடிப்பதால் மட்டுமே டெங்கு வைரஸ் உடலுக்குள் செலுத்தப்படுகின்றது. எனவே நுளம்பு பெருக்கத்தை தடுப்பதுடன் நுளம்பு எம்மை கடிக்காது தடுப்பதற்கு நுளம்பு வலை. திரி போன்றவற்றைப் பயன்படுத்துவதாலும் நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். நுளம்பு பெருக்கத்தைத் தடுக்க வாரம் ஒரு முறை உங்கள் வீட்டுச் சுற்றுச்சூழ லிலும், பாடசாலை, காரியாலயம் என்பவற்றிலும் உள்ள டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை இனங்கண்டு இல்லாது ஒழிக்கவேண்டும்.
மருத்துவர்-மு.பியற்றிஸ் கேசினி.