உங்கள் வீட்டுச் சமையலறையே நோய் தீர்க்கும் மிகச் சிறந்த முதல் மருத்துவமனையாகும். நாம் உண்ணும் உணவின் ஊட்டமே உயிர்காக்கும் மருந்தாகும். இதில் உப்பும் நாம் உண்ணும் உணவில் ஒன்றி விட்ட உணர்வுபூர்வமான விடயம் ஆகும். எனினும் எந்தவொரு பொருளுக்கும் இரு வேறுபட்ட குணங்கள் உள்ளன. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும். எமது உடலில் உப்பின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ எமக்கு பிணிகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. உப்பு மிகுதியினால் எமது உடலில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுநீரகம் சார்ந்த உறுப்புக்களே. சிறு நீரகங்கள் எமது குருதியில் கலந்து இருக்கும் மேலதிகமான உப்புக்கள், கழிவுப் பொருள்களை வெளியேற்றி இயல்பான அளவு சமநிலையைப் பேணுகின்றன.
எமது உடலை சீரான சமநிலையில் வைத்திருக்க, இயக்கச் செய்யும் உணவாக உப்பு உள்ளது. எமது உடலின் நீரின் அளவை நிர்ணயிப்பது உப்பின் வேலையாகும். சரி வர உப்புக்கிடைக்காத உடலில் ஹோர்மோன்களின் குறைபாடு உண்டாகி, உடல் கூறுமாற்றங்களும் உடலில் தேக்க நிலைகளும் உண்டாகும். முறையற்ற இதய துடிப்பை உப்பு சீராக்குகிறது. முறையான குருதி அழுத்தத்தை ஊக்குவிக்கிறது. மூளைக்கலங்களில் உண்டாகும் அதிகபட்ச அமிலத்தன்மையை சீராக்குகிறது. உடல் கலங்களுக்கு மின்னாற்றலைத் தருகிறது. நுரையீரலை தூய்மை செய்யவும் தடித்து வறண்ட சளியை இளக்கவும் ஆஸ்துமாவை தடுக்கவும், உடம்பில் உண்டாகும் தசைப்பி டிப்பு மற்றும் எலும்புத்தொகுதியை பாதுகாப் பதற்கும் உப்புக்களின் பயன்பாடு அவசியம். மற்றும் வாயில் அதிகபடியான உமிழ் நீர் ஊறுவதை தடுக்கிறது. தூக்கத்தின் போது உமிழ் நீர் வடிதலைக் குறைக்கிறது. நல்ல தூக்கம் தந்து மன ஒருமையைத் தரும் வதற்கும் உப்புக்களின் பயன்பாடு அவசி யம். கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கின்றது. நரம்புக் கலங்களை தூண்டி உணரச் செய்வதற்கும் உப்பின் பயன்பாடு தேவை.
எமது எலும்புகளிலும் 27 சதவீதம் உப்பின் அளவு காணப்படுகிறது. எமது உடலுக்குத் தேவையான அயடீன் சத்தை உப்பில் இருந்து பெறமுடியும். உடலில் உப்பின் அளவு பற்றாக்குறை உண்டானால் அயடீன் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புண்டு. இந்த அயடீன் உப்பானது உடலில் உண்டாகும். வேதியல் இயக்கங்களை சீராக்கவும் முளையின் செயற்பாட்டை சீராக்கவும், தைரொயிட் சுரப்பியை சீராக்கவும் மற்றும் தலைமுடி, நகங்களை பராமரிப்பது போன்ற பல விடயங்களுக்குப் பயன்படுகிறது. இந்த அயன் சேர்ந்த உப்பைச் சேர்த்து வைப்பதற்கும் சில முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்தல் வேண்டும். சூரிய வெளிச்சத்திலும் ஈரலிப்பிலும் நீண்டகாலம் விட்டு வைத்தால் உப்பில் உள்ள அயடீன் சேதமாக இடமுண்டு. ஆகவே பிளாஸ்ரிக், மர, கண்ணாடி அல்லது மட்கலத்தில் இட்டு இறுக்கமாக மூடி வைத்தல் வேண்டும். அயடீன் சேர்ந்த உப்பைக் கூடுமானவளவு விரைவில் உப யோகப்படுத்தல் வேண்டும். உப்பைத் திறந்து வைத்தால் விரைவில் அயடீன் சத்து அழிந்துவிடும்.
ச. சுதாகரன்
தாதி உத்தியோகத்தர் ,
போதனா மருத்துவமனை,
யாழ்ப்பாணம்.