இயற்கை எமக்கு வழங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவக் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள மா மருந்து தண்ணிர் ஆகும். இது எளிமையானது. முறை அறிந்து பயன்படுத்தினால் தவறாமல் பயன் தரும் பக்க விளைவுகள் இல்லாதவை. உடல் அனுசேபம் இயல்பாக நடைபெற போதுமான நீர் இன்றியமையாதது ஆகும். சிறுநீர் மலம் எமது உடலின் மிகப்பெரிய கழிவுகள் நீக்கியான தோலின் மூலம் வியர்வை, மூச்சு, சளி ஆகியவற்றின் வழியாக ஒவ்வொரு விநாடியும் நமது உயிராற்றல் நமது உடலை நோயற்றதாகச் செய்வதற்காக நடைபெறும் செயற்பாட்டில் ஏற்படும் நீர் இழப்பை ஈடுகட்டி, உடலின் இயல்பான நீரின் அளவு சீராகப் பராமரிக்கப்படுவதற்குத் தேவைப்படும் அளவில் நீர் பருகுவது மிக இன்றியமையாதது ஆகும்.
அலட்சியம் வேண்டாம்
நாம் உண்ணும் உணவானது எமது உடலில் உள்ள இயற்கையான சுரப்பிகளாலும், செரிமான அமிலங்களாலும், செரிமான உறுப்புக்களாலும், மிக நுண்ணிய துணிக்கைகளாகப் பிரிக்கப்படும் போது உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை ஒரே சீரான விகிதம் அளவினதாக மாற்றுவதற்கு அல்லது தணிப்பதற்கும் மேலும் உணவுப் பொருள்களை மென்மைப்படுத்தி கூழ்நிலையை அடைய வைக்கும். கழிவுகளை உடலைவிட்டு நீக்க தேவைப்படுமளவில் உள்ள நீர்த் தேவையையும் நமது உடல் உயிர் ஆற்றல் நமக்கு உணர்த்தும் அறிவிப்புதான்நீர்த்தாகம் ஆகும்.
இந்த நீர்த்தாகத்தை நாம் அலட்சியப்படுத்தினால், செரிமானக் குறைபாடுகள், மலச்சிக்கல், சிறுநீரகச் சிக்கல்கள், சிறுநீரகக் கல் போன்ற பல்வேறு வகையான நோய்களுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டதாகி விடும். எனவே சுத்தமான பாதுகாப்பான குடிதண்ணிரைப் பருகுதல் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நல்ல தண்ணீர் என்பது உப்புக்களும் வேறு திண்மப் பொருள்களும குறைந்த அளவில் கரைந்துள்ள நீர் ஆகும். சுத்தமான குடிதண்ணிருக்குப் பதிலாகக் குளிர்பானங்களான தேநீர் மற்றும் பானங்கள் பருகுவது பொருத்தமாக இருக்காது. இது எமது நாளாந்த ஜீரண ஓட்டத்தில் மாறுதல் சிக்கல் ஏற்பட வாய்ப்பாகிறது.
உதாரணம்: பசியின்மை, செரிமானக்குறைபாடுகள், வயிற்றுப் போக்கு. எனினும் நீரின் தேவையை முறை அறிந்து பயன்படுத்துதல் நலம் தரும்.
தண்ணீரை எப்போதெல்லாம் எடுத்துகொள்ளல் வேண்டும்
காலையில் எழுந்தது பல் தேய்த்த பின்பு தாகம் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் போதுமான அளவு (மூன்று நான்கு) குடிதண்ணீரை எமது உமிழ் உடலின் நீர்த் தேவையை ஈடுகட்டவும் சமிபாடாகிய உணவுக் கழிவுகைள அகற்றும் செயலுக்காகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உணவு உண்ட பின்பு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் ஏற்படும் தாகத்தின்போது போதுமான குடிதண்ணிர் பருகுதல் எமது செரிமானம் மேம்பட உதவுகின்றது.
பகலில் ஒருவேளை உணவுக்கும் மறுவேளை உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அதாவது தாகம் மறைந்து திருப்தி நிலை ஏற்படும் அளவுக்குப்பருகுதல் நல்லது.
சூடான பானங்கள், தேனிர் கோப்பி போன்றவற்றைப் பருகுவதற்கு முன்பு தேவைப்படுமாயின் நீர் அருந்தலாம். சூடான பானங்கள் அருந்திய பின்பு 30 நிமிடங்களுக்குள் குளிர்ச்சியான பானங்கள் அருந்துவதைத் தவிர்த்தல் நலம்.
காய்ச்சல் நேரங்களில் உணவைத் தவிர்த்து கூடிய அளவு போதுமான அளவு நீர் அல்லது வெந்நீர் கோப்பி, தேநீர் இளநீர் மற்றும் நீராகாரங்கள் அருந்துதல் நல்லது.
உணவு உண்ட உடன் அரைக்கப் வெந்நீர் பருகுதல் மூலம் செரிமான உறுப்புகளுக்குக் குருதி விநியோகத்தை அதிகரித்துச் செரிமானம் மேம்பட உதவும்.
உடற்பயிற்சி, கடின உழைப்புக்குப் பின்பு அல்லது வெய்யிலில் சென்று வந்த உடன் குழந்தைகள் ஒடியாடி விளையாடிய பின்பு இந்த நிலையில் உடலில் இரத்த ஒட்டம் தீவிர நிலையில் இருக்கும். பெருமூச்சு வியர்வை, அதிக அளவில் நீர்த்தாகம் இருப்பினும் உடலின் இரத்த ஒட்டம் இயல்பு நிலைக்கு வந்தபின்பு, (5நிமிடங்கள்) சென்ற பின்பு போதுமான நீர் அருந்துங்கள். தீவிர நிலையில் தேவைப்படின் சூடான பானங்கள் அல்லது வெந்நீர் போன்றன அருந்துதல் நலம் தரும். இது மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடற்கழிவுகளை நீக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.இந்த நிலையில் நாம் குளிரான பானங்களை உடன் அருந்தினால், உடலின் இரத்த ஓட்டத்தில் திடீர் மாறுதலை ஏற்படுத்தி, தடிமன், தும்மல், மந்த நிலை, உடல் வலி, தலைப்பாரம், தலைவலி, காய்ச்சல் போன்றன ஏற்படலாம்.
உணவு உண்ணும்போது அதிகளவு நீர் அருந்துதல், உணவு உண்பதற்கு முன் பின் ஒரு மணிநேரத்திற்குள் அதிகப்படியான நீர் பருகுதல் போன்றவற்றால் எமது ஜீரண அமிலங்கள் நீர்த்து அவைகளின் தீவிரத்தன்மை வெகுவாகக் குறைந்து முறைகேடான ஜீரணம் ஏற்படுகின்றது.
பாலருந்தும் நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் பசி வேறு. நீர்த்தாகம் வேறு. குழந்தை அழும்போது ஒரு தேக்கரண்டி தண்ணிரை குழந்தையின் வாயருகே கொண்டு சென்றால் தாகம் என்றால் தண்ணிரைப் பருக எத்தனிக்கும், நீர்த்தாகம் இல்லை என்றால் தண்ணிரை மறுத்து விடும். அப்போது பால் அருந்தக் கொடுக்கலாம். எனவே, குழந்தை அழும் போது தாகமா? பசியா? என்பதையும் பிரித்துணர்ந்து தேவைப்படும் அளவில் குழந்தைக்குக் குடி தண்ணிரை ஊட்டுவதன் மூலம் செரிமானக் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே சீராக்கப்படுவதால் அஜீரணம், மலச்சிக்கல், வாந்தி, வயிற்றுப் பொருமல் போன்றன. தவிர்க்கப்பட்டுக் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
உணவு உண்ணும்போது இடையில் குளிர்பானங்களைப் பருகுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
குடி தண்ணிர் எவ்வளவுதான் துய்மையானதாக இருப்பினும் அது தேக்கி வைக்கப்படும் பாத்திரம் அதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். காரணம் தேக்கி வைத்திருக்கும் பாத்திரங்களின் தன்மையும், நீரில் நுண்ணியதாகக் கலந்து விடுகின்றது. இரும்பு அல்லது பிளாஸ்ரிக் குழாய்களில் தேங்கி நிற்கும் நீரில் துரு பிளாஸ்ரிக்கின் இரசாயனக் கலவை குடிதண்ணிரை நஞ்சாக மாற்றுகின்றது. அலுமினியம், பிளாஸ்ரிக், ஈயம் பூசப்பட்ட பித்தளை, செப்பு போன்ற பாத்திரங்களில் தண்ணிர் தேக்கி பயன்படுத்துவதன் மூலம் நீரில் நச்சுத் தன்மை ஏற்பட்டு விடுகின்றது. கண்ணாடி எவர்சில்வர் போன்றவற்றில் சேமிக்கப்படும் நீரில் நச்சு கலப்பு ஏற்படுவதில்லை.
தற்போது சுற்றுச்சூழல் மாசடைவதால் நீரில் கலந்துவிட்ட மாசுக்களை அகற்று வதற்கு நீரைக் கொதிக்கும் வரை நன்றாகக் காய்ச்சி ஆறவைத்துப் பழைய மண்பானையில் 10 மணி நேரம் வரை அசைவில்லாமல் ஆறவைத்துப் பின்பு வடித்து அடியில் உள்ள வண்டல்களை அகற்றிய பின்பானையைக்கழவி நீரை அதனுள் ஊற்றி மூன்று நாள்களுக்குக் குடிதண்ணீராகப் பாவிக்கலாம்.
புதிய பானை ஒன்றினுள் நீரைவிட்டு இரண்டு மூன்று தடவை சூடாக்கிய பின்பு பாவிக்கவும். இம்முறை மூலம் நீரின் நச்சுக்களையும் அதில் கலந்துள்ள வண்டல்களையும் ஐம்பூதங்களின் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட பானை ஈர்த்து அடியில் தங்க வைத்துவிடும். அத்துடன் கொதி நிலையில் நிரில் இருந்து வெளி யேற்றப்படும் ஒட்சிசன் மற்றும் இதரசத் துக்களை மண்பானையானது காற்றில் இருந்து மீண்டும் ஈர்த்து அந்த நீரின் தரத்தை மீண்டும் உயர்த்தி விடுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஏனைய பாத்திரங்களுக்கு இப்படியான ஆற்றல் இல்லை. மனிதன் இந்த உலகில் உடல், உள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உணவால் கிடைக்கப்பெறும் ஆற்றல்கள் மட் டும் போதாது. தண்ணீர் மற்றும் காற்றுப் போன்றவற்றால் கிடைக்கப்பெறும் ஆற்றல்களும் அண்டவெளியில் சூரியன், சந்திரன் இதரகோள்களில் இருந்து பெறப் படும் வெப்ப ஒளி, ஒலி, வாயு அலைகள் ஓசோன் படலத்தின் ஊடாக வடிகட்டி மனிதனுக்குச் சரியான விகிதத்தில் பெறப் படும்போதே அவன் தொடர்ந்து உடல், உளஇயல்பு ஆரோக்கிய நிலையில் வாழ முடியும் என்பதை அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் ஒருவரின் மொத்த எடையில் 65 வீதம் தண்ணீர் என நவீன விஞ்ஞானம் கூறுகின்றது. விஞ்ஞான முறைப்படி சுத்தமாக்கப்படும் குடிதண்ணீரின் சிறப்புத் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றதையும் இயற்கை நிலையில் இருக்கும் நீரின் மூலம்தான் மனிதன்அளவற்ற நன்மைகளைப்பெறுகின்றான் என்பதையும் சுற்றுச் சூழல் மாசடைவதால் மனிதன் விஞ்ஞான முறைப்படி சுத்தமாக்கப்பட்ட குடிதண்ணீர் அருந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான் என்பதையும் ஆய் வின் மூலம் அறிகிறோம்.
ச.சுதாகரன்
கட்டுரையாளர்
தாதிய உத்தியோகத்தர்,
போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்