நேகமான நீரிழிவு நோயாளிகளை நோக்கின் அவர்கள் தமது பிற்காலத்தில் இருதயநோயாளிகளாக இருப்பதை நாம் அவதானித்துள்ளோம்.
நீரிழிவு நோயாளிகள் தமது குருதியில் குளுக்கோசின் அளவைக்கட்டுப்பாடாக வைத்திருப்பவர்களாயினும் கூட அவர்ளுக்கு இருதயநோய்களுக்கான சந்தர்ப்பம் சாதாரண ஒருவரிலும் பார்க்க இரண்டு தொடக்கம் நான்கு மடங்கு அதிகம் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
விளைவுகள்
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயானது பார தூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியன. அவையாவன,
- குறைந்த வயதிலிலேயே இருதய நோய்கள் ஏற்படுதல்
- அதிகரித்த குருதி அழுத்தம்
- நரம்புகள் பாதிக்கப்படுதல்
- கண்கள் பாதிக்கப்படுதல்
- பாரிசவாதம்
- சிறுநீரகப் பாதிப்பு
இது நீரிழிவு நோயாளிகளில் ஏற்படும் இருதயநோய்களுக்கான சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்கும்.
நீரிழிவால் ஏற்படும் இருதய நோய்கள்
முடியுருநாடிகளில் ஏற்படும் அடைப்பும் . இருதயபலவீனமும் இருதயத்தசைகள் செயற்பாடிழுத்தலும் இருதயப்பலவீனமும்.
நீரிழிவு நோயாளிகளில் ஏற்படும் முக்கிய இருதயநோய்கள். முடிவுரு நாடிகளில் அடைப்புகள் ஏற்படுதாலேயே இவை ஏற்படுகின்றன. இருதயத்துக்கு குருதியை வழங்கும் முடியுருநாடிகளில் கொழுப்புப்படிவுகள் ஏற்படுவதாலும் இந்தக் கொழுப்புப் படிவுகள் உடைந்து குருதிக் கட்டிகள் உருவாவதாலும் இருதயத்தின் குறிப்பிட்ட பகுதிக்கான குருதியோட்டம் தடைப்படுகின்றது. இதனால் அந்தப் பகுதி இறப்படைவதுடன் இருதயத் தொழிபாடும் பலவீனம் அடைகிறது. இது சாதாரணமாக ஒருவரிலும் பார்க்க துரிதமாக நீரிழிவு நோயாளி ஒருவரில் அதிகம் ஏற்படும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் இருதய நோய்க்கான காரணிகள்
- குருதியில் குளுக்கோசின் அளவு கட் டுபாடில்லாமல் இருத்தல்.
- அதிகரித்த உடற்பருமன்
- அதிகரித்த குருதி அழுத்தம். இது இருதய நோய்க்கான சந்தர்ப்பத்தை இரட்டிப்பாக்கும்
- குருதியில் கொழுப்பின் அளவு அதிகரித்தல்.
- புகைப்பிடித்தல்
- குடும்பத்தில் ஒருவருக்கு இருதய நோய்கள் இருத்தல்.
நீரிழிவைத் தவிர்க்க உடற்பருமனைக் குறைப்பதும் மிகமிக அவசியமானதாகும். இதன் படி உடற்பருமனைக் குறைப்பதற்கு, உணவுக்கட்டுப்பாடு இனிப்புக்கள் மாச்சத்து, கொழுப்புச்சத்து அடங்கிய உணவுகள் உண்பதைத் தவிர்த்தல்.
பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள், நார்ச்சத்து அதிகம் அடங்கிய உணவுகளை அதிகம் சேர்த்தல். உடற்பயிற்சி குறைந்தது ஒரு நாளில் 30 நிமிடங்கள் வாரத்தில் 5 நாள்களாவது சீரான உடற்பயிற்சி மூலம் புகைப்பிடித்தலை நிறுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுதல் மிகமிக அவசியமானதாகும்.
நீரிழிவு நோயாளி ஒருவருக்கு குருதி அழுத்தம் 130/80 mmhg இலும்விட குறைவாக பேணப்படவேண்டும். வருடத்துக்கு ஒருமுறையாவது கொழுப்பின் அளவைப்பரிசோதித்துக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
இதயநோய்களை, இதயநோயாளியின் குணங்குறிகள், பூரணநோய் வரலாறு, பரீட்சித்தல், ECGஇருதயவரைபுப்பட்டி, குருதிப்பரிசோதனை, எக்கோ பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். அவ்வாறு கண்டறியப்பட்டதும் இருதயநோய் நிபுணரின் ஆலோசனையுடன் அங்சியாகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அடைப்பின் அமைவிடம், அடைப்புவீதம் என்பன இனங்காணப்பட்டு சிகிச்சை முறை தீர்மானிக்கப்படும்.
நீரிழிவு நோயாளிகளில் ஏற்படும் இதய நோய்களுக்கான சிகிச்சை
சாதாரண இருதய நோயாளிகளை போலவே இவர்கள் அஞ்சியோ, பினாஸ்ரி அல்லது இருதய அறுவைச் சிகிச்சைக்கு (CABa) பரிந்துரைக்கப்படுவார்கள். இருப்பினும் அண்மைய ஆய்வு முடிவுகளின்படி எஞ்சியோ பிளாஸ்ரி முறையானது நீரிழிவு நோயற்ற இதய நோயாளிகளைவிட குறைந்தளவிலான பெறுபேறுகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. அத்துடன் இருதய அறுவைச் சிகிச்சையின் பின்னான சிக்கல்களும் நீரிழிவு அற்ற நோயாளியவிட அதிகமாகக் காணப்ப டும் விசேடமாக இவர்களில் வாழ்க்கை முறைக் கட்டுப்பாடும் குருதியில் குளுக்கோசின் அளவைத் தொடர்ந்து சீரான அளவில் கட்டுப்படுத்தலும் மீள இருதயநோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைக் குறைக்கும் மருந்துகள்
- குருதி உறைவதைக் குறைக்கும் மருந்துகள்
- கொழுப்புப்படிவுகளைக் குறைக்கும் மருந்துகள்
- குருதி அழுத்தத்தைச் சீராக்கும் மருந்துகள்
- இருதயத் துடிப்பைக் குறைக்கும் மருந்துகள்
- நீரிழிவு நோய்க்கான மருந்துகள் என்பன அடங்கும்.
நீரிழிவு நோயாளிகளில் விசேடமாக குருதி உறைவதைக் குறைக்கும் மருந்துகளும் கொழுப்புப் படிவுகளைக் குறைக்கும் மருந்துகளும் குருதியில் கொலஸ்ரோலின் அளவு கட்டுப்பாடாக இருப்பினும் கூட வழங்கப்படுதல், இருதய நோய்க்கான வாய்ப்புக்களை 10 ஆண்டுகளில் 10 வீதத்த்துக்கும் அதிகமாக இருதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு வாழ்க்கை முறையில் மாற்றங்கள் அஸ்பிரின் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
மருத்துவர் பூ.லக்ஸ்மன்
இருதயநோய் மருத்துவ நிபுணர்,
யாழ்.போதனா மருத்துவமனை