நீரிழிவு நடைபயணம்
பன்னாட்டு நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நீரிழிவுச்சிகிச்சை நிலையம், மக்கள் மத்தியில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒழுங்கு செய்துள்ள “நீரிழிவு நடை பயணம்” எதிர் வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு யாழ். போதனா மருத்துவமனை முன்றலில் இருந்து ஆரம்பமாகும். இந்தவிழிப்புணர்வு நடைபயணத்தில் அனைவரையும் கலந் துகொள்ளுமாறு யாழ்.போதனா மருத்துவமனை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Posted in செய்திகள்