நோயாளியைத் தட்டி எழுப்புதல்
வீட்டில் குளுக்கோ மீற்றர் (Glucometer) இருக்குமாயின் குருதியில் குளுக்கோசின் அளவை அறிந்துகொள்ள வேண்டும். குருதியில் குளுக்கோசின் அளவு குறைந்த நிலையில் காணப்படுமாயின், நோயாளி குடிக்கக்கூடிய நிலையில் இருப்பின் நோயாளிக்கு பானம் அல்லது குளுக்கோசை கரைத்து மெதுவாக பருகக் கொடுக்கலாம். உட்சொண்டு, நாக்கின் அடிப்பகுதி போன்றவை அதிக உறிஞ்சும் தன்மை உடையவை என்பதால், இனிப்பு அதிகம் உள்ள உணவைப் பாணியாகப் பசை போல் செய்து அப்பகுதிகளில் தடவுதல் வேண்டும். நோயாளியின் நிலைமை சரியாக அமையாதவிடத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (Ambulance) அறிவிக்க வேண்டும்.
வீட்டிலோ அல்லது சிகிச்சையின் பின்போ நோயாளி சாதாரண நிலைக்கு வந்ததன் பிற்பாடு, அவருக்குத் தேவையான மாச்சத்துக் கலந்த உணவைக் கொடுக்க வேண்டும். இதனூடே நோயாளியின் குருதியில் குளுக்கோசின் அளவை நீண்ட நேரம் சாதாரண அளவில் பேண முடியும்.
நீரிழிவு நோயாளி ஒருவர் குருதியில் குளுக்கோசின் அளவை நீண்ட காலம் அதிகரித்த நிலையில் வைத்திருப்பாராயின் பிற்கால விளைவுகள் ஆபத்தானவையாக அமையும். குறிப்பாக, ‘கண், சிறுநீரகம், கால்களில் மாறாத புண்கள் ஏற்படுதல், இருதயம், நரம்புகள் பாதிப்படைந்து அவயங்களை இழக்க வேண்டிய நிலை மற்றும் நிரந்தரமான பாதிப்புக்கள்’ என அத்தனை ஆபத்தான விளைவுகளும் ஏற்படும்.
நீரிழிவு நோயாளி ஒருவர் குருதியில் குளுக்கோசின் அள வைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும்போது அவரின் கண் பார்வையில் பெரியளவான மாற்றம் ஏற்படாது. எனினும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளி ஒருவருக்கு குருதியில் குளுக்கோசின் அளவு கூடிக் குறை யும்போது கண்பார்வையில் மாற்றங்கள் ஏற்பட வாய்புண்டு.
நீரிழிவு நோயாளிக்கு கண்களில் ஏற்படும் பாதிப்பு
- விழிமிகை அழுத்தம் (Glucoma) – கண் உள் விழி அமுக்கம், கண் நரம்புப் பாதிப்பு இவையிரண்டும் இருக்கும் பட்சத்தில் விழிமிகை அழுத் தம் ஏற்படும். இந்த நோய் அறிகுறிக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து நோயாளி பார்வையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
- கண் பூப்படித்தல் (cataract)
- குருதிக் கலப்புடைப்பு (Aneurysm) கண்விழித் திரையில் இருக்கும் மயிர்த்துளைக்குருதிக் குழாய்கள் வீங்கிப் பருத்து பலூனைப் போல பொங்கி இருத்தல்.
- விழித்திரை பொட்டுச் சிதைவு (Macular Degeneration) ஒளிக்கதிர்கள் கண்ணின்விழித் திரை பகுதியில் குவியும் இடத்தை விழித்திரைப் பொட்டு எனக் குறிப்பிடுவர். இதை மஞ்சலிடம் எனவும் சுட்டுவர். இப்பகுதி பாதிப்படையும் போது நோயாளி பார்வையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கண் பாதிப்புகள், பார்வையிழப்பைத் தவிர்த்தல்
- குருதியில் குளுக்கோசின் அளவு மட்டத்தை தொடர்ச்சியாக சாதாரண நிலையில் வைத்திருப்ப தற்கு முயற்சித்தல் வேண்டும்.
- குருதியில் ‘எச்.பி.ஏ.எல்.சி’ வீதத்தை மருத்துவ ஆலோச னைக்கேற்ப குறிப்பிட்ட மட்டத்தில் வைத்திருக்க வேண்டும். உணவு, மருந்து, உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளையும் பெற்று எச்.பி.ஏ.எல்.சி வீதத்தை அதிகரிக்காது பார்த்துக்கொள்ள வேண்டும்.
- புகைப்பிடிப்பதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.
- குருதியில் கொலஸ்ரோலின் அளவை சீராகப் பேணுதல் வேண்டும். முக்கியமாக கொலஸ்ரோலின் ‘எல்.டி.எல்’, முக்கிளிசரைட்டின் அளவைச் சீராகப் பேணுதல். இக் கொழுப்பு வகை அதிகரித்து காணப்படின் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
- நீரிழிவு நோயாளியின் குருதி அமுக்கத்தை 130/80 mmHg க்கு அதிகரிக்காது பேணுவது அவசியமாகும். உணவுக் கட் டுப்பாடு, உடற்பயிற்சி என்பவற்றோடு மருத்துவ ஆலோச னைப்படி மருந்துகளையும் உள்ளெடுக்க வேண்டும்.
சிறுநீரகப் பாதிப்பைக் குறைத்தல்
- புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பின் உடனடியாக நிறுத்த வேண்டும்.
- குருதியில் ‘எச்.பி.ஏ.எல்.சி’ வீதத்தை குறிப்பிட்ட மட்டத்தில் மருத்துவ ஆலோசனைப்படிபேணவேண்டும். இளவயதினர் “எச்.பி.ஏ.எல்.சி’ அளவை 7 வீதத்துக்கு அண்மையாக வைத் திருக்க வேண்டும்.
- நீரிழிவு நோயாளியின் குருதி அமுக்கத்தை 130/80mmHg க்கு குறைவாக வைத்திருத்தல் வேண்டும்.
- மருந்துகளை ஒழங்காக உள்ளெடுக்க வேண்டும்.
- ஆரம்ப நிலைச் சிறுநீராகப் பாதிப்புக்களை கண்டறிவதற்கு, நுண்ணிய கருப்புரத சிறுநீர்ப் பரிசோதனை செய்தல் அவசியமாகும். குருதியில் ‘சீறம் கிரியேட்டினின்’ பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிந்து கொள்ள முடியும்.
- மிகச் சிறந்த முறையில் குருதியில் உள்ள குளுக்கோசின்அளவையும், குருதி அழுத்தத்தையும் பேணுவதன் மூலம் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க அல்லது பிற்போடமுடியும்.
அதிக மாச்சத்துள்ள உணவுகள்
நாம் உண்ணும் உணவில் மாப்பொருள் பெரும்பகுதியாக உள்ளது. உதாரணமாக, ‘சோறு, பிட்டு, இட்லி, பரோட்டா, அப்பம், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு’ போன்றவை எளிதில் சமிபாடு அடைந்து குருதியில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கின்றன. இவை அதிக கிளைசிமிக்கை கொண்டிருக்கும். இவற்றை நீரிழிவு நோயாளிகள் அளவுடன் உண்ணுதல் நன்று.
மிதமான மாச்சத்துள்ள உணவுகள்
குறைந்த கிளைசிமிக் கொண்ட உணவு வகைகள் மிதமான மாச்சத்துள்ள உணவுகளாகக் குறிப்பிடப்படுகின்றன. “காய்கறிகள், கீரை வகைகள், தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பவகைகள், கடலை போன்ற உணவு வகைகளை உள்ளெடுப்பதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் குருதியில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும். இவை கொண்டுள்ள அதிக நார்ச்சத்துக் காரணமாகவே இது நிகழ்கி றது.
நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்து என்பது உணவால் சமிபாடு அடையமுடியாத ஒரு வகையான மாச்சத்து. மனிதக்கழிவின் மூலம் இவை வெளியேற்றப்படுகின்றன. முதலில் இவை உடலுக்குச் சக்தியைத் தராதவை என்றே கருதப்பட்டது. ஆனாலும் மருத்துவ ஆய் வுகளின் அடிப்படையில் இவை எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளமை கண்டிறியப்பட்டுள்ளது. அவை வருமாறு,
- குருதியில் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
- குருதியில் குளுக்கோஸின் அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கும்.
- வயிறு நிறைவுத் தன்மையை அளிக்கிறது.
- மிக இலகுவான குடல் இயக்கத்துக்கு உதவுகிறது.
- உடல் நிறையைக் குறைப்பதற்கு உதவுகிறது.
‘முழுத்தானியங்கள் கொண்டு (தீட்டப்படாத அரிசியல்) செய்யப்பட்ட உணவுகள்,தவிடு நீக்கப்படாத கோதுமை, அரிசிமாவில் செய்யப்பட்ட உணவுகள் (ஆட்டாமா),நவதானிய உண வுகள், பயறு, கடலை, கெளப்பி, உழுந்து, நார்ச்சத்து அதிகமுள்ள பழங்களான கொய்யா, திராட்சை,நெல்லி, நாவல், பச்சைக் காய்கறிகள் போன்றவை நார்ச்சத்து உணவு வகையினுள் உள்ளடங்கு கின்றன.
இந்த நார்ச்சத்தானது எமது குடலில் இருந்து மெதுமெதுவாக குளுக்கோஸை குருதியில் கலப்பதற்கு உத வுகின்றது. இதனால் சடுதியாக குருதி யில் குளுக்கோஸின் அளவு உயர்வதைத் தடுக்கிறது. எனவே நாம் உண்ணும் உணவில் ஒரு பகுதிநார்ச்சத்து உள்ள உணவாக இருக்க வேண்டும். மூன்று வேளையும் குறைந்தது 100 கிராம் அளவுள்ள நார்ச்சத்து உணவை உண்பது சிறப் பானது.
உள்ளெடுக்க வேண்டிய மாப்பொருள் அளவு
மாப்பொருள் உண்ணும் அளவு ஒரு வருடைய ஊட்டச்சத்துத் தகுதியைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, ‘குறைந்த நிறை, சராசரி நிறை, அதிக நிறை, பருமனான நிறை,ஒருவரதுவயது, வேலையின் அளவு, பாலினம் மற்றும் உள்ளெடுக்கும் மருந்துகள் போன்றவற்றில் அது தங்கியுள்ளது. அத்துடன் ஒருவருக்குத் தேவையான கலோரி உணவில் 60 தொடக்கம் 65 வீதம் வரை மாப்பொருள் இருக்க வேண்டும்.
தடையின்றி எடுக்கக்கூடிய உணவுகள்
குருதியில் குளுக்கோஸின் அளவை அதிகப்படுத்தாத உணவுகளை எடுக்கவேண்டும். சீனி இல்லா தேநீர், எலுமிச்சம்பழச்சாறு, தெளிந்த சூப் வகைகள், பச்சைக்காய்கறிகள், கீரைவகைகள் மற்றும் குறைந்த மாச்சத்தும் குறைந்த கலோரியும் உள்ள உணவுகள் போன்றவற்றை உள்ளெடுப்பதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான நிலையில் வாழலாம்.
ச.சுதாகரன்