கர்ப்பகாலத்தில் பெண்கள் இருவேறு நோய் நிலமைகளை எதிர்நோக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.அவை நீரிழிவுநோய் மற்றும் உயர் குருதி அழுத்தம் என்ற விதமாக அமைந்துள்ளன. பெரும்பாலான கர்ப்பிணித்தாய்மார்கள் தாங்கள் கர்ப்பம் தரித்து 24 வாரத்திற்கும் 28 வாரத்திற்குமிடையிலேயே குளுக்கோஸ் அளவு மட்டத்தினை குருதியில் அளவிட வேண்டும் இதனூடே இந்த நோய் நிலமைகளைக் கண்டறிந்து கொள்ளமுடியும். இவ்வகையில் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிப்படையும் பெண்களின் சதவீதம் அதிகரித்துவருகிறது.
கர்ப்பகால நீரிழிவு நோய்க்குரிய காரணங்கள்
- அளவுக்கதிகமான உடல்நிறை.
- பெற்றோருக்கு வகை-2 (Type 2)நீரிழிவுநோய் இருத்தல்.
கடந்த காலத்தில் பி.சி.ஓ.எஸ் (PCOS Polycystic Ovary Syndrome) நோய் அறிகுறி காணப்பட்ட தன்மை. - கர்ப்பகாலத்துக்கு முன்பாகவே நீரிழிவுநோயைக் கொண்டிருத்தல்.
- இன்சுலின் ஓமோன் சுரத்தலில் ஏற்படும் பாதிப்புக்கள்
- முதலாவது கர்ப்ப காலத்தின் போது நீரிழிவுநோய் இருத்தல்.
- முதல் பிரசவத்தின் போது அதிகூடிய நிறையுடைய குழந்தையைப் பிரசவித்தல்.
நீரிழிவுநோய் மற்றும் கருவிலுள்ள குழந்தை
- நோய் நிலை இனங்கண்டறியப்பட்டது முதல் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பதில் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.
- கர்ப்பிணிப் பெண்ணின் குருதியில் குளுக்கோஸ் மட்டம் அதிகரிக்கும்போது கருவிலும் குளுக்கோஸ் மட்டம் அதிகரிக்கிறது. இதன் போது கருவானது சாதாரண வளர்ச்சியைக் காட்டிலும் அதிகரித்த வளர்ச்சியைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புண்டு.
- குழந்தை பிறந்தவுடன் குருதியில் குளுக்கோஸ் மட்டம் திடீரென குறையும் வாய்ப்பு (HYPO GLYCEMIA) அதிகரிக்கும்.
- குழந்தையின் நிறை அசாதாரணமாகக் காணப்படல்.
- சாதாரணமாக கர்ப்பிணிப் பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.
- கருச்சிதைவுகள் ஏற்படலாம்.
நீரிழிவு நோயால் கர்ப்பிணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
- அறுவைச் சிகிச்சை மூல மான (Cesareams டிசைவா) பிரசவத்தினைப் பெரும்பாலும் எதிர்நோக்க வேண்டியிருக்கும் ஏனெனில், குழந்தையின் அளவு பெரிதாக இருப்பு தால் பிரசவத்தில் சிரமம் ஏற்படும்.
- கர்ப்பகாலத்துக்கு பின்பாக தாய் வகை -2 (Type 2) நீரிழிவு நோயினைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால் பிரசவ காலத்தின் பின்பு குளுக்கோஸ் மட்டம் குருதியில் குறைந்து விடும்.
- குழந்தையை உரிய காலத்துக்கு முன்பாக பிரச விக்க வேண்டிய நிலமை ஏற்படலாம்.
கர்ப்பகால நீரிழிவு நோய்க்குரிய அறிகுறிகள்
குறித்து அறியக் கூடிய அறிகுறிகள் என்று சொல்வதற்கில்லை. கர்ப்பகால நீரிழிவுநோய்க்குரிய அறிகுறியை சோதனை மூலமே கண்டறிய வேண்டும். அடிக்கடி சிறுநீர்கழித்தல், அடிக்கடிபசியெடுத்தல் போன்ற அரிதான அறிகுறிகளாக இதனைக்கண்டறிந்து கொள்ளமுடியும்.
நோய் நிலையைக் கண்டறிவதற்கான சோதனைகள்
- Glucose tolrance test-சீன சேர்ந்த உணவுவகைகளை உண்டு ஓரிரு மனத்தியால காலத்தின் பின்பாக குருதிமாதிரியை எடுத்து மேற்கொள்ளப்ப டும் சோதனையாக இது விளங்குகிறது.
- OGT Orol Glucose challege test – இனிப்புள்ள பானத்தைக் குடித்து ஒன்று இரண்டு அல்லது மூன்று மணித்தியால காலத்தின் பின்பாக மேற் கொள்ளப்படும் பரிசோதனையாக இது விளங்குகிறது. குருதியில் குளுக்கோஸ் மட்டம் 140 mg ஆக அல்லது அதற்கு மேல் இருப்பின் நீரி ழிவு உண்டு என்பதனை இனங்கண்டுகொள்ளாம்.
கர்ப்பகால நீரிழிவுக்குரிய சிகிச்சை முறைகள்
- சிகிச்சை பெறவேண்டியது கட்டாய தேவைப்பாடு
- குறித்த உணவுக்கட்டுப்பாட்டுநடைமுறைகளைத் தொடர்ச்சியாகப் பேணுதல்.
- நாளாந்த உடற்பயிற்சி செயல்நிலை குருதியில் குளுக்கோஸ் மட்டத்தினைச் சரியாகப் பேணும்.
- ஒருநாளில் ஆகக்கூடியது 4 தடவைகளேனும் குருதியில் குளுக்கோஸ் அளவினை வீட்டிலேயே அள வீடு செய்துகொள்ளும் நடைமுறை சிறந்தது. உணவு உட்கொண்டு 2 மணித்தியாலகாலத்தின் பின்பாக உள்ளெடுத்த உணவினையும், குளுக் கோஸ் மட்டத்தையும் அன்றாடம் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை மருத்துவ ஆலோசனை பெறும் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
- உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் பயன்தராதவிடத்து, இன்சுலின் ஊசிமருந் தினை பெற்றுக் கொள்வதற்கான பயிற்சியினை உரிய இடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தச்சிகிச்சையை மருத்துவ ஆலோசனைப்படி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
- சில மருத்துவர்கள் வாய் மூலமாக மாத்திரைகளை உள்ளெடுக்கும்(Oral) படியும் ஆலோசனை வழங் குவர். உதாரணம், மெற்போமின் (Metformin)
- தேவைக்கேற்ப இன்சுலின் (Insulin) ஊசிமருந்து அளவினை மருத்துவ ஆலோசனையின் கீழ்மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.
விசேட உணவுக்கட்டுப்பாட்டு முறை
- இயன்றளவு இனிப்புப் பண்டங்களைத்தவிர்த்தல்.
- குறித்த அட்டவணை தயாரித்து அதன்படி உணவினை உட்கொள்ளல்.
- போசாக்கானவெவ்வேறுஉணவுகளை உட்கொள்ளல்
- அதிக நார்ச்சத்துள்ள உணவுவகைகள் மற்றும் பழங்கள்,மரக்கறிகளை உடகொள்ளல்.
- தானிய உணவுவகைகளை அதிகளவில் உள்ளெ டுத்தல்.உதாரணம், பயறு, கடலை
கர்ப்பகால நீரிழிவு நோயினை வருமுன் காத்தல்
கர்ப்பகால நீரிழிவு நோயினை வருமுன்தடுப்பது என்பது எளிதான காரியமல்ல. எனினும் எமது உடல் நிறையினை சரியாகப் பேணுவதன் மூலமும், சிறந்த உணவுக்கட்டுப்பாட்டு முறையினைப் பேணுவதன் மூலமும், சிறந்த உடற்பயிற்சிகள் மூலமும் இயன்றளவு தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
U.டிஜானி
உள்ளக மருந்தாளர்.
யாழ் போதனா வைத்தியசாலை