“லிவோத்றொக்ஸின்” Levothyroxine
பயன்
தைரொயிட் ஓமோன் சுரப்பைக் கூட்டுவதற்கு இந்த மருந்தைப் பாவிக்கலாம்.
பாவனை
இந்த மருந்தை தினமும் வெறு வயிற்றில் உள்ளெடுத்தல் வேண்டும். குறிப்பாக காலை உணவு அல்லது தேநீர்வேளைக்கு அரை அல்லது ஒருமணத்தியாலங்களுக்கு முன்பாக உள்ளெடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவும். ஒரு குவளை தண்ணிருடன் மருந்தை உள்ளெடுக்கவும்.
இந்த மருந்தை உள்ளெடுக்கும் 2 மணத்தியாலகாலப் பகுதிக்கு வேறெந்த மருந்துகளையும் உள்ளெடுக்கக்கூடாது. குறிப்பாக, கல்சியம், இரும்பு அலுமினியம் கொண்டுள்ள அமிலநீக்கிகள், விற்றமின்குளிசைகளை உள்ளெடுப்பதைத் தவிர்க்கவும்.
மருத்துவ ஆலோசனைப்படி குறிப்பிட்டமாதங்களுக்கு ஒருதடவை குருதிப் பரிசோதனையை தொடர்ச்சியாக மேற்கொள்ளுதல் நன்று. இந்த மருந்தின் அனுகூலத்தைப் பெறுவதற்கு தொடர்ச்சியாக நேரம் தவறாமல் மருந்தை எடுக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துப் பாவனையை நிறுத்த வேண்டாம்.
வேறு நோய்குறித்து மருத்துவரை நாடிச்செல்வீர்களாயின், இந்த மருந்துப்பாவனை குறித்து மருத்துவருக்கு தெரியப்படுத்தவும். இந்த மருந்தை மென்று விழுங்க முடியாத பிள்ளைகளாயின், மருந்தை பொடியாக்கி 1 அல்லது இரண்டு தேக்கரண்டி (5 தொடக்கம் 10ml) தண்ணிர் விட்டு கலக்கிக் கொடுக்கவும்.
பக்க விளைவுகள்
இவ்வகை மருந்துப் பாவனையால் இதுவரையான காலப்பகுதியில் எந்தவிதமான அபாயகரமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. கூடுதலானவியர்வை சுரத்தல், நடுக்கம், வெப்பத்துக்கு உணர்திறன், நித்திரை அல்லது மன ரீதியான குழப்பங்கள் களைப்பு சுவாசிக்கக்கஸ்டப்படும்நிலை, தசைப்பலவீனம் இருப்பின் மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.
களஞ்சியப்படுத்தல்
சூரியஒளி படாதவாறு 25 பாகை செல்சியஸ் வெப்பநி லையிலும், சிறுவர் கைகளுக்கு எட்டாதவாறும் மருந்துச்சிட்டையுடன் மருந்து சேகரித்து வைத்துள்ள போத்தலை பாதுகாத்து வைத்துக்கொள்ளவும் முறையான மருந்துப்பாவனை மூலம்தைரொயிட்பிரச்சினைகளில் இருந்துவிடுபடுவோம். உடல் ஆரோக்கியம்பெறுவோம்.
“பிறீட்ரிசோலோன்” Prednisolone
பயன்
என்புவலி,தோல்நோய்கள் ஆஸ்துமா நிலை போன்ற நோய்நிலை அறிகுறிகளுக்கு இவை பயன்படுத்தப் படுகின்றன.
பாவனை
இந்த மருந்தை சாப்பாட்டுக்குப்பின்னர்தண்ணீருடன் எடுக்க வேண்டும் அதி உச்சபலனைப் பெறுவதற்கு நேரந்தவறாது தொடர்ச்சியாக மருந்தை உள்ளெடுக்க வேண்டும். நீண்டகாலமாக இந்த மருந்தின் பாவனை உடையவராக இருப்பின்வைத்திய ஆலோசனைப்படி குறித்த கால இடைவெளியில் குருதிப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் குருதிக் குளுக்கோஸ் அதிகரிப்பு குருதி இலிப்பிட்டின் அதிகரிப்பு முகம் வீங்கிய நிலை என்புகளின் தேய்மானம் உடல்நிறை அதிகரிப்பு போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும். தடுப்பூசிபோடும் சந்தர்ப்பத்தில் இந்த மருந்துப் பாவனையை மேற்கொள்பவராயின் அது பற்றி மருத்துவருக்குத் தெரியப்படுத்துங்கள்.
சின்னமுத்து அல்லது கொப்புளப்புண்கள் உடையவருடன் நெருக்கமாக பழகுவதைத் தவிர்க்கவும் அவ்வாறு நடந்திருப்பின் அது குறித்து மருத்துவருக்கு அறியத்தாருங்கள்.
வேறு ஏதாவதொரு நோய்க்கு வைத்திய ஆலோசனை பெறச் செல்லும் போது இந்த மருந்து பாவிப்பது குறித்து தெரியப்படுத்துங்கள் மருந்துச்சிட்டையுடன் உரிய கொள்கலனை சூரியஒளி படாதவாறும் சிறுவர்களின் கைகளுக்கு எட்டாதவாறும் வைத்து பயன்படுத்துதல் நன்று.
மருந்தை பாவிக்கத்தவறின் செய்யவேண்டியவை
இவ்வகை மருந்தை ஒருமுறை பாவிக்கத் தவறின் ஞாபகம் வரும்போது அதனை உள்ளெடுத்துக்கொள்ளவும் அடுத்த தடவை வழமையான நேரத்துக்கு மருந்தை உள்ளெடுத்துக் கொள்ளவும். ஆனால் இரண்டு முறைபாவிக்கும் மருந்தை ஒரே தடவையில் உள்ளெடுப்பதை தவிர்த்துக் கொள்ளவும் மருந்து உள்ளெடுத்து மூன்று நாள்களுக்கு மேலாயின் அது தொடர்பில் மருத்துவரின் ஆலோசனையை மீண்டும் பெறவும்.
பக்கவிளைவும் உடனடி வைத்திய ஆலோசனையும்
வலிப்பு, நெஞ்சுநோ, தாங்க முடியா தளவுவயிற்றுவலி, வயிற்று வீக்கம் போன்ற நோயின் குணங்குறிகள் ஏற்படின் உடனடியாகவே மருத்துவரை நாடி சிகிச்சை பெறவும் இந்த மருந்தை வலியுள்ள போது மட்டும் பாவிப்பதை நிறுத்துங்கள் மருத்துவ ஆலோசனைப் படி பொருத்தமான வேளையில் உரிய அளவு மருந்தை உள்ளெடுத்தல் சிறப்பு. அதேபோன்று பாவிக்கும் மருந்தின் அளவு குறித்த கால இடைவெளியில் குறைக்கப்படுவதன்மூலம் பக்கவிளைவுகள் குறைக்கப்படுவதோடு உடலின் நோய்த்தடுப்பாற்றல் சரியான விதத்தில் நடைபெற உதவுகிறது. நீண்டகாலமாக மருந்தைப் பாவித்து அதனைச் சடுதியாக நிறுத்தும் போது குருதி அழுத்தத்தாழ்வு காய்ச்சல் தசை வலி மூட்டு வலி நாசியழர்ச்சி தோல்அரிப்பு போன்ற நோய்கள் ஏற்படலாம்.
கு.நிஸாந்தி
உள்ளக மருந்தக பயிலுநர்
யாழ் போதனாவைத்திய சாலை
யாழ்ப்பாணம்