கேள்வி: எனது வயது 56 ஆகும். நான் மெற்போமின் (Metformin) 500 மில்லி கிராமம் மருந்தை கடந்த 5 வருடங்களாக நாளொன்றுக்கு 3 தட வைகள் பயன்படுத்திவருகிறேன். அண்மையில் மேற்கொள்ளப்படகுருதிப் பரிசோதனைகளின் படி எனது நீரிழிவுநோயானது கட்டுப்பாடில் இருப்பதாக குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். எனது உறவினர்கள் சிலர் மெற்போமின்மருந்தைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுமெனக்கூறு கின்றனர். இது பற்றி விளக்கிக் கூறவும்.
பதில் : இது மிகவும் அவசியமானதொரு வினாவாகும். எமது மக்களிடையே நீரிழிவு நோய் தொடர்பாகவுள்ள பிழையான எண்ணக் கருக்களில் இது பிரதானமானதாகும். உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதற்தர மருந்து மெற்போமின் ஆகும். இந்த மருந்தானது நீரிழிவு நோயைச்சிறந்த முறையில் கட்டுப்படுத்துவதோடு அதனால் ஏற்படுகின்ற நீண்டகாலப் பிரச்சினைகளையும் குறைக்கிறது.
இம்மருந்தானது நீரிழிவு நோய்கட்டுப்பாடின்றிப்போகும்போது ஏற்படுகின்ற சிறுநீரகப் பாதிப்பை உண்மையில் குறைக்கின்றது. நீரிழிவு நோயாளியொருவருக்கு குறிப்பிட்ட காலத்துக்கொருமுறை குருதிப் பரிசோதனை மேற்கொண்டு சிறுநீரகப் பாதிப்பு உள்ளதா இல்லையா எனக் கண்டறியப்படுவது வழமையாகும். இவ்வாறு சிறுநீரகப் பாதிப்பானது குறிப்பிட்ட அளவுக்கு மேலிருக்கும்போதுமாத்திரமே மருத்துவரானவர் மெற்போமின் மருந்தைக் குறைக்கவோ, நிறுத்தவோ வேண்டியேற்படுகிறது. எனவே மெற்போமின் பற்றிய தப்பபிப்பிராயத்தை கைவிடுவது மிகவும் அவசியமானதாகும்.
கேள்வி: எனது மகனின் வயது 16 ஆகும். அவரது உடல் நிறையானது கூடுதலாக இருப்பதோடு கழுத்துப்பகுதியிலும் கறுப்புநிறமான படை போன்று இருக்கிறது எனக்கும் கணவருக்கும் நீரிழிவு நோய் இருக்கிறது எனது மகனின் நிலை தொடர்பாக ஆலோசனை வழங்கவும்?
பதில்: கழுத்துப் பகுதியில் கறுப்பு நிறமான படையானது காணப்படுவதை Acanthosis nigricans என்று கூறுவார்கள். இது உடலில் இன்சுலினுக்கு எதிர்ப்பு நிலை (nsulin resistance) ஏற்படுவதன் அறிகுறியாகும் தவறான உணவு மற்றும் அப்பியாசமற்ற வாழ்க்கைமுறை என்பவற்றால் உடற்பருமன் அதிகரித்துச் செல்லும்போது இவ்வாறான நிலமை ஏற்படுகிறது. இவ்வாறானவர்களுக்கு நீரிழிவுநோய் மற்றும்மெட்டாபோலிக்சின்ட்ரோம் (Metabolic Syndrome) எனப்படுகின்ற நோய்நிலமையும் ஏற்பட நேரிடுகிறது. பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருக்கும்போது அவர்களின் குழந்தைக்கு அந்தநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். எனவே, உங்கள் மகனானவர் இன்று முதல் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பவற்றை மேற் கொண்டு உடற்பருமனைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதைவிடவைத்திய ஆலோசனையைப்பெற்று மேலதிக பரிசோதனைகளை(குருதியிலுள்ள குளுக்கோஸின் அளவு குருதி அமுக்கம் கொழுப்பின் அளவு ஹோர்மோன்கள்) மேற்கொள்வதும் அவசியமானதாகும்.
கேள்வி : எனது வயது 32 ஆகும். எனக்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு 5 வருடங்கள் ஆகின்றன. நான் மெற்போமின் குளிசையை இந்த நோய்க்காகப் பயன்படுத்தி வருகின்றேன். எனது குருதிப் பரிசோதனை முடிவுகளின் படி நீரிழிவுவானது கட்டுப்பாட்டில் இல்லாது இருப்பதாக குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். எனக்கு சில காலமாக பாலியல் உறவில் நாட்டம் குறைந்து காணப்படுவதுடன் எனது ஆணுறுப்பானது உடலுறவின் போது விறைப்படைவதிலும் பிரச்சினையுள்ளது. இந்தப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக மருத்துவ ஆலோசனை வழங்கவும்.
பதில் : நீரிழிவு நோயானது நீண்ட காலமாகக் கட்டுப்பாட்டில் இல்லாது விடும் போது நீங்கள் குறிப்பிட்டதைப் போன்றே பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. நீரிழிவு கட்டுப்பாட்டினுள் இல்லாமல் இருக்கும் போது நரம்புத் தொகுதி மற்றும் குருதிச்சுற்றோட்தம்தொகுதி என்பன பாதிப்படைவதனால் ஆண்குறி விறைப்படையாத்தன்மை (Electiledy sfunction) ஏற்ப்டுகின்றது. எனவே முதலாவதாக ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் மருந்துகளைப் கிரமமாக உள்ளெடுத்தல் என்பனவற்றின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
சிலமருந்து வகைகள் மற்றும் தவறான பழக்க வழக்கங்களும் (புகைப்பிடித்தல், மதுபானப்பாவனை, மற்றும் போதைப்பொருள் பாவனை) இதற்குக் காரணமாக அமையலாம். இதேபோல் வேறுசில உடலியல் நோய்களும், ஹோர்மோன் பிரச்சினைகளும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். உளரீதியான தாக்கங்கள் குறிப்பாக அதிக மன அழுத்தம் (Stress) மற்றும் வேலைப்பழு போன்றனவும் இந்த பிரச்சினை ஏற்படக் காரணமாக அமையலாம்.
எனவே நீங்கள் வைத்திய ஆலோசனைப்படி தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும். உங்களது நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருத்தலே எல்லாவற்றிலும் மிக இன்றியமையாததாகும். உங்கள் பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிந்த பின்னர் வைத்திய ஆலோசனைப்படி தேவையான மருந்துகளை உள்ளெடுப்பதன் மூலம் (தேவையேற்படின்) உங்களது பிரச்சினையில் இருந்து குணமடைய முடியும்.
கேள்வி – எனது வயது 62 ஆகும். எனக்கு கடந்த 16 வருடங்களாக நீரிழிவு நோய் உள்ளது. எனது நீரிழிவு நோய்க்கு மெற்போமின், கிளிக்கிளசயிட் மற்றும் சிற்றகிளிப்ரின் ஆகிய மருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றேன். எனது குளுக்கோஸின் அளவு குருதியில் அதிகமாக இருப்பதாக குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இன்சுலினை ஆரம்பிப்பதே சிறந்தது அவர் கூறுகின்றார். இது பற்றி விளக்கிக் கூறவும்?
பதில் – நீரிழிவு ( சலரோக) நோயைக் கட்டுப்பாடட்டினுள் வைத்திருப்பதற்கு சிறந்த உணவுக் கட்டுப்பாடும் மருந்துகளைக் கிரமமான முறையில் உள்ளேடுத்தலும் அவசியமாகும். உங்களைப் போன்ற நீண்டகாலமாக நீரிழிவுநோயுள்ளவர்களுக்கு காலப்போக்கில் குளிசை மருந்துகள் செயற்படாத நிலை ( Oral Hypogly caemic drugs failure) ஏற்பட நேரிடுகின்றது.. எனவே அவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்சுலின் மருந்தையே பயன்படுத்த வேண்டியேற்படுகின்றது. எனவே உங்களின் குடும்ப வைத்தியரின் ஆலோசனைப் படி இன்சுலின் மருந்தை ஆரம்பிப்பதே சிறந்ததாகும். இவ்வாறு இன்சுலின் மருந்தை ஆரம்பிக்கும்போது நாளொன்றுக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துகின்ற இன்சுலினனை உங்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி பயன்படுத்த முடியும். இன்சுலின் மருந்தை பயன்படுத்துகின்ற பற்றிய விளக்கங்களையும் இது தொடர்பான மேலதிக விளக்கங்களையும் அறிவுரைகளையும் உங்கள் வைத்தியரிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும்.மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.
கேள்வி – எனது வயது28 ஆகும். எனக்கு நீரிழிவுநோய் உள்ளமை இரண்டு வருடங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது. எனக்குத் திருமணமாகி 6 மாதங்கள் கழிந்துள்ளன. நான் மெற்போமின் கிளிகோசைட் ஆகிய குளிசைகளைப் பயன்படுத்தி வருகின்றேன். எனது அண்மைய FBS அளவு 21OMg/d ஆகவும், HBA1 ஆனது 8.2 ஆகவும் உள்ளது. எனது நீரிழிவு நோயானது கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னரே கர்ப்பம் வேண்டு மென்று குடும்ப மருத்துவர் கூறியிருந்தார். இது பற்றிய விளக்கத்தைக் கூறவும்?
பதில் – கர்ப்பம் தரிக்க விரும்புகின்ற பெண்ணொருவரின் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவானது மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் அதிகமாக இருப்பதை இரண்டு பரிசோதனை முடிவுகளும் (FBS, HbA1) எடுத்துக்காட்டுகின்றன. ஒருவரது நீரிழிவு நோயின் கட்டுப்பாட்டை இறுதி மூன்றுமாத சராசரி அளவு எடுத்துக்காட்டுகின்ற சிறந்த பரிசோதனையானது HbA1 ஆகும். கர்ப்பம் தரிக்க விரும்புகின்ற பெண்ணொருவரின் HbAic ஆனது 6.5 இற்கும்7.0 இற்கும் இடையில் இருப்பதே மிகச்சிறந்ததாகும் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு அதிகமாக இருக்கும்போது அதாவது நீரிழிவுநோயானது கட்டுப்பாடற்ற நிலையில் இருக்கும்போது பெண்ணொருவர் கர்ப்பம் தரித்தால் அவருக்கும் கருவிலுள்ள சிசவுக்கும் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்து மருந்துகளை கிரமமாக உள்ளெடுத்து உங்கள் நீரிழிவைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதல் வேண்டும் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையேற்படின் மருந்துகளை அதிகரிக்கவோ அல்லது மாற்றவோ வேண்டி தேவை ஏற்படலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சிலவேளைகளில் இன்சுலின் என்ற ஊசி மருந்தையும் பயன்படுத்த முடியாது. தேவையேற்படின் மருத்துவ ஆலோச னைக்கேற்ப மெற்போமின் மருந்தை மட்டுமே தொடரமுடியும். எனினும் அநேகமான சந்தர்ப்பங்களில் இன்சுலின் மூலமே நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.
மருத்துவர் M.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்,
யாழ்போதனா வைத்தியசாலை.