உணவு பரிமாறும் அளவு தனிநபர்களின் வயது உயரம்நிறை மற்றும் அவரது உடலின் இயங்குநிலைச் செயற்பாட்டின் அளவு என்பவற்றுக்கு ஏற்ப உணவு முறை வேறுபடும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
ஒரு கோப்பை என்பது 125 மீல்லி லீற்றர் அளவுப் பரிமாணம் உடையது. மரக்கறி உணவு தேங்காய் பாலின் பயன்பாடு இன்றி சமைக்கப்படவேண்டும். மாப்பொருள் அற்ற மரக்கறிகள் குறிப்பாக கிழங்கு பலா வற்றாளைக் கிழங்கு ஈரப்பலா தவிர்ந்தவையாக இருத்தல் வேண்டும்.
காலை 7.30 மணி – காலை உணவு
- ஒரு கோப்பை கொழுப்பற்றபால் (தேநீர்)
- சோறு ஒரு கோப்பை (சிவப்பு, குத்தரிசி)
- இரண்டு கோப்பை மாப்பொருளற்ற மரக்கறி
- ஒரு துண்டு மீன் அல்லது இறைச்சி (ஒரு சீட்டுக்கட்டின் அளவு)
- சைவ உணவு எனில் 1/2 கோப்பை பருப்பு அல்லது சோயா அல்லது பயறு.கடலை ஒரு அரை கோப்பை வெங்காய மிளகாய் சம்பலுடன் உண்ணலாம்.
காலை 10.30 மணி- சிற்றுணவு
- ஒரு கோப்பை பழங்கள் அல்லது சிறிய வாழைப்பழம்
நண்பகல் 12.30 மணி – மதிய உணவு
- ஒரு கோப்பை சோறு (சிவப்பு குத்தரிசி)
- மூன்று கோப்பை மாப்பொருளற்ற மரக்கறி
- ஒன்று தொடக்கம் இரண்டு துண்டு மீன் அல்லது இறைச்சி (சீட்டுக்கட்டின் அளவு)
- சைவ உணவு எனில் அரைக் கோப்பைப்பருப்பு அல்லது சோயா
மாலை 4 மணி – சிற்றுணவு
- ஒரு கோப்பை கொழுப்பகற்றிய பால் (மாலை நேரத் தேநீர்)
- ஒரு கோப்பைபழங்கள் அல்லது 2 சீனியற்றபிஸ்கட்மா
மாலை 7 மணி – இரவு உணவு
- மூன்று தொடக்கம் ஐந்து சிவப்பு இடியப்பம் இரண்டு கோப்பை மாப்பொருளற்ற மரக்கறி
- அரை கோப்பை பருப்பு அல்லது.
- ஒரு கோப்பைச் சோறு (சிவப்பு அல்லது குத்தரிசி)
- இரண்டு கோப்பை மாப்பொருளற்ற மரக்கறி
- ஒன்று தொடக்கம் இரண்டு துண்டு மீன் அல்லது இறைச்சி (சிட்டுகட்டின் அளவு)
- சைவ உணவுஅரைகோப்பைப்பருப்பு அல்லதுசோயா
மாலை 9.30 மணி – பின்னிரவு சிற்றுணவு
- ஒரு கோப்பை கொழுப்பகற்றப்பட்ட பால் அல்லது இரண்டு சீனியற்ற பிஸ்கட்
மருத்துவர் N.சுட்கீர கலுபாகன