31 சர்வதேசபுகைத்தலுக்கு மே எதிரானநாள். இது புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து சிந்திக்கும் நாள். மக்களைக் குறிப்பாக இளைஞர்களை சிந்திக்க வைக்கும் நாள். மக்களை விழிப்புறச் செய்யும் நாள். இளைஞர்கள் புதிதாக இப்பழக்கத்தை பழகிக் கொள்வதைத் தடுக்கும் நாள். புகைப் போரை அப்பழக்கத்தினின்றும் மீட்கும் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்யும் நாள் புகைத்தலுக்கு எதிராக மக்களை சுயாதீனமாக எழுச்சியுறச் செய்து அவர்களையும் இதில் பங்களிக்கச் செய்யும் நாள்.
எனவே இந் நாளின் முக்கியத்துவம் உணர்ந்து அதனுள் பொதிந்துள்ள உள்ளார்ந்த உண்மைத்தன்மையை உணர்ந்து நாம் அனைவரும் இந்நாளை அனுஷ்டிக்க வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகவும் உள்ளது. கற்றோர், மருத்துவர்கள், ஆசிரியர்கள். மதத்தலைவர்கள், சமயப்போதகர்கள். பிரசங்கம் செய்வோர், அரசியல்வாதி கள், ஊடகங்கள் என எம் சமூகத்தின் இருப்பில் அக்கறையுள்ள அனைவரும் இதில் பங்கெடுத்து தமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்களை மக்களிடத்தில் எடுத்துச்செல்லுதல் வேண்டும்.
இவர்கள் குறிப்பாக இளைஞர்களை தெளிவு படுத்தி விழிப்புறச் செய்தல் வேண்டும். ஊடகங்களில் புகை எதிர்ப்பு பிரசுரங்களை வெளியிடும் போது மிகவும் கவனம் செலுத்துதல் வேண்டும். இதன் போது புகைந்து கொண்டிருக்கும் சிக ரெட்டின் படத்தையோ புகை பிடித்தல் போன்றபடங்களையோ இருவிரல்களுக் கிடையில் சிகரெட் உள்ளதுபோன்றபடங்களையோ பிரசுரித்தல் கூடாது. அவற்றை தவிர்த்தல் வேண்டும். அதற்குப் பதிலாக மகிழ்ச்சியாக இருக்கும் சிறுவர்களின் படங்களையோ புகையின் பாதிப்பை விளக்கும் படங்களையோ கார்ட்டுன்களையோ பிரசுரிப்பதே பொருத்தமானது.
இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சவால்களில் புகைத்தல் முன்னுரிமை பெறுவதனால் தம் மகிழ்வான தருணங்களில் தம் மகிழ்ச்சிகளை ஆரோக்கியமாகக் கொண்டாடத் தெரியாதோர் புகைத்தலின் துணையை நாடுகின்றனர். இதனால் அதன் மாய வலைக்குள் சிக்குண்டு வெளிவரத்தெரியாது.தமது உண்மையான மகிழ்ச்சியை மட்டுமல்ல தமது இளமை, குடும்ப மகிழ்ச்சி அனைத் தையும் இழந்துவிடுகின்றனர்.
புகை மது போதை எயிட்ஸ் நோய்என் பன நச்சுவட்டத்தின் கூறுகளாகும். ஆரம்பத்தில் புகையில் தொடங்குபவர் படிப்படியாக இந்த நச்சுவட்டத்தின் அடுத்த படிகளுக்கு இலகுவாக உந்தித் தள்ளப்படும் நிலையே தற்போது உள்ளது. இதன் விளைவாக தனிமை, மன வெறுமை, கல்வியில் நாட்டமின்மை, பாடசாலை இடைவிலகல், துஷ்பிர யோகம், சமூகத்தால் ஒதுக்கப்படல், சகபாடிகளால் கைவிடப்படல் என்று பல நெருக்கீடுகளுக்கு உட்பட்டு ஈற்றில் தற்கொலை முயற்சி, தற்கொலை என நிறைவுறுவதைக்காண்கிறோம். சமூகத் தின் அத்திபாரங்கள் இன்று ஆட்டங் காணும்போது சமூகத்தின் நாளைய இருப்பு கேள்விக்குறியாகின்றது. திரைப்படங்களில் அசெளகரியமான புகை, மது போன்றவற்றை மகிழ்ச்சி யான ஒன்றாககாண்பிக்க முற்படுகிறார்கள். எதிர்பால் கவர்ச்சிக்காக அசட்டுத் தன்மையான வீரர்களாககாண்பிப்பதற்காக இவற்றைபயன்படுத்துகின்றார்கள்.
இதனைப் பார்த்த இளைஞர்கள் இவற்றை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கப் பார்க்கிறார்கள். பாவம் கல்வி அறிவு கூடிய சமூகத்தில் இருந்து கொண்டும்தாம்கற்றகல்விபகுத்தறியும் அறிவு கொண்டு உண்மைத்தன்மையை அறிய முடியாதவர்களாகவே இவர்கள் உள்ளனர். நிஜ வாழ்க்கை வேறு திரை விம்பம் வேறு என்பதைக்கூட உணர முடியாதவர்களாகவே உள்ளனர். காலை முதல் இரவுவரை எமது வீடுகள் அனைத்தும் திரையரங்குகளாக மாறியதன் விளைவே இது சுய சிந்தையை இழந்து சிந்தனைத்திணிப்புக்குள் சிக்குண்டு சரி எது பிழை எது நன்மை தீமை எவை எனப்புரியாதுதிக்குமுக்காடுகின்றார்கள். இத்திரைப்படங்கள் எம் இளைஞர்களை திசை திருப்பி அவர் தம் வாழ்ககைப் போக்கை மாற்றி அப்பாவிப் பெற்றோர்ககளின்உழைப்பைதிருடவைக்கின்றன. அசெளகரியமான செயல்களுக்கு வீணே செலவு செய்து இளைஞர்கள் தம்மை அசிங்கப்படுத்திக் கொண்டும் மற்றை யோரின் அருவருப்புக்கு ஆளாகிக் கொள்ளும்நிலையை இவை ஏற்படுத்து கின்றன.
புகையானது பிள்ளைகளுக்கு பாசமான அப்பாவை இல்லாது செய்கின்றது. மனைவிக்கு அன்பான வாழ்க்கைத் துணையை இல்லாது செய்கின்றது. உறவினர்களுக்கு உதவிடும் சகோதரனை இல்லாது செய்கிறது. நாட்டுக்கு நற்பிரஜையை இழக்க வைக்கின்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் நம் புத்தியில் இருத்துதல் வேண்டும். புகைத்தலால் எமக்குக் கிடைப்பது துர் நாற்றம் வீசும் வாய், அவலட்சணமான முகம் முதியதோற்றம் காவி படிந்தபற்கள், ஆனமைக குறைபாடு, புற்று நோய்கள்மற்றும் சந்தோசமற்ற குழப்பமான குடும் பவாழ்வு என்ப வையே. ஆண் மைக்குறைபாடு என்பது மிக மிக முக்கியமான பாதிப்பாகும்.
புகைத்தலினால் இளைஞர்கள் தம் ஆண்மையை இழக்கிறார்கள். திரைப் படங்களில் காண்பிப்பதுபோல் தம்மை செயற்திறன்மிக்க ஆண்களாக காண்பிக்க முற்பட்டு நாளடைவில் தம் ஆண்மைத் தன்மையை இழந்து விடுவது கவலையளிப்பதாகும்.
இன்பமான திருப்திகரமான இல் வாழ்க்கையை நடத்த முடியாது. துன்பமுறுவதுடன் பாலுறவில் நாட்டமின்றி குழந்தைப்பாக்கியம் இன்றி அன்புக்குரியவளின் வெறுப்புக்கு ஆளாகும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகிறது. புகைப் பவர்கள் உண்மையில் பாவமானவர்கள். அவர்கள் ஏமாற்றப்படுவதை உணராதவர்கள். தம் பகுத்தறிவை பயன்படுத்தும் திறனை இழந்தவர்கள். இவர்கள் பிரச்சினைகளை மறக்கின்றோம் எனக்கூறி மேலும் பிரச்சினைகளுக்கு ஆளாவதோடு சந்தோசமாக இருப்பதாக காண்பிக்க முற்பட்டு தம்மிடம் இருந்த சந்தோசத்தையும் தொலைக்கிறார்கள்.
தொலைக்காட்சி, நவீனதகவல்தொழில் நுட்ப சாதனங்கள் மூலம் எம் வீட்டில் நுழையும் பெரியதிரை, சின்னத்திரை நடிகர்கள் எமது பிள்ளைகளுக்கு புகை, மதுபாவைனயைக் கற்பிக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். சிறுவர்கள் மனதில் இத்தீய பழக்கங்கள் ஆழப்பதிந்து இவையே பதின்ம வயதில் வெளிக்காட்டப்படுகின்றன. மனத்தில் ஆழப்பதிந்த பழக்கங்களை அகற்ற பின்னைய காலங்களில் அதிக விலை கொடுக்க வேண்டி வருவதையே இப்போது நாம் எம் சமூகத்தில் பார்க்கின்றோம். இவ்வாறான தவறான காட்சிகள் வருகின்ற போதெல்லாம் சிறுவர்களுக்கு அத்தருணத்தில் அவற்றின் பாதிப்புக்களை எடுத்துக்கூறுதல் நன்று. முடியுமாயின் தவறான காட்சிப்படுத்தல்கள் உள்ள நெடுந்தொடர்களையோ, படங்களையோ தவிர்த்து விடுதல் நன்று.
இந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று இளம் பெண்கள் சிகரெட் புகைக்கும் ஆண்களை விரும்புவதில்லை என்று தெளிவாக காண்பிக்கின்றது. ஆனால் அதே இந்தியாவில் தயாரிக் கப்படும் திரைப்படங்கள் உண்மைக்கு மாறாக தகவல்களைத் தானே எமக்குகாண்பிக்கின்றன. இப்போது புரிகின்றதா? நிஜம் என்பது சினிமாவில் காண்பிக்கும் பள பளப்பு அல்ல என்பது. ஒரு சிகரெட் புகைப்பதனால் ஒருவர் தன்வாழ் நாளில் 12 நிமிடங்களை இழந்து விடுகிறார். ஒருவர் தினமும் ஐந்து சிக ரெட்டுக்கள் புகைப்பாரானால் அவரின் வாழ் நாளில் ஒரு மணித்தியாலத்தை ஒரு நாளில் குறைத்துக்கொள்கின்றார். ஒரு வருட மாக புகைப்பாரானால் பதினைந்து நாள்களை இழந்துவிடுவார்.
உலகில் சிகரெட் புகைத்து இறப்போரின் மொத்தத் தொகையில் 1/10 பங்கினர் மற்றையோர்புகைக்கும் புகையைசுவாசிப்பதால் புகையிலுள்ள நிக்கோட்டின் தாக் கத்தால் இறக்கின்றனர். இதனை மறைமுகப் புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புகள் (Passive smoking) என சொல்கின்றனர்.
இவ்வாறு மறைமுகப் புகைத்தலினால் பாதிக்கப்படுவோர் புகைப்பவரின் அன்பான மனைவி. பாசமான பிள்ளைகள் மற்றும் உற்ற நண்பர்களே ஆவர். கர்ப்பிணிப்பெண் ஒருவர் இப்புகையை சுவாசிப்பரானால்அது அவரின்கருவில் பாதிப்புக்களை ஏற்படுத்தி பிறப்புக் குறை பாடுகளுள்ள சிசுவை உருவாக்கலாம்.
உணவு கையாளும் நிலையங்களில் தொழில் புரிகின்ற புகைப்பிடிக்காத அப்பாவி இளைஞர்களும் மறைமுகப் புகைத்தலால் மிக மோசமாக பாதிக் கப்படுகின்றனர். ஓர் உணவகத்தில் ஒருநாளில் 30 பேர் வரை புகைத்துவிட்டு செல்கின்றார்கள். என்றால் அங்கு பணிபுரியும் இளைஞர்கள் இப்புகையை சுவாசித்து தம்வாழ் நாளில் 06 மணித்தியாலங்களை ஒரு நாளில் இழந்துவிடுகின்றனர். வருடத்திற்கு தம்வாழ்நாளில்90நாள்களை அதாவது மூன்று மாதங்களை இழந்து விடுகின்றனர்.
எனவே இது விடயத்தில் உணவு விடுதியாளர்கள் கூடுதலான கவனம்செலுத்தி தமக்கு விசுவாசமாக தொழில் புரிகின்ற இளைஞர்களின் வாழ்வை கருத்தில் எடுத்து அவர்களினதும் தனதும் எதிர்கால நன்மைகளை கருத்திற்கொண்டு புகைப்பொருள்களை விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ளுதல் வரவேற் கத்தக்கது.
நன்றே செய்க அதனை இன்றே செய்க
மருத்துவர் பொ.ஜெசிதரன்
சுகாதார வைத்திய அதிகாரி