தாய்ப்பாலானது.ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனித்துவமானது. தாய்ப்பாலூட்டலானது
இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் உரித்தான உரிமை மட்டுமன்றி தனித்துவமான தாய்மையை பூரணப்படுத்தும் செயலாகவும் அமைகிறது.
வாருடா வருடமும் தாய்ப்பாலூட்டலில் முக்கியத்துவத்தை உணர்துவதற்க்காக ஓகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பாலூட்டல் வாரமாக கொண்டாடப்படுகின்றது.
தாய்ப்பாலூட்டுவதன் நன்மைகள்
தாய்ப்பாலூட்டுவதனால் சிசு தாய் இருவரும் பல நன்மைகள் அடைகின்றனர்.
சிசுவிற்கு ஏற்படும் நன்மைகள்
- குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல ஊட்டச்சத்துக்களும் உரிய அளவில் அடங்கியுள்ள தால்குழந்தையின் சீரானவளர்ச்சிக்கு உதவுகின்றது.
- வளர்ச்சியடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் கிருமித் தொற்று அற்ற தூய்மையான உணவை குழந்தைக்கு வழங்குகிறது.
- எளிதாக சமிபாடடையக் கூடியது.
- இயற்கையான நீர்ப்பீடனசக்தியை வழங்குகிறது.
- குழந்தை எதிர்காலத்தில் அதிக புத்திகூர்மையுடன் வளருவதற்கு உதவுகிறது.
- தாய்-சிசு பிணைப்பு ஏற்பட உதவி செய்கிறது.
- முகத் தசைகள் மற்றும் தாடைகள் விருத்திக்கு உதவுகின்றது.
- எதிர்காலத்தில் நீரிழிவு, உயர்குருதி அமுக்கம் மற்றும் அதிகூடிய உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கிறது.
தாய்க்கு ஏற்படும் நன்மைகள்
- தாய்-சிசு பிணைப்பு ஏற்பட உதவுகின்றது.
- இயற்கைக் கருத்தடைநிலையை ஏற்படுத்துவதால் அடுத்த குழந்தை பிறப்பினை உரிய காலத்திற்கு தாமதமாக்குகின்றது.
- எதிர்காலத்தில் மார்பக புற்றுநோய், மற்றும் சூலக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.
- பிரசவத்திற்கு பின்னான மன உளைச்சலைக் குறைத்து மகிழ்ச்சிக்கு வித்திடுகின்றது.
எப்போது தாய்ப்பாலூட்டுவது
சாதாரண குழந்தைக்கு அதன் தேவைக்கு ஏற்பவே பாலூட்ட வேண்டும். குழந்தைக்கு உணவு தேவை எப்போது என்பது அதன் நடத்தைகளை வைத்து (Hungr cues) கண்டுபிடிக்கலாம்.
அவையாவன
ஆரம்பகட்ட அறிகுறி
- குழந்தை அடிக்கடி கண்களைத் திறந்து மூடுதல்
- வாயினை அடிக்கடி திறத்தல்
- தலையைத் திருப்புதல்
இடைநிலை அறிகுறி
- சோம்பல் முறித்தல்
- அசைவுகள் அதிகரித்தல்
- விரலினை வாயினுள் வைத்தல்
பிந்திய அறிகுறிகள்
- அமுதல்
- முகம் சிவக்க அழுதல் ஆரம்பகட்ட பசிக்கான அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே குழந்தைக்கு பால் வழங்க வேண்டும். குழந்தை அழுவது மிகவும் பிந்திய அறிகுறியாகும்.
சரியான தாய்ப்பாலூட்டும் முறை
- குழந்தை வாய் அகலத் திறந் திருத்தல்
- கீழ் உதடு வெளிப்புறமாக பிதுங்கியிருத்தல்
- குழந்தையின் நாடி தாயின் மார்பில் தொட்டுக்கொண்டிருத்தல்
- (Aereola) முலைக்காம்மைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும் பகுதி குழந்தையின் வாயினால் பற்றப் பட்டிருத்தல்
ஒழுங்கான தாய்ப்பாலூட்டலை எப்படி அறிவது
- குழந்தை தாய்ப்பால் அருந்திய பின் நீண்ட நேரத்திற்கு உறங்குதல்
- குழந்தையின் வளர்ச்சி சீராக இருத்தல்
- குழந்தையின் விருத்திப்படிகள் சீராக இருத்தல்
- குழந்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருத்தல்
- குழந்தை சீரான இடைவெளியில் சிறுநீர் வெளியேற்றம் காணப்படல்.
மருத்துவர். மு.லாக்ஸாஜினி
நீரிழிவு சிகிச்சை நிலையம்,
யாழ்.போதனா வைத்தியசாலை