1. உலக சுகாதார தினம் (World Health Day) கடந்த 7ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தத் தினம் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் விளக்கிக் கூறுங்கள்?
உலக சுகாதார தாபனமானது (World Health Organization) 195Oஆம் ஆண்டிலெிருந்து ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதியை உலக சுகாதார தினமாகக் கொண்டாடிவருகின்றது. உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு இலக்கு களைக் கருத்தில் கொண்டு இந்தத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய சுகாதார தினத்தின் பிரதானமான தொனிப்பொருள் நீரிழிவு சம்பந்தமான தாகும்.
இந்தவருடத்துக்குரிய சுகாதாரதினத்தையொட்டிய உலகளாவிய செயற்பாடுகளின் பிரதான நோக்கமானது நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாகும். உலகில் ஏறக்குறைய 400 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு இந்தத் தொகையானது இன்னமும் 20 வருடங்களில் இரட்டிப் படையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
உலக சனத்தொகையில் பெரும்பாலான நீரிழிவு நோயாளர்கள் வாழ்வது தென்னாசிய மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியங்களிலேயாகும். நீரிழிவு தொடர்பான இறப்புக்களில் 80 சதவீதமானவை குறைந்த அல்லது நடுத்தர வருமான முள்ள நாடுகளிலேயே ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலகம் முழுவதிலும் ஏறக்குறைய 9 சதவீத மானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலும் நீரிழிவுநோயினால் பாதிக்கப்பட்டோரின் சதவீதமானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது.
அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஏறக்குறைய 20 சதவீதமானோர் நீரிழிவால் அல்லது நீரிழிவுக்கு முந்திய நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இதுவொரு அபாய அறிவிப்பு எனக் கருத்தில் கொண்டு நாம் செயற்படுவதுமிக அவசியமாகும்.
2. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சதவீதம் இவ்வாறாக அதிகரித்துச் செல்வதற்கான காரணங்கள் எவை?
ஆரோக்கியமற்ற(Unhealthy)உணவுகளை உட்கொள்ளுதல், உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை மற்றும் அதிகரித்துச் செல்லும் உடற்பருமன் என்பவை இந்த அதிகரிப்புக்கு பிரதானமான காரணங் களாகும். தொற்றும் நோய்களால் பாதிக்கப்படுகின்ற இலங்கை போன்றவளர்முக நாடுகளில், நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற தொற்றா நோய்களும் (Non Communicaple disease) ©£ கரித்துச் செல்வது மிகவும் ஒரு துரதிர்ஷ்ட வசமான நிலையாகும்.
3. தொற்றா நோய்கள், குறிப்பாக நீரிழிவு தொடர்பாக எமது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றதா? இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு சிறிது சிறிதாக எமது மக்கள் மத்தியில் ஏற்பட்டுவருவதைக்காணக்கூடியதாகவுள்ளது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிபோன்ற ஊடகங்களும் மற்றும் சமூகவலைத்தளங்களும் பிரதான மான பங்கை ஆற்றி வருகின்றன.
இலகுவான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நீரிழிவு போன்ற பல தொற்றாநோய்கள் ஏற்படுவ எமது மக்கள் மத்தியில் நீரிழிவுநோய் பற்றிய பல தப்பபிப்பிராயங்கள் (Misconcepts) உள்ளன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டுமக் கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.
4. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
நீரிழிவுநோய் உள்ளதாகக்கண்டறியப்பட்ட ஒருவர் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அவதானமாக இருப்பதன் மூலம் நீரிழிவால் ஏற்படும்பல்வேறுபட்ட நீண்டகாலப் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும். இலகுவான வாழ்க்கைமுறை மாற்றங்களை நடை முறைப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும். மேற்கத்தைய மற்றும் துரித உணவு(Fast food) வகை களைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது மிகவும்
அவசியமானதாகும். சீனிச்சத்துள்ள இனிப்பான உணவுகளைத் தவிர்ப்பதும், மாச்சத்துள்ள உணவுகளைக் குறைப்பதும் மிக அவசியமானதாகும். எனினும் நீரிழிவுநோயாளியொருவர் தனது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்த அளவு தேகப் பயிற்சியை வைத்திய ஆலோசனைப்படிமேற்கொள்வதும் அவசியமானதாகும். நீரிழிவு நோயாளியானவர் தனது உடல் நிறையைச் சீராகப் பேணுவதும் தகுந்த BMI உடற்திணிவுச் சுட்டெண் மிக அவசியமாகும்.
நீரிழிவு நோயாளியொருவர் அந்த நோய்க்கான மருந்துகளைக்கிரமமாக உட்கொள்வதும் மருத்துவ சிகிச்சை நிலையத்துக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை வருகை தந்து மருத்துவர்களின் பரிசோதனைகளுக்கு உட்படுவதும் அவசியமானதாகும். நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவிடத்து இருதயநோய், கண்பார்வை குறைவடைதல், சிறுநீரகம் பாதிப்படைதல் மற்றும் பல வகையான நரம்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட நாளிலிருந்தே நோயாளியொருவர் மிகவும் அவதானமாக அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலம் நீண்டகாலப்பிரச்சினைகளின்(Complications) தாக்கங்களிலிருந்து விடுபடவோ அன்றி அந்தத் தாக்கங்கள் ஏற்படுவதைப் தவிர்க்கவோ முடியும்.
5. இறுதியாக நீரிழிவுநோயின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான அல்லது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் பற்றிச் சிறிது கூறுங்கள்?
உலக சுகாதாரதாபனம் மற்றும் பல அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் உலகளாவிய ரீதியில் பல செயற்றிட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றன. எமது நாட்டிலும் சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை நீரிழிவுப் பேரவை (Srilanka Diabetes Federation) போன்றவை மிக முக்கியமான பங்கு வகித்துவருகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை எமது யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையமானது பலவகையான சமூக செயற்றிட்டங்களை ஆரம்பித்து மிகவும் திறம்படச் செயற்படுத்திவருகின்றது. நாளைய தலைவர்களான பாட சாலை மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது அடுத்த இலக்காகும்.
இந்தமுறை உலக சுகாதார தினத்தை முன்னிட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் வேலை புரியும் அனைத்துப் பணியாளர்களிடையேயும் நீரிழிவு மற்றும் ஆரோக்கிய வாழ்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றோம். நீரிழிவு போன்ற தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்கவும் அவற்றின் தாக்கத்தைக்கட்டுப்படுத்தவும்.உலக சுகாதாரதினத்தையொட்டிய இந்தக் காலப்பகுதியில் நாம் அனைவரும் உறுதி பூணுவது காலத்தின் கட்டாயமாகும்.
மருத்துவர். M. அரவிந்தன்.
நீரிழிவு மற்றும் அகஞ்சுரக்கும் தொகுதியியல்
சிறப்பு வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை