- எமது குருதியில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களில் (செங்குழியங்களில்) ஹீமோகுளோபின் (Haemo globin) எனும் இரும்புப் புரதம் உள்ளது. எமது சுவாசத்தின் மூலம் கிடைக்கும் ஒட்சிசனை ஒட்சி ஈமோகுளோபினாக மாற்றி உடல் கலங்களுக்கு செங்குழியங்கள் என்ற படகின்மூலம் எடுத்துச்சென்று சக்தியை வழங்க இது உதவுகின்றது. இவ்வாறு உடலில் எல்லாப் பாகங்களுக்கும் சுற்றித்திரியும் போது குருதியில் இருக்கும் குளுக்கோசானது சிறிதளவு இந்தக் ஹீமோகுளோபினிலும் ஒட்டிக் கொள்ளும்தன்மையைக் கொண்டிருக்கிறது. அத்துடன் குருதியில் அதிகளவு குளுக்கோஸ் இருக்குமானால் அது அதிக வீதத்தில் இந்த ஹீமோ குளோபினில் ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு குளுக்கோஸ் ஹீமோகுளோபினுடன்
ஒட்டிக்கொண்டிருப்பதை HbA1c பரிசோதனை மூலம் கண்டறியலாம். - ஒருமுறை குருதியில் இருந்து கிரகித்துக்கொண்ட குளுக்கோசை செங்குழியங்கள் தமது வாழ்நாள் முடியும்வரை தம்முடனே வைத்துக் கொள்ளும், ஒரு சிவப்பு அணுவின் வாழ்வுக் காலம் 120 நாள்கள். இந்தச் சிவப்பு அணுக்களில் படிந்துள்ள குளுக்கோசின் அளவுகளைக் கணக்கிடுவதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் சராசரி குருதியில் குளுக்கோசின்மட்டத்தை HbA1c பரிசோதனை மூலம் அறியலாம்.
- ஒரு நோயாளிக்கு செய்யப்படும் குருதிப் பரிசோதனைகளான, வெறும் வயிற்றில் சாப் பிடாமல் 10 மணித்தியாலங்கள் இருந்து செய்யப்படும் Fasting blood sugar (FBS), சாப்பிட்டு இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின் செய்யப்படும் குருதிப்பரிசோதனை Post Brandial blood sugar (PPBS) சாதாரணமாக குத்திப் பார்க்கும் குருதிப் பரிசோதனை Randombloodsugar(RBS), போன்றவை நோயாளியின் உணவு முறை மருந்துகள்,உடற்பயிற்சி மற்றும் வேறு நோய் நிலைகள் என்பவற்றால் மாறுபடும். ஆனால் HbA1c சோதனையானது இவற்றினால் மாற்றம் அடைவதில்லை.
- HbA1c பரிசோதனை முடிவின் மூலம் ஒருவருக்கு நீரிழிவுநோய் உண்டா? இல்லையா? நீரிழிவை நோக்கிச் செல்கிறாரா? அவருக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பவை போன்றவற்றை மதிப்பிட முடியும். நோயாளிக்கு நீரிழிவு சம்பந்தமான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்கும், வைத்தியரின் துல்லியமான மருத்துவ சிகிச்சைக்கும் இந்தப் பரிசோதனை உதவியாக இருக்கும்.
- சாதாரணமாக ஒருவருக்கு மேற்படி பரி சோதனை செய்யும்போது, உதாரணமாக
4 5.6 வரை சாதாரணம் (நீரிழிவு அல்லாத நிலை) 5.7 6.4 வரை நீரிழிவுக்கு முந்திய நிலை (Pre
Diabetis) 6.5க்கு மேல் நீரிழிவு நிலை Diabetis என குறிப்பிடலாம். பலவகையான நோய்களையுடைய வயது முதிர்ந்தவர்களிலும் HbA1c இலக்கானது 7.5 அல்லது 8 ஆக வைத்திய ஆலோசனைப்படி பேணப்பட வேண்டும். நீரிழிவு ஏற்பட்ட பின்பு ஒருவருடைய HbA1c நிலையை ஏறக்குறைய ஏழாக வைத்திருந்தால், அவர் நீரிழிவுடனும் ஆரோக்கியமான நிலையில் இருக்கிறார் எனக்கருதலாம். இளம் வயதான நீரிழிவுநோயாளி ஒருவரின் HbA1c இலக்கை 6.5 ஆகக்கூட வைத்திய ஆலோசனையின் பின் பேணமுடியும். - HbA1c 9வீதத்துக்கு மேலாகவும், குருதியின் குளுக்கோசின் மட்டமும் தொடர்ந்து கட்டுப்பாடில் லாமல் இருக்குமானால், அவரது கண்களைக் கண் மருத்துவரிடம் பரிசோதிப்பது கண் பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு அவசியமாகும்.
- நீரிழிவு நோய் ஏற்பட்ட ஒரு நோயாளியின் HbA1c இனை 7க்கு மேல் அதிகரிக்காமல் வைத்திருக்க முயற்சிப்பதன் மூலம், அவர் பல வகையான பாதிப்புக்களில் இருந்தும் விடுபடலாம். உ+ம் நரம்பு, சிறுநீரகப் பாதிப்புக்கள்
- எமது உடலில் ஏற்படும் சிலநோய்நிலைமைகளில் HbA1c காணப்படுகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. (Kidney failure) சிறுநீரக தொழிற்பாடு குறைதல் மற்றும் குருதியில் காணப் படும் கொழுப்பில் முக்கிளிசரைட்டின் அளவு கூடிக்காணப்படும். (Hypertrigly cen demia) நிலையிலும் மற்றும் தொடர்ச்சியாக அதிகளவு மதுபானம் அருந்துபவர்களுக்கும் HbA1c கூடிக் காணப்படும். அதேபோல் HbA1c குறைந்து காணப்படும் நிலைமைகள் தீவிர அல்லதுநாள்பட்ட குருதி இழப்பு (Acute or chromic blood loss) மற்றும் சிகெல்செல் அன்மீயா (Sickle cell disease) மற்றும் தலசீமியா (ThalaSSemia) என்பனவாகும்.
- HbA1c, இரத்தம் எடுக்கும் நேரத்தில் தங்கியிராத நுணுக்கமான இரத்தப் பரிசோதனையாகும். அதாவது உணவு உண்டபின் எடுக்கப்பட்டதா அல்லது வெறும் வயிற்றில் எடுக்கப்பட்டதா? போன்றவற்றில் தங்கியிராத பரிசோதனையாகும். Glycosy latsd heamoglobin HbA1c மூலம்செங்கலங்களை உட்கிரகிக்கப்பட்ட குளுக்கோசின் அளவை அளவிடுவதன் மூலம் ஒருவரின் மூன்று மாதங்களுக்கான இரத்தக் குளுக்கோசின் சராசரி அளவு மட்டம் பற்றிய தகவல்களைப் பெறமுடியும். இந்தப் பரிசோதனை 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருதடவை செய்தால் போதுமானதாகும்.
- பால் பாகுபாடன்றி 45வயதுக்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு நோய்க்குரிய குருதிப்பரிசோதனைகளை செய்து பார்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எமது சமுதாயத்தில் (தெற்காசிய மக்களில்) நீரிழிவுநோய் ஏற்படுவதற்கான அபாயம்மிக அதிக மென்பதால் இளவயதிலேயே அபாயக் காரணிகள் இருப்பின் (risk factors) பரிசோதனை அவசியமாகும்.
- ஒருவருக்கு Fasting blood sugar 100-125 mgdl
- பரம்பரையாக நீரிழிவு நோய் இருப்பவர்களின் பிள்ளைகள்
- கர்ப்பிணியாக இருக்கும்போது அந்தச் சந்தர்ப்பத்தில் நீரிழிவு நோய் இருந்தவர்கள்.
- அதிக நிறையுடையவர்கள்.
- கூடிய மன அழுத்தம் உடையவர்கள்.
- நீரிழிவு நோய் இருக்கிறதா எனச் சந்தேகம் கொண்டவர்கள்.
- நீரிழிவை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை உதாரணம் ஸ்ரீரீரொய்ட்ஸ் (Steroids) பயன்படுத்துபவர்கள்.
தங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா என மேற் கூறிய வகையினர் HbA1c குருதிப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.
HbA1c பரிசோதனையானது. குறித்ததராதரமுடைய ஆய்வு கூட்டத்திலேயே செய்து கொள்ளப்பட வேண்டும். HbA1c கூடுதலாகக் காணப்படும்போது மற்றைய குருதிச் சோதனைகளையும் (Fasting blood sugar எனப்படும் உணவருந்தாது மேற் கொள்ளும் குளுக்கோசின் அளவு மற்றும் உணவு அருந்தியபின் 2 மணி நேரத்தில் மேற்கொள்ளும் PPBS குளுக்கோசின் அளவு என்பவற்றை மேற் கொண்டு வைத்திய ஆலோசனையின் பேரில் நீரிழிவை உறுதிசெய்து தேவையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்,
யாழ்.போதனா வைத்தியசாலை.