தற்காலத்தில் பலரையும் துன்புறுத்தி வருகின்ற நோய்களில் நீரிழிவுநோயும் ஒன்றாகிவிட்டது. நீரிழிவு ஒரு தொற்றாத நோய் ஆகும். உணவில் அதிகளவான வெல்லம் சேர்த்தல், மாப்பொருள் உணவுகளை உண்ணல், சதை யில் ஏற்படும் நோய்கள், பரம்பரை என்பன இந்த நோய்க்குக் காரணமாகின்றன.
இன்சுலின் ஓமோன் குறைபாட்டினால் உருவாகுகின்ற இந்த நோயின் பராமரிப்புமுறையில் செயற்கையாக இன்சுலின் ஓமோனை ஊசிமூலம் ஏற்றுதல் ஒரு பிரதான பங்கு வகிக்கின்றது.
இன்சுலின்
இன்சுலின் பாவிக்கின்ற நோயாளர்களிடத்தில் இன்சுலினை பாதுகாக்கும் பேணும் முறை. (Storag), பாவனைமுறைகள், பக்கவிளைவுகள் பற்றிய தெளிவான அறிவு இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இன்சுலினைப் பேணும் முறை
இன்சுலின்குப்பிகளை குளிரூட்டியின் நடுப்பகுதியில் (Middle Compartment) 2-8 C க்கு, இடையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். குளிரூட்டியில் வைக்கும்போது மிகை குளிரூட்டும், பகுதியிலோ,(Defreeze) குளிரூட்டியின் கதவிலோ வைத்துப் பேணக்கூடாது. குளிரூட்டி வசதி இல்லாத நோயாளிகள் இன்சுலின் குப்பிகளைக் களி மண்பானையில் நீர்விட்டு அதனுள் வைத்துப் பேணலாம்.
இன்சுலின் பாவனை முறை
இன்சுலினைப் பயன்படுத்தும் போது பின்வரும் அடிப்படை விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. ஊசி ஏற்றுவதற்கான சரியான கருவியைத் தெரிவு செய்தல்.
2. ஊசி ஏற்றுவதற்காக நோயாளியைத் தயார் செய்தல்
3. சரியான அளவு மருந்தை எடுத்தல்
4.ஊசி ஏற்ற சரியான நுட்பத்தைக்கையாளுதல்
மருந்து ஏற்றச்சரியான கருவியைத் தெரிவு செய்தல்
இன்சுலினைச்சரியான அளவில் ஏற்றுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஊசிகளைப் பயன்படுத்த வேண்டும். இதற்கென 29G உடைய 1 ml ஐ too Unit ஆகப்பிரிக்கப்பட்டஊசிகள் பயன்படுத் தப்படுகின்றன.
இதைவிட மருந்துடன் கூடிய Pen களும் பாவனையில் உள்ளன.
ஊசியை ஒருதடவைமட்டும்பாவித்தல் சிறந்தது. (அல்லது ஆகக்கூடியது 3 தடவைகள் மட்டும் பாவிக்கலாம்) ஊசி முனையில் இரத்தக்கறை இருந்தாலோ/முனை மழுங்கி இருந்தாலோ ஊசியை எறியவும்.
ஊசியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மருந்து ஏற்றுவதற்காக நோயாளியைத் தயார்ப் படுத்தலுக்கு முன்னர், ஊசி ஏற்றுவதற்கான சரியான இடத்தைத் தெரிவு செய்தல் வேண்டும். கையின் மேற்புறம், வயிற்றுப்பகுதி, தொடை பிற்பகுதி ஆகிய இடங்களில் ஊசியை ஏற்ற முடியும்.
ஆனால் ஊசி ஏற்றும் இடத்தை சுழற்சி முறையில் மாற்றி அமைத்தல் வேண்டும். ஊசி போடும் இடத்தைச் சுத்தப்படுத்தல் வேண்டும்.
சரியான அளவு மருந்தைத் தெரிவு செய்தல் வேண்டும்.
நோயாளிக்குவைத்தியரின் ஆலோசனைப்படியான சரியான அளவு மருந்து ஏற்றுதல் வேண்டும். அதிக உணவு உட்கொண்டகாரணத்தினாலோ, அதிகமாக பாவித்தல் மற்றும் வேறு காரணங்களால் குறைவாக போடுதல் என்பவற்றை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளுதல் சிறந்தது. ஊசியில் சரியான அளவு மருந்து எடுக்கப்பட்டு அதனுள் காற்றுக் குமிழிகள் இல்லை என உறுதி செய்தல் வேண்டும்.
சரியான நுட்பத்தை பாவித்தல்
மேற்தோலினுள் ஊசி ஏற்றப்படல் வேண்டும். ஊசியை 45° யில் வைத்து ஏற்றுதல் வேண்டும். போடும் இடத்துதசையை இரு விரல்களால் பிடித்து அதில் குறுகிய நேரத்தினுள் ஊசியை ஏற்ற வேண்டும். இன்சுலின் பேனாவாயின் 90° இல் வைத்து செங்குத்தாக ஏற்றுதல் வேண்டும்.
வலியைக் குறைக்க
மழுங்கலான முனையுடைய் ஊசியை பயன் படுத்தக்கூடாது. குளிரூட்டியில் இருந்து இன்சுலின் குப்பியை எடுத்ததும் உள்ளங்கையினுள் வைத்து சில நிமிடங்கள் உருட்டவும். இதனால் குளிர் குறைந்து வலியும் குறையும். குறுகிய நேரத்துள் ஊசியை ஏற்றவும். ஊசியினுள் வளிக்குமிழ் இல்லை என உறுதிப் படுத்தவும்.சவர்க்காரம், நீர் கொண்டு ஊசிபோடும்பகுதியைக் கழுவவும்.(ஸ்பிறிட் தோலைக் கடினமாக்கலாம்)
பக்கவிளைவுகள் (Adverse Effect)
இன்சுலின் பாவனையின்மிகமுக்கிய பக்கவிளைவு குருதியில் குளுக்கோஸின் அளவு குறைவடைதல் ஆகும். இதனை இயன்றளவு குறைக்க ஊசி ஏற்றும்போதுநோயாளிக்கான உணவுதயாரா என உறுதிப்படுத்தவும்.
ஊசி ஏற்றி 30 நிமிடத்துக்குள் உணவு உட்கொள்ள வேண்டும். குருதியில் குளுக்கோஸின் அளவு குறைவாக உள்ள ஒருவரில் வியர்வை, மயக்கம், குழப்பநிலை, படபடப்பு என்பவை ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட் பால் இனிப்பு அல்லது சீனியை வாயில் இடவும்.
தாமரா பரம்சோதிநாதர்
உள்ளகப்பயிலுநர் மருந்தாளர்,
போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம்.