உறுதி மொழி
“மதுவினால் பிரச்சினைகளும் கஷ்டங்களும் வருகின்றதென்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு மதுவில்லாத வாழ்வை நோக்கி அடியெடுத்து வைக்க உறுதி கொண்டு மது அடிமை என்கின்ற இந்தப் பிரச்சினையிலிருந்து பூரணமாக விடுபட்டு எமது சகமனிதர்கள் போல், மனைவி பிள்ளைகள் சுற்றத்தோடு சந்தோஷமாய்
வாழவேண்டுமெனத்தீர்மானம் எடுக்கின்றோம்.
மதுவுக்கு அடிமையாக இருந்தவர்கள் இவ்வாறு ஒரு தீர்மானம் எடுக்க முடிந்தால், அது
அவர்கள் மீண்டும் ஒருமுறை பிறப்பதற்கு ஒப்பானதாகும்.
அது மிகவும் சந்தோஷமான ஒரு விடயம்.
அந்தப் புதிய பிறப்பை அடைய ஒரு நல்ல நாளை முடிவு செய்யவும் – இனிமேல் அந்த
நாளே உங்களது பிறந்தநாளாய் இருக்கட்டும்.
நாங்களும் இனிமேல் சந்தோஷமாக வாழ்வோம்
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014