LDதுவை மனப்பூர்வமாகக் கைவிட்டு, ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி ஒருவர் காலடி எடுத்து வைத்தாலும், அவர் புதிதாக நடக்கத் தொடங்கும் ஒரு குழந்தையைப் போல, தடக்கி விழவும், வழுக்கி விழவும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
இது மிகவும் சாதாரணமான, எதிர்பார்க்கக் கூடிய சில பின்னடைவுகளே. இதற்காகக் குடியை விட்டவரோ,அல்லது அவர்தம் குடும்பத்தவரோ மனக்கலக்கம் அடையத் தேவையில்லை.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், அவர் அதனை ஒளிக்கத் தேவையில்லை. இவ்வாறு தனது உறுதியான தீர்மானத்தில் இருந்து வழுக்கி விழுந்தவர் இயலுமானளவு விரைவில் தனது உளவளத்துணையாளரையோ, வைத்தியரையோ, குழு உறுப்பினரையோ அல்லது அவரது சூழலில் இருக்கின்ற இன்னுமொரு நண்பரையோ சந்தித்து அவர்தம் ஆதரவையும், உதவியையும், பொருத்தமான தலையீடுகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆயினும் சில வேளைகளில் இவ்வாறு வழுக்கி விழுந்த ஒருவர் தன்னுணர்வின்றித் தொடர்ந்து குடித்துக்கொண்டிருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மேற்கூறப்பட்ட எவருடனாவது தொடர்பு கொண்டு தேவையான ஆலோ சனைகளையும் உதவிகளையும் பெறலாம்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014