ஒருவர் குடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பெரும்பாலும் அவரைச் சுற்றி நிறைய நண்பர்கள் இருந்திருப்பார்கள். ஆனாலும் துர திஷ்டவசமாக அவர்களில் பெரும்பான்மை யோர் குடிப்பவர்களாகவே இருந்திருப்பார்கள்.
ஆனால் அவர் குடியை விட்டு விலகி அமைத்துக் கொண்ட புதிய வாழ்க்கை நிலையில் அந்தப் பழைய நண்பர்கள் கூட்டம் பயன்பட மாட்டார்கள். அவர்கள் இப்போதும் குடியைக் கைவிடாத ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பதனால் அவர்கள் குடியை விட்டு வாழ விரும்பும் தமது நண்பருக்கு உதவ மாட்டார்கள். மேலும், அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாவும் குடியை விட்டு இருப்பவரை பழையபடி குடியை நோக்கி இழுத்து விழுத்தவே முயலுவார்கள்.
எனவே, மதுவிலிருந்து விலகிப் புதியதொரு வாழ்க்கையைத் தேடுவோர். ஒருவருக்கொருவர் தங்களிடையே பழகி, நட்பையும் நல்லுற வையும் ஏற்படுத்திக் கொள்வது மிகவும் பயனு டையதாகும். பின்பு அவர்கள் தமக்கிடையே ஒழுங்கான கால இடைவெளிகளில் சந்தித்துக் கதைத்துக் கொள்வதும் முக்கியமானது.
இவ்வாறு சேர்ந்து கதைக்கின்ற சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கவும், ஒருவருடைய அனுபவங்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. அத்து டன் இவ்வாறான சந்திப்புகளில் யதார்த்தத்துக் குப் பொருத்தமான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான ஆலோசனைகளைப் பெறவும், வழங்கவும் கூடியதாக இருக்கும். மேலும், குடியை விட்டு இருக்கும் நண்பர் ஒருவர் குடிக்கும் அபாயத்தில் இருந்தால், மற்றவர் அதனை உய்த்தறிந்து, தகுந்த தலையீடுகளை மேற் கொள்ளவும் இச்சந்திப்புகள் உதவியாயிருக்கும்.
குடியை விட்டுப் புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், தங்களைப் போன்றவர்களுடன் இணைந்து Alcoholics Anonymus என்கின்ற பெயரில் குழுக்களாக இயங்கும் வழக்கம் பல நாடுகளில் இருக்கின்றது. இவர்கள் தங்களுடைய குழுக்கூட்டங்களில் தொடக்கத் திலே பாவிக்கப்படும் வழிபாட்டு வசனத்தின் ஒருபகுதி பின்வருமாறு.
”இறைவா! மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், மாற்றக்கூடியதை மாற்றியமைக்கும் மனத்தைரியமும், இவ்விரண்டையும் பாகுபடுத்தி அறியும் ஞானமும் தருவாயாக”
எங்களுடைய பிரதேசத்திலும் மதுவை விட்டு விலகி வாழ்வோர் குழுக்களாக இணைந்து ஒழுங்காகச் சந்தித்துக் கொள்கின்றார்கள். இந்தக் குழுக்கள் Alcoholics Anonymus இன கொள் கைகளை உள்வாங்கிக் கொண்டாலும், தனியாகச் சந்தித்தல் இரகசியமாகச் சந்தித்தல் என்பவற்றைப் புறந்தள்ளி, குடும்பமாகச் சந்தித்துக் கொள்ளல், சமூகமாகச் சந்தித்துக் கொள்ளல் எனும் கூட்டு அனுகு முறையைப் பின் பற்றுகின்றன.
இவ்வாறான குழுக்களிலே இணைந்துகொள்ள ஆர்வமாய் உள்ளவர்கள். மதுப் பிரச்சினைகளைக் கையாளும் உளவளத் துணையாளரை நாடி மேலதிக விளக்கங்க ளைப் பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014