தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 1 பெரியது
மஞ்சள் – 1 சிட்டிகை
உப்பு – அளவாக
செய்முறை
வாழைக்காயை முழுதாக கழுவி எடுத்து பச்சைத் தோலை மட்டும் மெலிதாக சீவி எடுக்கவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு உப்பு, மஞ்சள் அளவாக கரைத்து வைக்க வேண்டும். வாழைக்காயை குறுக்காக வட்டம் வட்டமாக சீவல்களாக வெட்டி உடனேயே மஞ்சள், உப்புத் தண்ணீர் கலவையில் பிரட்டி எடுக்க வேண்டும். இந்த வாழைக்காய் சீவல்களை ஆவியில் அவித்து எடுக்க வேண்டும். பின்பு நறுக்கு ஒடியல் போன்று உலர வைத்து எடுக்க வேண்டும். சீவல்கள் உலர்ந்ததும் கொள்கலன்களில் சேமித்து வைக்கலாம். நேரடியாக உட்கொள்ளலாம். சூடான பாலில் ஊறவைத்தும் உண்ணலாம்.
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி அருந்ததி வேல்சிவானந்தன்.