செய்முறை
முருங்கையிலை, சிறுகுறிஞ்சா இலை என்பவற்றை வெயிலில் உலர்த்தி பின் கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். நெல்லிக்காய் வற்றலையும் கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். இந்தக்கலவையில் 3 தேக்கரண்டி எடுத்து ஒரு தம்ளர் சுடுநீரில் சில நிமிடம் ஊறவிட்டு வடிகட்டி எடுக்கவும். வடித்த தேநீரில் தேவைப்படின் இஞ்சி சேர்க்கலாம். இனிப்பு தேவையானால் சுவையூட்டி சேர்க்கலாம். அல்லது தேநீரில் சிறிதளவு எலும்மிச்சம்பழச்சாறும் உப்பும்
சேர்த்து சூடாகவோ குளிராகவோ அருந்தலாம். தேவையானால் பால் சேர்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கையிலைத்தூள் (உலர்ந்தது) | 100 கிரம் |
நெல்லிக்காய் வற்றல் | 25 கிராம் |
சிறு குறிஞ்சா இலைத்தூள் ( உலர்ந்தது) | 50 கிராம் |
உப்பு | தேவையானளவு |
எலும்பிச்சம்பழச்சாறு | தேவையானளவு |
இஞ்சி | தேவையானளவு |
பால் | ½ லீற்றர் |
சுடுநீர் | தேவையானளவு |
சுவையூட்டி | தேவையானளவு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி நகுலேஸ்வரி இராமச்சந்திரன்