செவ்விளநீர் கன்றுகள் விநியோகம்
யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தினால் 20.11.2015 அன்று உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் குடா நாட்டில் பாடசாலைகள் பொது அமைப்புக்களுக்கு செவ்விளநீர் கன்றுகள் விநியோகிக்கப்பட்டது. பொது மக்களிடையே சோடா, மென்பானங்கள் போன்றவற்றின் பாவனையை குறைத்து இயற்கையான உற்பத்திகளை உபயோகிக்க வைக்கும் முகமாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.