நீரிழிவு உயர் குருதியமுக்கம் மற்றும் கொலஸ்திரோல் அளவு கூடுதலாகக் காணப்படுதல் என்பன எமது சமுதாயத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றன.
உணவு முறைகளில் ஏற்படும் மாற்றமானது பொது மக்களின் ஆரோக்கியத்தில் பிரதானமான பங்கை வகிக்கிறது. இலங்கை மக்களிடையே ஆரோக்கிய மான உணவுமுறைகளை ஊக்குவிப்பதில் இலங்கை அகஞ்சுரக்கும் தொகுதி நிபுணர்கள் கல்லூரியின் பிரிவான நீரிழிவு அற்ற இலங்கை (DIBETES SRI LANKA) உதவி வருகின்றது.
இந்த அமைப்பானது எமது கலாசாரத்துக்கமைவான, சுவையான மற்றும் இலகுவாகத் தயாரிக்கக்கூடிய உணவுவகைகள் பற்றி பொது மக்களை அறிவுட்டுவதன் மூலம் ஆரோக்கிய மான உணவு முறைகளில் பிரபல்யப்படுத்த விரும் புகிறது.
இந்த உணவு தயாரித்தல் போட்டியானது மேற்குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதை ஊக்குவிப்பதாக அமையும். போட்டி சம்பந்தமான சகல ஆக்கப் பிரதிகளும் கீழே குறிப்பிடப்படும் விளக்க முறைகளுக்கேற்ப அமைவதோடு நீரிழிவு அற்ற இலங்கை (DIBETESSRI LANKA)மே/பா இலங்கை அகஞ்சுரக்கும் தொகுதி நிபுணர்கள் கல்லூரி, இல. 6. விைேராம கவுஸ். – வி. ஜே. ராம மாவத்தை , கொழும்பு – 7 என்ற முக வரிக்குப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் நவம்பர் 30 2015க்கு முன் னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
பிந்திக்கிடைக்கப் பெறும் ஆக்கப் பிரதிகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அனுப்பப்படும் ஆக்கப் பிரதிகள் நீரிழிவு அற்ற இலங்கை (DIBETES. SRI LANKA) அமைப்பின் பதிப்புரிமையைப் பெற்றுக் கொள்வதோடு இந்த அமைப் பானது அவற்றை விழிப் புணர்வுஏற்படுத்தும்நோக்கில் இலத்திரனியல் அல்லது அச்சிட்ட முறையில் பயன் படுத்து வதற்கான உரிமை யையும் பெற்றிருக்கும்.
வயதுப் பிரிவு எந்தவொரு வயது வரம்புமின்றி எவரும் இந்தப் போட்டியில் பங்குபற்ற முடியும்.
தேவைகள்: ஆரோக்கியமான எமது கலாசாரத்துக்கு அமைவாக, சுவையான, சாதாரண சமையல் முறைகள் மூலம் இலகுவில் தயாரிக்கக் கூடிய மற்றும் எமது நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் உணவாக இருத்தல் வேண்டும்.
அனுப்பிவைத்தல்: கீழே குறிப்பிடப்படும் இரண்டுவிடயங்களையும் பூர்த்திசெய்து நீரிழிவு அற்ற இலங்கை அமைப்புக்கு அனுப்பி வைக்கவும்.
1. தயாரிக்கப்படும் உணவு கீழே தரப்பட்ட விவரங்களைத் தட்டச்சுச் செய்யவும். உணவின் பெயர், உணவு தயா ரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களின் விவரம் மற்றும் உணவு தயாரிக்கும் முறை
2. உணவின் புகைப்படம் நீங்கள் தயாரிக்கும் உணவின் தெளிவான புகைப்படத்தில் டிஜிற் றல் பிரதியை மெல்லிய நிறப் பின்புலத்தோடு (Background) CD மூலமாகவோ வேறு ஏதாவது சேமிப்பு உபகரணம் மூலமாகவோ (Storage) அனுப்பிவைக்க முடியும்.
பரிசுகள்
1 ஆம் பரிசு : 25,000
2 ஆம் பரிசு :15,000
3 ஆம் பரிசு :10,000
முதற் பத்துப் பிரதிகளைப் பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். பரிசு பெறுபவர்களின் விவரங்கள் நடுவர்களின் தீர்ப்பின் பின்னர் அறி விக்கப்படும்.
விண்ணப்பப்படிவம் –
முழுப்பெயர் :
பிறந்த திகதி :
தொழில் விவரம்:
விட்டு முகவரி :
தொலைபேசி இல. :
மின்னஞ்சல் முகவரி:
போட்டியில் பங்குபற்றுபவரின் உடன்படிக்கை
இந்தப் போட்டிசம்பந்தமான விதிமுறைகளை நான்நன்கு வாசித்தறிந்ததோடு சகல விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவேனெனவும் உறுதியளிக்கிறேன். நீரிழிவு அற்ற இலங்கை அமைப்பானது என்னால் தயாரிக்கப்பட்ட உணவை அல்லது அதன் புகைப்படத்தை இலத்திரனியல் அல்லது அச்சிட்ட முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகப் பயன்படுத்தக் கூடுமென்பதை அறிந்து கொண்டுள்ளேன். நீரிழிவு அற்ற இலங்கை அமைப்பின் தீர்ப்பே இறுதியானதெனவும் அறிந்து கொண்டுள்ளேன். இந்தப் படைப்பானது எனது சொந்த ஆக்கம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றேன்.
……………………………. …………………………….
கையொப்பம் திகதி