கொள்ளு சுண்டல்
செய்முறை
கொள்ளை, உப்பு, போட்டு அவித்து எடுத்து வைக்கவும். தாச்சியில் எண்ணெய் விட்டு, கடுகு, உழுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, செத்தல் மிளகாய் இஞ்சி துருவல், பெருங்காயத்தூள், சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அவித்த கொள்ளு, தேவையான உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய்ப்பூ போட்டு கிளறி இறக்கவும்.
தேவையான பொருட்கள்
கெள்ளு | 1கப் |
செத்தல் மிளகாய் | 2 |
கடுகு | ½மே.க |
சீரகம் | ½மே.க |
உளுத்தம்பருப்பு | ½மே.க |
இஞ்சி துருவல் | 1 மே.க |
கறிவேப்பிலை | தேவையானளவு |
தேங்காய்ப்பூ | சிறிதளவு |
உப்பு | தேவையானளவு |
எண்ணெய் | சிறிதளவு |
பெருங்காயத்தூள் | ½மே.க |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி லலிதாம்பிகை மகாதேவன்
Posted in சிந்தனைக்கு