செய்முறை
பயற்றம்மாவை சிறிது உப்பு சேர்த்து ரொட்டி பதத்திற்கு குழைக்கவும். தட்டையாக தட்டி எண்ணெய் பூசிய தட்டில் போட்டு அவிந்ததும் மறுபக்கம் பிரட்டி எடுக்கவும். பின் அதை சிறு துண்டுகளாக்கவும். கரட்டை தோல் நீக்கி கழுவி உராய்கருவியில் உரோஞ்சிக் கொள்ளவும். வெங்காயம் மிளகாயை சுத்தமாக்கி அளவாக வெட்டிக் கொள்ளவும். சீவிய கரட்டை சிறிது வாட்டிக் கொள்ளவும். வெங்காயம், மிளகாயை தாளித்து பதம் வந்ததும் கரட்டை அதனுள் கொட்டிகிளறவும். சிறிது நேரத்தின் பின் முட்டையை அதனுள் விட்டு கிளறவும். பின் துண்டுகளாக்கப்பட்ட பயற்றம்மா ரொட்டியை அதனுள் போட்டு பிரட்டி பதமாக எடுக்கவும் இளஞ்சூடான பதத்தில் உண்ண சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பயற்றம் மா | ½Kg |
கரட் | ¼Kg |
முட்டை | 2 |
செத்தல் மிளகாய் | 10 |
வெங்காயம் | 10 |
உப்பு | தேவையானளவு |
பெருஞ்சீரகம் | சிறிதளவு |
கடுகு | சிறிதளவு |
கறிவேப்பிலை | சிறிதளவு |
பச்சை மிளகாய் | 5 |
சூரியகாந்தி எண்ணெய் | சிறிதளவு |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி.கோமதி சந்திரகுமார்