இன்றைய வாழ்வில் பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எனினும் தொடர்ந்து உணவு விடயத்தில் நீண்டநாள் பிளாஸ்ரிக் பொருள்களின் உபயோகம் ஆபத்தானது.
அத்துடன் நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமுகமாக பல்கி பெருகிவரும் கேளிக்கை சாதனங்கள் – உதாரணமாக ரேடியோ, ரீவி, கணினிவோக்மேன், ஐபாட் போன்ற பல புதிய பொருள்கள் இவை எல்லாம் நம்மை சந்தோசமாக வைத்திருக்கும் என்ற அவ நம்பிக்கையிலே மேலும் புதிது புதிதாக சந்தைக்கு வரவழைத்ததுக் கொண்டு இருக்கின்றோம். எனினும் இவை அனைத்தும் நம்மை இயற்கை சார்ந்த உணவு அற்று பல மணிநேரம் எம்மை வெகு தொலைவில் வைத்திருப்பதால் தேவையற்ற உடல், உள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. (கண் பாதிப்புகள், காது கேளாமை, மன உளைச்சல்) தொடர்ச்சியான பிளாஸ்ரிக் பாவனையால் சுகாதார பிரச்சினைகள், மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களை எரிப்பதால் வெளியேற்றப்படும் வாயுக்களால் சுவாசநோய் பாதிப்புக்களும் ஏற்படு கின்றன.
எனவே பிளாஸ்ரிக் பொருள்கள் சில நிமிடம் பயனை தந்து விட்டு சில நூற்றாண்டுகளுக்கு எமக்கும் இந்த மண்ணுக்கும் தீராத தீமையைத் தந்துவிட்டு போகின்றன. எனவே பிளாஸ்ரிக் பொருள்கள் பாவனையையும் பாதிப்பையும் குறைப்பதற்கு ஒரு சில ஆலோசனைகள் பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்தும் போது பாதுகாப்பான முறையில் அப்புறப் படுத்துவது உதாரணம். பிளாஸ்ரிக் பைகள், கழிவு நீர்க் கால்வாய்களை அடைகின்றன மண்ணில் புதைந்து நிலத்தடி நீரினை மாசடைய வைக்கின்றன. மரங்களின் வேர்களை வளர முடியாது. தடுக்கின்றன. உங்கள் வீட்டிலிருந்து தூரத்தில் கிடங்கில்போட்டு சுவாசத் துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியுங்கள்.
அல்லது உங்கள் வீட்டில் சேரும் கழிவுகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து மாநரக துப்புரவு பணியாளர்களின் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்துங்கள். பிளாஸ்ரிக் கழிவுகளையும் ஏனைய கழிவுகளையும் சரியான முறையில் தரம் பிரித்து கழிவு அகற்றும் துப்பரவு பணியாளர்களை கெளரவிக்க வேண்டும்.
கண்ணாடி பால் புட்டிகளில் உங்கள் குழந்தைகளுக்கு கூடிய அளவுக்கு தாய்ப்பால் ஊட்டுங்கள். கண்ணாடி பால்புட்டிகளை பாதுகாப்பான முறையில் உபயோகியுங்கள். பினாஸ்ரிக் பால் புட்டிகளாயின் தரமான பால்
புட்டிகளை கேட்டு வாங்குங்கள்.
அதிக சூட்டுடன் பால்மாவை கரைத்து அதற்குள் விடாதீர்கள் உங்கள் வீடுகளில் பிளாஸ்டிக் Jug/cup களில் தொடர்ந்து சுடுநீர் கொதிக்க வைக்கும்போது சில இரசாயனங்கள் வாயுக்கள் நீரில் கலக்க வாய்ப்பு எனவே எப்போதும் ஆபத்து இல்லாத மண் பாத்திரங்களில் நீரை கொதிக்கவையுங்கள். எனினும் பிளாஸ்ரிக் Jug/cup போன்ற அமைப்புடைய பாத்திரங்களை சந்தைகளில் பெறுவது சிரமமாக உள்ளது. எனவே இவற்றைப் பெறுவதற்கு முயலுங்கள். புதிய முறைகளை கண்டறிய முயலுங்கள். விலங்கினங்கள் பொலித்தீன் பைகளை உண்டு மடிகின்றன. நோய்வாய்படுகின்றன. கலிபோனியாவில் செய்த ஆய்வில் வாழும் மீன்களும் பிளாஸ்ரிக் பொருள்களை உண்ணும்போது பப்படுகின்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பிளாஸ்ரிக்கின் நன்மை தீமை பற்றி அறிந்து எமது சமூகத்தில் வாழும் கல்வி மான்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக நலன் விரும்பிகள் அனைவரும் இதற்கான மாற்றத்தை உருவாக்க முயல வேண்டும். உருவாக்க வேண்டும். சட்டங்கள் காதி மட்டும் இல்லாது செயலிலும் செய்து காட்டவேண்டும். மறு சுழற்சிக்குரிய பிளாஸ்ரிக்கை உபயோகப்படுத்தும்போது சூழல் மாசுபடுவது தடுக்கப்படுகின்றது மறுசுழற்சிக்குரிய பிளாஸ்ரிக்கை நாம் கூடுதலாக உபயோகப்படுத்துவது மிகவும் சிறந்தது. கடைகளுக்கு செல்லும்போது துணிப்பை,கடதாசிப்பையை உபயோகப்படுத்துவதனால் சுகாதாரப் பிரச்சினைகளையும் சூழல் மாசடைவதையும் தடுக்க முடியும்.
எஸ்.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்
நீரிழிவுச் சிகிச்சை நிலையம்.
யாழ். போதனா வைத்தியசாலை