முதல் பகுதியை பார்வையிடுவதற்கு..
5. நெஞ்சு இறுக்கமாதல்
ஒரளவு வளர்ந்த பிள்ளைகள் இந்த நிலையைக் கூறக்கூடியவர்களாக இருப்பர்.
தொய்வு நோய் நிர்ணயம் செய்வதில் ஏனைய நோய்நிலைகளை அறிய வினவ வேண்டிய கேள்விகள்.
- இந்த நிலை எப்பொழுது ஏற்பட்டது?
- எவ்வளவு காலம் பிரச்சினையாக உள்ளது?
- அவ்வாறு என்ன காரணிகளினால் அதிகரிக்கின்றது?
என்பவற்றை வினாவிய பின்னர் பின்வருவனவற்றை அறிதல் வேண்டும்.
- பிள்ளைக்கு இதற்கு முன் எவ்வாறு இருந்தது? அடிக்கடி இழுப்பு வருகின்றதா? சுவாசிக்கும் போது சத்தம் ஏற்படுகிறதா?
- குழந்தைக்கு இடையூறாக இருமல் குறிப்பாக இரவில், கடுமையாக அமைதல் அல்லது விடிய நித்திரை விட்டு எழும்பும் போது இருமல் ஏற்படுகின்றதா?
- குழந்தையின் நித்திரை இருமலினால் குழம்புகின்றதா?
- குழந்தை விளையாடிய பின்னர் உடற்பயிற்சியின் பின், அல்லது அழுத பின் இருமுகின்றதா?
அடுத்து
- குழந்தை குறித்த பருவகாலத்தில் மூச்செடுக்கக் கஷ்டப்படுகின்றதா?
- குழந்தைக்கு இருமல் இழுப்பு, நெஞ்சு இறுக்கமடைதல், வளியில் உள்ள மாசுக்களைச் சுவாசித்தல் பாதிப்பை ஏற்படுத்துகின்றதா? பொதுவாக புகை, வாசனை, புடங்கள், நாய், பூனை என்பவற்றின் மயிர்
- குழந்தைக்கு தடிமன் ஏற்படும் போது, நெஞ்சுச்சளி ஏற்படுகின்றதா?
- குழந்தைக்கு இவ்வாறான அறிகுறிகள் நீங்குகின்றனவா?
மேற்கூறிய கேள்விகளின் போது ஆம் என்ற பதில் கிடைப்பின் தொய்வு நோயினதாகக் கருதப்படும்.
தொய்வு நோயின் ஏனைய இயல்புகள்
- காய்ச்சலின்மை பொதுவாகக் காணப்படும்
தொற்று நிலையில் தொய்வு வரும்போது காய்ச்சல் இருக்கும் வைரஸ் தொற்றின் பின் நீண்ட நாள்களுக்கான இருமல் அல்லது முட்டு இழுப்புக் காணப்பட்டல் என்பன தொய்வு நோயின் அறிகுறி. - ஒவ்வாமை உடையோர்.
தொய்வு அழற்சி நிலை யாரும் ஒருவருக்கு அல்லது குடும்பத்தில் காணப்படலாம். - உடற்பயிற்சி செய்யும் போது சிரமம் ஏற்படும்.
சிறுபிள்ளைகள் சிரித்தல், அழுதல் என்பன அறிகுறிகளாகக் காணப்படும். இது தொய்வுக்கு அடையாளம். - தூண்டிகள்
ஒவ்வாமை மூலம் ஆஸ்துமாவை ஏற்படுத்தக் கூடியவை – தூசு, மகரந்த மணிகள், விலங்கின் மயிர்கள், கரப்பான் பூச்சி எச்சம், பங்கசு, குளிர்காற்று, புகை, சிகரெட் புகை, உண்ணிகள் நாற்றம், வாணவெடிப்புகை, நுளம்புத்திரிப் புகை
தொய்வு நோயைப் பரிசோதிக்கும்போது காணக்கூடியவை
- சுவாசித்தலில் கஷ்டம்
வெளிச்சுவாசம் சத்தத்துடன், சுவாசத்தில் மேலதிக தசைகளின் செயற்பாடு. குழந்தைகளுக்கு பால் குடிக்க கஷ்டம், சௌகரியமான , எளிதில் அழும் நிலை - இருமல்
- தொடர்ச்சியாகக் காணப்படல்
- விட்டு விட்டுக் காணப்படல்
- இரவில் காணப்படல்
- உடற்பயிற்சியின் போது காணப்படல்
- ஏனைய அழற்சி நிலைகள் காணப்படல்.
எக்சிமா, மூக்கழற்சி, மழை பெய்தபின் ஏற்படும் காய்ச்சல், நிலை அல்லது உயரம் வளர்ச்சியை அறிய அறிகுறிகள் இல்லாது இடையே பரிசோதிக்கும் போது சாதாரணமாக குழந்தை இருக்கலாம்.
தொய்வு நோயளிகளில் பரிசோதிக்க வேண்டியவை.
அதி உச்சவெளி மூச்சு வீதம் (PEFR)
- அதிஉச்சவெளி மூச்சு வீதம் B2 agonist பாவித்த பின் 15 வீதம் அதிகரிப்பு குறைந்த நேரத்தில் தொழிற்படும்.
- அதிஉச்சவெளி மூச்சு வீதம் 15 வீதம் குறைவு உடற்பயிற்சியின் போது ஏற்படுகின்றது.
- அதிஉச்சவெளி மூச்சு வீதம் காலை, மாலை வேறுபாடு 10 வீதம் அதிகமாக இருப்பின் மருந்து எடுக்காத போது.
- அதி உச்சவெளி மூச்சு வீதம் காலை 20 வீதம். காலை மாலை வேறுபாடு சுவாசக்குழாய்ச் சுருக்கத்தளர்த்திகள் எடுக்கும் போது இருக்கும்
குறைந்த அளவு காலையிலும், கூடிய அளவு 12 மணித்தியாலம் கழிந்த பின்பும் காணப்படும். இதைத்தவிர வேறு பரிசோதனைக்கு ஈடுபடத் தேவையில்லை. ஆய்வுகூடப் பரிசோதனைகள் தொய்வு நோயை இனங்காண உதவுவதில்லை. அதனை விடுத்து மருத்துவ சோதனை விவரத்தினால் நோய் நிர்ணயம் செய்யப்படல் வேண்டும்.
தொய்வு நோயைச் சிறுவர்களில் நிர்ணயம் செய்தல்.
- தொய்வு நோய்க்குரிய இயல்புகள் காணப்படல்.
மூன்று தடவைகளுக்கு மேல் சுவாசப் பாதையில் சுருக்கம் ஏற்பட்டதுடன் தொய்வு நோய்க்குரிய ஏனைய இயல்பாகப் பின்வரும் பல இயல்புகள் காணப்படல்.
காய்ச்சலின்மையுடன் இருமல்
ஒவ்வாமை இயல்பு உடைமை
ஒவ்வாமைத்தன்மை, பெற்றோர், குழந்தைகளில் காணப்படல்.
இரவில் நோய்த்தன்மை கூடுதல்.
உடற்பயிற்சி செயற்பாடுகளின் போது அதிகரித்தல்.
காலநிலை மாற்றத்தினால் அறிகுறிகள் அதிகரித்தல்.
சுவாசவழிச் சுருக்க நிவாரணிகள் மூலம் குணமாதல், மேலும் சுவாச வழிச் சுருக்க தடுப்பு மருந்துகள் மூலம் குணமாதல் - தொய்வு என நோய் நிர்ணயம் செய்தல்.
குருதிப் பரிசோதனை, நெஞ்சு ஊடுகதிர்ப் படம் என்பன உதவும். - நோயின் தீவிரத்தன்மையை அளவிடல்
மாறுபட்ட வெளிப்பாடுகளாக தொய்வு அல்லாத நோய்க்குரிய இயல்புகள் காணப்படல்.- குழந்தை 6 மாதங்களுக்கு முன்னரே சுவாசிக்கக் கடினம் ஏற்படுதல்.
- அசாதாரணமான அறிகுறிகள்
- மீளமீளத் தொடங்கி அறிகுறிகள் தொடர்ச்சியாக இருத்தல்.
வேறு வேறு நோய் நிலைகள் உள்ளனவா எனக் கருதல் வேண்டும். ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். வேறு நோய்நிலைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தல் . தொய்வு நோய் இருக்கும் எனக் கருதல்.
ஆய்வுகள்
சுவாசத் தொழிற்பாட்டுக் கணியங்களை ஆய்வுக்கு உதவியெனக் கருதுதல் அத்துடன் மருந்தை அளித்து நோய் குணமடைகின்றதா என அவதானித்தல் பின் தொய்வு நோய் நிர்ணயம் செய்தல்.
தொய்வு நோயை அடையாளம் காணுவதில் அவதானிக்க வேண்டிய மாற்றுநிலைகள்
- சுவாசக் குழாய்ச் சுருக்கம்
ஆரம்பக் குழந்தைப் பருவத்தில் தொய்வையும், சுவாசக்குழாய் அழற்சியையும் வேறு படுத்தக்கூடியனவாக அமையும். ஆஸ்துமா நோய் சிறுவயதில் அரிது. ஆகையால் மிகவும் அவதானமான மருத்துவ பரிசோதனை இன்றியமையாதது. நெஞ்சு ஊடுகதிர் படமும் அவசியம். ஏனெனில் நிலைகளை கண்டறிய அவசியமானதாகும். - குருதியில் இயோசினவில் கலங்கள் அதிகரித்த நிலை.
இதன் அறிகுறிகள் தொய்வு போல் தோற்றம், காய்ச்சலும் இந்த நிலையைக் கண்டறிதல் கடினம். ஆனால் Eosionphil அளவு 3000/mm அதிகமாயின் ஈயோசினோபீலியா. - காசநோய் எமது பிரதேசத்தில் பொதுவான நோய்.
ஆனால் தவறான நோய் நிர்ணயத்துக்கு உட்படலாம். சரியான மருத்துவப் பரிசோதனை, நெஞ்சு ஊடுகதிர் பரிசோதனை, நெருங்கிய உறவினருக்கு காசநோய் ஏற்பட்டமை என்பன காசநோய் நிர்ணயத்துக்கு உதவும். - வேற்றுப் பொருள்கள் காணப்படல்,
ஏதாவது சிறிய கடலை போன்ற பொருள்களை உட்கொள்ளும்போது புரைக்கேறல், சடுதியாக ஏற்படும் அறிகுறிகள், குறித்த பகுதியில் காணப்படும் அறிகுறிகள், அசாதாரண நெஞ்சு ஊடு கதிர்ப்படம் சிகிச்சைக்குப் பயன்தராமை இந்த நிலையைக் குறிக்கும். - வைரஸ் தொற்றினால் ஏற்படும் அழற்சி நிலை
குழந்தைகள் திரும்பத்திரும்ப வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாவதால் குறிப்பாக RSV ( Respiratory Syncytical Virus) ஏற்படும் அறிகுறிகள் ஆஸ்துமா நோய் போலமையும். ஆனால் அவை அதிக காலத்துக்குப் பின் மறைந்து இல்லது போய்விடும். தொடர் சிகிச்சையை அல்லது மருத்துவக் கண்காணிப்பின் அவசியம் தொய்வு நாட்பட்ட நோயாக அமைவதால் நீண்ட காலத்துக்கு மருத்துவ சிகிச்சை அவசியம். ஒழுங்காக நோயாளி பார்க்கப்படல் வேண்டும். எனவே ஒவ்வொருவரும் தமது பிள்ளைகளில் நோய் ஏற்படும் போது ஒழுங்காக இடைவெளியில் வைத்திய ஆலோசனை பெறப்படலை உறுதிப்படுத்தல் வேண்டும்.
முதலாவது பின் தொடர் சிகிச்சை முதல் கிழமையினுள் அமைதல் வேண்டும். ஆனால் அதற்குப் பின் நோய் அறிகுறிக்கு ஏற்ப அமையும். ஆரம்பத்தில் குழந்தைக்கு மருந்து ஒழுங்கான முறையில் அளிக்கப்படுகின்றதா என்பதை வைத்தியர் பரீட்சித்துப் பார்த்தல் அவசியம். - வளர்ந்தோரில் தொய்வு நோய்
வளர்ந்தவர்களில் தொய்வு நோய் அவர்களின் அன்றாட வேலையைப் பாதிக்கலாம். சிறப்பாக மருந்துகளை உள்ளெடுப்பதால் எவ்வித சிரமமுமின்றி தமது கருமங்களை ஆற்ற முடியும். இளம் பெண்களில் தொய்வு அவர்களது திருணமத்தில் தாக்கத்தைச் செலுத்தலாம். சுவாச மூலம் உள்ளெடுக்கும் மருந்துகளால் தொய்வு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். திருமணத்துக்கு ஆஸ்துமா நோயை மறைக்க வேண்டிய அவசியமில்லை. சமூகத்தில் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவருக்கு ஆஸ்துமா நோய்த்தாக்கம் உள்ளது.
பெரும்பாலான இளவயது தொய்வு நோயாளிகள் தமக்கு நோய்நிலை உள்ளதைக் கணடறியாது இருப்பர். அடுத்து வைத்தியர்கள் ஆஸ்துமா நோய் உண்டெனக் கூறினாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவ்வாறு ஏற்றுக்கொண்டாலும் சுவாச மூலம் உள்ளெடுக்கும் மருந்துகளை உபயோகிக்க விரும்பமாட்டார்கள். இவை சிறந்த வழிப்புணர்வு மூலம் அகற்றப்படல் வேண்டும். - ஆஸ்துமா நோய்க்கான சிகிச்சைகயில் மூச்சு உட்செலுத்திகளின் பயன்பாடு
இரண்டு வகையான வேதிமூச்சு உட்செலுத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.- அளவிடப்பட்ட ஆவிநிலை வேதிமூச்சு உட்செலுத்திகள் (Metered Dose Inhaler) இவ்வகை மூச்சு வாங்கியில் சிறிய குடுவையினுள் மருந்து உயர் அமுக்கத்தில் அடக்கப்பட்டுள்ளது. குடுவையில் உள்ள சிறிய திறக்கும் பகுதியை அமுக்கும்போது உள்ளிருக்கும் மருந்து ஒரு குறிப்பிட்ட அளவு மாத்திரமே ஆவிநிலையில் வெளிவரும்.
- உலர்துகள் வேதிமூச்சு உட்செலுத்திகள் (Dry Powder Inhalers) இந்த ஆவிநிலைவேதி மூச்சினுட்செலுத்தி மருந்துகளை முதலில் கொண்டிருப்பதில்லை. இந்தக் கருவிக்கான மருந்து கூட்டுக்குளிசை வடிவிற் கிடைக்கும். மருந்தை நுண்ணிய துகள்களாக வெளிவிடும் பொறிமுறை இதில் உள்ளது.
வாய்வழியாக உட்கொள்ளும் மாத்திரைகளை விட மூச்சு உட்செலுத்திகள் சிறந்தவை ஆகும். நாம் குளிசைகள் பாவிக்கும் போது அது குடலினால் அகத்துறிஞ்சப்பட்டு குருதி மூலம் உடலின் எல்லாப்பகுதிக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அந்த மருந்தின் ஒரு சிறுபகுதியே சுவாசக் குழாயினுள் சென்றடைகின்றது. குருதி மூலம் மற்றைய உடலுறுப்புக்களுக்குக் கொண்டு செல்லப்படும் மருந்து வாய்மூல மாத்திரைகளாயின் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
ஆனால் மருந்துகளை வேதிமூச்சு உட்செலுத்தி மூலம் பாவிப்பதன் மூலம் மிகவும் சொற்பமான மருந்தே பாவிக்கப்படுகின்றது. இது நேரடியாக வாயில் வைத்து சுவாசக்குழாய்க்குள் செலுத்தப்படுவதனால் தேவையான அளவு மருந்து நேரடியாகச் சென்றடைகின்றது. அத்துடன் குருதியில் கலக்கும் மருந்தின் அளவு மிகக் குறைவாக உள்ளது.
ஆவிநிலை வேதிமூச்சு உட்செலுத்தி பாவிக்கும் முறை
- வாய்ப்புறத்தில் உள்ள மூடியை அகற்ற வேண்டும்.
- மூச்சு வாங்கியைச் செங்குத்தா தாங்கிப்பிடித்தபடி நக்கு குலுக்க வேண்டும்.
- மெதுவாக ஆறுதலாக இயக்றவரை வெளிசுவாசிக்க வேண்டும்.
- மூச்சு வாங்கயை பற்களுக்கிடையில் வைத்த பின் உதடுகளால் மூச்சு வாங்கியின் வாய்ப்பகுதியை மூடிக்கொள்ள வேண்டும்.
- தலையை சிறிதளவு பின்புறம் சாய்த்து வாயினூடாக மெதுவாக சுவாசித்தபடி கொள்கலனின் மேற்பரப்பு மீது இறுக்கமாக கீழே அழுத்த வேண்டும். அப்பொழுது நிலையாகவும் ஆழமாகவும் சுவாசிப்பதைத் தொட வேண்டும்.
- இயலுமானவரை உட்சுவாசித்தபின்பு மூச்சு வாங்கியை வாயிலிருந்து அகற்ற வேண்டும். பத்து வினாடிகளுக்கு அல்லது வசதியான நேரத்துக்கு மூச்சை அடக்கி வைக்க வேண்டும்.
- பின்னர் மெதுவாக வெளிச்சுவாசிக்க வேண்டும்.
தொடரும்……
மருத்துவர் . சி. யமுனானந்தா MBBS.DTCD