செய்முறை
இராசவள்ளிக் கிழங்கினை நன்கு தோல் சீவி சுத்தப்படுத்தவும், பின்னர் கழுவவும். சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ½ ரம்ளர் தண்ணீர் விட்டு மூடிய பாத்திரத்தில் அவிக்கவும். நன்கு அவிந்ததும் நன்கு மசிக்கவும். பின்னர் அதனுள் பயறு, கௌபி, என்பவற்றினை இடவும். உழுத்தம்மாவை பாலில் கரைத்து அப்பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடிப்பிடியாத வண்ணம் கிளறவும். உழுத்தம்மா நன்கு வெந்ததும் அதனுள் சாறு வகைகளை விட்டு நன்கு இறுகி வரும் வரை கிளறவும். பின்னர் இறக்கி சூடு ஆறியதும் பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்
இராசவள்ளிக் கிழங்கு | 200 கிராம் |
உழுத்தம் மா | 1 மேசைக்கரண்டி |
பால் ( காய்ச்சியது) | 1 கப் |
பயறு (ஊறவைத்தது) | 1 மேசைக்கரண்டி |
கௌபி (ஊறவைத்தது) | 1 மேசைக்கரண்டி |
குறிஞ்சா (சாறு) | 1 மேசைக்கரண்டி |
சாத்தாவாரி (சாறு) | 2 மேசைக்கரண்டி |
தண்ணீர் | ½ ரம்ளர் |
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி. விகிதமாலா ஜீவானந்தன்