தடுப்புத்திட்டம்
ஏற்பு வலியானது வளர்ந்துவரும் நாடுகளில் மக்கள் எதிர்நோக்குகின்ற ஒரு பிரச்சினைக்குரிய நோய் ஆகும். குளஸ்ரியம் ரெட்ரனி எனும் பக்ரீறியா கிருமியில் இருந்து வெளிப்படும் நச்சுத்தன்மை (Toxin) எமது குருதியில் கலப்பதால் இந்த நோய் ஏற்படுகின்றது.
எனவே மேற்படி கிருமிகள் நச்சுத்தன்மையை செயல் இழக்கச் செய்து தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை (Toxoid) எமது உடலுக்குள் செலுத்துவதன் மூலம் இதற்கு எதிரான பிறபொருள் எதிரிகளை எமது உடலுக்குள் உருவாக்குவதன் மூலம் இந்த நோய் வருவதைத் தடுக்க முடியும்.
எனவே இந்த விரிவுபடுத்தப்பட்ட நீர்ப்பீடினத் திட்டத்தில் குழந்தைகள், வளர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஒழுங்காகவும் சீராகவும் சரியான இடைவெளியிலும் எடுப்பதால் ஏற்ப்புக்கு எதிரான சீரம் எமது குருதியில் தொடர்ச்சியாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்தத் தடுப்பு மருந்தானது தனியாகவும், கூட்டு முறையிலும் தயாரிக்கப்படுகின்றது. இதில் குழந்தைகளுக்கு பென்ராவுலன்ற் தடுப்பு மருந்தானது2ம் மாதம், 4ம்மாதம், 6ம் மாதம் முடிவில் வழங்கப்படுகின்றது.
இதில் ஏற்புவலி, குக்கல், தொண்டைக்கரப்பான், உட்பட கெப்பற்றைரிஸ் B ( Hepatais B) மற்றும் கிமோபிஸஸ் இன் புழுவென்சா ( Haemophilus Influenzae Type -B) வகைகளுக்கு எதிரான தடுப்பு மருந்தாகும்.
அத்துடன் 18ம் மாதமுடிவில் DTP எனும் முக்கூட்டு தடுப்பூசியானது, தொண்டைக்கரப்பான், ஏற்புவலி, குக்கல் போன்றவற்றுக்கு எதிராக வழங்கப்படுகின்றது.
அதேபோல் 5வயது பூர்த்தியாகும்போது DT எனும் இரு கூட்டு தடுப்பூசி, தொண்டைக்கரப்பான், ஏற்புவலிக்கு எதிரான தடுப்பு மருந்தாக கொடுக்கப்படுகின்றது. அத்துடன் 12 வயது முடிவில் போடப்படும் atd (adult tetanus Diphtheria) ஆனது தொண்டைக்கரப்பான், ஏற்புவலிக்கு எதிரான தடுப்பு மருந்தாகும்.
தடுப்பூசி வழங்கப்படும்போது வழங்கப்படும் அட்டைகளைத் தொடர்ந்து வைத்திருத்தல் நல்லது. அது தொடர் சிகிச்சைக்கு உதவும்.
குழந்தைகளுக்கான ஏற்பு தடுப்புத் திட்டம் 2011
- இரண்டாம் மாதம் முடிவில்
- நாலாம் மாதம் முடிவில் – பென்ராவலன்ற் Pentavalent ( ஏற்புவலி, தொண்டைக்கரப்பாண், குக்கல் Hepatatis B, Haemophilus Influenzae எதிரான மருந்து)
- ஆறாம் மாத முடிவில்
- 18 ம் மாத முடிவில் முக்கூட்டுத் தடுப்பூசி – DTP (ஏற்புவலி, தொண்டைக்கரப்பான், குக்கல்)
- இரு கூட்டுத்தடுப்பூசி – DT 5th ஐந்தாவது வயது முடிவில் ( ஏற்புவலி தொண்டைக்கரப்பான்)
- பன்னிரண்டாவது வயது முடிவில் ATD (adult tetanus Diphtheria)
வளர்ந்தோருக்கான ஏற்புவலி தடுப்பூசி மருந்து
இந்த ஐந்து தடுப்பூசிகளும் ஒழுங்கான முறையில் போடப்பட்டால் வாழ்நாள் முழுவதும் ஏற்புவலிக்கான தடுப்பசி போடத்தேவையில்லை.
1ஆவது தடுப்பூசி – காயம் அல்லது விபத்து ஏற்பட்ட அன்று
2 ஆவது தடுப்பூசி – 1ஆவது தடுப்பூசியிலிருந்து 28ஆவது நாள் போடப்படும்.
3 ஆவது தடுப்பூசி – 2 ஆவது தடுப்பூசியிலிருந்து 6 ஆவது மாதம் போடப்படும்.
4 ஆவது தடுப்பூசி – 3 ஆவது தடுப்பூசியிலிருந்து 5 ஆவது வருடம் போடப்படும்.
5 ஆவது தடுப்பூசி – 4 ஆவது தடுப்பூசியிலிருந்து 10 ஆவது வருடம் போடப்படும்.
எஸ். சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்
யாழ் போதனா வைத்தியசாலை