அடைபிரட்டல் (ரொட்டி, இட்லி)
செய்முறை
கடாயில் எண்ணெய் சூடானதும் வெங்காயம் முதலில் போட்டு வதக்கவும், வதக்கியதும் இஞ்சி, பூண்டு கலவை போட்டு சிறிது நேரம் வதக்கவும் பின் கரட், பீன்ஸ் கிழங்கு போட்டு வதக்கவும், மெல்லிய சூட்டில் மூன்றும் வேகும் வரை வதக்கி உப்பு போட்டு கிளறவும், பின் அடையின் நடுவே வைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம். விரும்பினால் மிளகுதூள் தூவலாம்.
தேவையான பொருட்கள் | அளவு |
அடை | 5 துண்டு (ஆட்டமாவில் செய்தது) |
வெங்காயம் | 1கப் (மிகச் சிறிதாகவெட்டவும்) |
உ.கிழங்கு | 1 (வெட்டவும்) |
பீன்ஸ் | விரும்பிய அளவு |
கரட் | 1 |
நல்லெண்ணைய் | தேவையான அளவு |
உப்பு | தேவையான அளவு |
இஞ்சி, பூண்டு | அரைத்தது ( விரும்பினால்) |
இரவு நேர உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய சத்துமிக்க உணவு
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – MS.இ.நகுலேஸ்வரி
Posted in சிந்தனைக்கு