தற்போது யாழ் குடாநாட்டின் ஏனைய பிராந்திய வைத்தியசாலைகளும் போதிய வைத்திய வசதிகளைக் கொண்டிருந்தும் அநேகமான நோயாளர்கள் தமது சிறிய சிறிய மருத்துவப் பிரச்சினைகளுக்குக் கூட யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருவதையே பழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்கள் அநாவசியமான நேரத்தைச் செலவு செய்வதுடன் போக்குவரத்துக்கும் அதிக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க ஒவ்வொருவரும் தமது பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள அரசாங்க வைத்தியசாலையில் தமக்கு வேண்டிய அதி உச்ச மருத்துவப் பயன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சியெடுப்பது நல்லது. கடுமையான நோயாளர்களை பிரதேச வைத்தியசாலையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் அனுப்புவதற்கான ஒழுங்குகளும் காணப்படுவதால் நோயாளர்கள் தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்வதற்கு பின் நிற்க வேண்டிய அவசியமில்லை.