மூன்று பேரின் உயிர்க்கலங்களை கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கின்றது.
மனித செல்கள் ஒவ்வொன்றலும் ஒரு நியூக்ளியஸீம் பல மைடோகாண்ரியாக்களும் இருக்கும். மனித சல்களில் இருக்கும் இந்த மைடோகாண்ட்ரியாக்கள் பெண்களின் கரு முட்டைகளிலும் இருக்கும். செல்களில் இருப்பதைப் போலவே ஒவ்வொரு கருமுட்டையிலும் ஒரு நியூக்ளியஸீம் பல மைடோகாண்ரியாக்களும் இருக்கும்.
சில பெண்களின் கரு முட்டைகளில் இருக்கும் மைடோக்காண்ரியாக்கள் பாதிப்படைந்திருக்கும். இப்படி பாதிப்படைந்த மைடோக்கான்ரியாக்கள் இருக்கும் கரு முட்டையில் இருந்து உருவாகும் குழந்தைகளின் செல்களில் இருக்கும் மைடோக்காண்ரியாக்களும் பாதிக்கப்பட்டிருக்கும். அது அந்தக் குழந்தைகளின் உயிரையே பறிக்கும் அளவிற்கு மோசமான பரபணு நோய்களை உண்டாக்கும்.
பாதிக்கப்பட்ட பெண்களின் கரு முட்டையில் இருக்கும் சேதமடைந்த மைடோக்கான்ரியாக்களை அகற்றிவிடுவது அந்த கருமுட்டையில் இருக்கும் நியூக்ளியஸ்மட்டும் அப்படியே இருக்கும். அடுத்து வேறோரு பெண்ணின் கருமுட்டையில் அப்படியே இருக்கும். அடுத்து வேறொரு பெண்ணின் கருமுட்டையில் இருந்து பாதிக்கப்படாத ஆரோக்கியமான மைடோகாண்ரியாக்களை மட்டும் தனியாக பிரித்து எடுப்பது இப்படி பிரித்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான மைடோகாண்ரியாக்களை முதல் பெண்ணின் கருமுட்டைக்குள் செலுத்துவது மூன்றாவது கட்டம்.
இதன் நான்காவது கட்டமென்பது இப்படி ஒரு பெண்ணின் நியூக்ளிஸையும் மற்ற பெண்ணின் மைடோக்காண்ரியாக்களையும் தன்னுள் கொண்டிருக்கும் இந்த கரு முட்டைக்குள் விந்தணுவை சேர்த்து கருவுறச் செய்வது.
இதை மாற்றி மைடோகாண்ரியாக்களை பாதிக்கப்பட்ட பெண்ணின் கருமுட்டையில் இருக்கும் நியூக்கிஸை மட்டும் தனியாக பிரித்து எடுத்து ஆரோக்கியமான மைடோகாண்ரியாக்களை கொண்டிருக்கும் பெண்ணின் கருமுட்டைக்குள் இருக்கும் நியூக்ளியஸை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்த முதல் பெண்ணின் நியூக்ளியஸை பதியவைத்து அந்த கருமுட்டையை கருவுறச் செய்யும் நடைமுறையும் செய்யப்படுகிறது.
இந்த விஞ்ஞான முயற்சி முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். மைடோகாண்ரியாநோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்து மோசமாக பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கிலான இந்த மருத்துவ முயற்சி வரவேற்கத்தக்கது என்கிறார்கள் மருத்துவர்கள்.
சாதாரணமாக ரத்ததானம் செய்வதைப் போலத்தான் மைடோகாண்ரியாக்களையும் தானம் செய்கின்றார்கள். எனவே பிறக்கும் குழந்தையானது அவரது மரபணுக்களை கொண்டிருக்காது இந்த குழந்தையின் தோற்றம் உள்ளிட்ட அனைத்து வகையான மரபணுக்கூறுகள் அனைத்துமே அதனது கரு முட்டையின் நியூக்ளியானது கொடுத்த உண்மையான தாய் மற்றும் அதை கருவுறக்காரணமான விந்தணுவைக் கொடுத்த தந்தையிடம் இருந்து மாத்திரமே வருவதால் இந்த குழந்தைக்கு மூன்று பேர் பெற்றோர் என்பது தவறான கருத்து என்றும் மருத்துவர் கூறுகின்றனர்.
நன்றி