வைத்தியர் : பிள்ளையின் நிறை போதாது……
தாய் :இவவுக்கு இப்ப ஒரு வயது. கிலோ இருக்கிறதா ,மூத்த மகனும் ஒரு வயதில் கிலோ இருந்தவர். குறைவு என்று காட்டேலை. அதுதான் இவவையும் கூட்டிவரேல்லை.
வைத்தியர்: இரண்டுபேரின்ரையும் பிறப்பு நிறையையும் சொல்லுங்கோ அம்மா
தாய்: இவவுக்கு பிறப்பு நிறை 3.5 கி.கி, மகன் பிறக்கும் போது 1.4 கி.கி இருந்தவர்
உங்கள் பிள்ளையின் நிறை அதிகரிப்பு எவ்விதம் எதிர்பார்க்கப்படுகிறது
- இலங்கையில் குழந்தையின் சராசரி பிறப்புநிறை 2.5 கி.கி ஆகும்
ஆயினும் 3.5 – 4 கி.கி வரையிலுள்ள குழந்தைகளும் காணப்படுகின்றனர்.(நிறை குறைந்த பிள்ளைகள் 2.5 கிலோ கிராம் )
- பிள்ளைகளுக்கு 5 மாதம் ஆகும்போது பிறப்பு நிறை இரண்டுமடங்
காகவேண்டும்.
உ + ம் : பிறப்பு நிறை -2.5 கி.கி
5 மாதத்தில் -5 கி.கி.
- பிள்ளைகளுக்கு ஒருவயதாகும் போது நிறை ,பிறப்பு நிறையின் மூன்று
மடங்காகவேண்டும்.
உ + ம் : பிறப்பு நிறை -3.கி.கி
ஒருவயது நிறை -9.கி.கி.
- 2 வயதில் பிறப்பு நிறையின் நான்கு மடங்காகவேண்டும்.
உ + ம் : பிறப்பு நிறை -2.5.கி.கி
ஒருவயது நிறை -10 .கி.கி.
- 2 வயதிலிருந்து 12 வயதுவரைக்கும் பின்வரும் சமன்பாட்டில் இட்டு அண்ணளவான எதிர்பார்ப்பு நிறையை அறியமுடியும்.
எதிர்பார்க்கும் அண்ணளவான நிறை கி.கி =(வயது (வருடங்கள் )+4)x2கி.கி
உ + ம் : பிள்ளையின் வயது 6 வருடங்கள் எனில்
நிறை=(6+4)x2=20
பிறப்பு நிறையை பொறுத்து பிள்ளையின் நிறையை எந்த வலயத்தில் பேணவேண்டும் என்பது தொடர்பான கருத்துகள் உண்டா?
பொதுவாக சாதாரண நிறை வலயத்தில்(பச்சை நிறம் )பிள்ளை இருப்பது சிறந்தது இதில் எந்த நிரைகோடுவழியே நிறையைப் பேணுவது சிறந்தது என்பது பிறப்பு நிறையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுவது உகந்தது.
உதாரணமாக பிள்ளையின் நிறை ஆழ்ந்த பச்சைக்கோட்டின் தொடக்கத்தில் இருந்தால் தொடர்ச்சியான நிருவைகளும் அக்கோட்டின் வழியே இருப்பது சிறந்தது.
மிகக் குறைந்த பிறப்பு நிறையுள்ள பிள்ளைகள் (பி.நி.<1.5கி.கி ) குறைந்த பிறப்பு நிறையுள்ள பிள்ளைகள் (பி.நி<2.5கி.கி) ஆகியோரில் இவ்விடயம் முக்கியமானதாக கருதப்படவேண்டும். இவர்களது பிறப்பு நிறை இளம் பச்சை அல்லது மஞ்சள் வலயத்தில் இருக்குமெனில்,அதற்குரிய கோட்டுக்குச் சமாந்தரமான வயதுக்கேற்ற தொடர் நிறைகள் ஏற்றவையாகக் கருதப்படுகின்றன.
மாறாக கடும் பச்சை வலயத்திலோ அதற்க்கு மேலாகவோ பேணுவதற்கு முயல்வது நல்லதல்ல. ஏனெனில் பிறப்பு நிறையைவிட மிக விலகிய அதிக நிறைகோட்டில்நிறையைப் பேணுவது பிற்காலத்தில் பிள்ளைக்கு இரத்த அழுத்தம் ,இருதய வியாதி,நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்ப்பட வழிவகுக்கிறது என்பது ஆராய்ச்சிகளின் முடிவாகும்.
வைத்தியர் குமுதினி ,கலையழகன்
குழந்தைநல வைத்திய நிபுணர் ,
யாழ்.போதான வைத்தியசாலை