செய்முறை
முதலில் முட்டையை வேக வைத்து முட்டையின் ஒட்டை நீக்கி தனியாக வைக்கவும். பின் அதனை இரண்டாக வெட்டி அல்லது முழுமையாக வைக்கவும் பின் ஒரு பாத்திரத்தில் கடலைமா, மிளகாய்த்தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மா பதத்திற்கு சற்று கெட்டியாக குழைத்துக்கொள்ளவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையானளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை கடலைமாவில் பிரட்டவும் பின் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
முட்டை | 05 |
கடலைமா | ½ கப் |
மிளகு தூள் | 1ஸ்புன் |
உப்பு | தேவையான அளவு |
எண்ணெய் | ஒரு கப் |
தேனீருடன் கொடுக்க ஏற்ற உணவு
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms. சண்முகராசா யோகம்மா