சொந்த இயற்கையான முத்துப்பற்களை தாங்கமுடியாத பல்வலி ஏற்பட்டாலும் அதைக் காப்பாற்ற முடியுமானால் நிச்சயமாக அது வரப்பிரசாதமாகும். இக்கைங்கரியத்தை பல்மருத்துவர்கள் பல்வேர் சிகிச்சை முறை மூலம் செய்கிறார்கள் உலகெங்கிலும் உள்ள மக்கள் இப்பொழுது வலி வந்த பற்களை பாதுகாப்பதையே விரும்புகின்றார்கள் சொந்தப்பற்களை பாதுகாப்பது உணவை நன்றாக சுவைத்துப் சாப்பிடுவதற்கும் பளீரென்ற வசீகரப் புன்னகைக்கும் கனீரென்ற சொல் உச்சரிப்பிற்கும் வாழ்க்கையை வசீகர முறைச் சிகிச்சையால் பல் மருத்துவர்கள் மக்கள் தம் சொந்தப் பற்களுடன் வாழ்நாள் முழுக்க வாழ வழி செய்கின்றார்கள்.
உங்கள் பல்லின் அமைப்பைப் பற்றி கூறுவோமேயாளால் தாடை எலும்பினுள் புதைந்துள்ள பல்லின் பகுதி பல்வேர் என்றும் வெளிப்புறமாக தெரியும் பகுதி பன்முடி என்றும் கூறப்படுகின்றது. பன் முடியில் வெளியில் இருந்து உட்புறமாக பார்ப்போமேயானால் மிளிரி ( Enamel) பன்முதல் ( Denhne) பன்முதல் ( Denhne) பல்வேர்க்குழாய் (Root Canal) எனும் பகுதிகளையும் வகைப்படுத்தலாம்.
உங்களின் பற்களின் விபத்தின் போதோ அதன் மச்சைக் குழி பாதிப்புறும் போது பற்றீரியாக்கிருமிகள் நரம்பையும், இரத்தக்குழாயையும் கொண்டுள்ள பன் மச்சைக்குழியை தாக்குகின்றன. இதனால் பன்மச்சைக் குழி சீழ் பிடித்து பல்வேர் நுனியுள்ள துவாரத்தினூடாக தாடை என்பின் கீ்ழ் கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பின் பன்முடிக்க பக்கத்தில் உள்ள தாடை என்பின் முரசின் வெளிப்புறமாக பற்பேதையாக தோன்றுகிறது. இந்த விட்டால் பல்லைப் பிடுங்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகும் வேர் முறைச்சிகிச்சை இந்த நேரத்தில் கைகொடுக்கின்றது.
பல்வேர் முறைச்சிகிச்சையின் போது சீழ்பிடித்துள்ள கிருமித் தொற்றுள்ள பல்மச்சைக்குழி பல்வேர் குழாயினுள் அழுகிய இரத்த நரம்பு இழைய சிதைவுகள் முற்றாக அகற்றப்பட்டு பல் மச்சைக்குழியின் சுவர்கள் அழுத்தமாக்கப்படுகின்றன. இதன் போதுள்ள கிருமித் தொற்றுள்ள மென்மையான மச்சைவேர் குழாய் சுவர் பாதங்கள் முற்றாக நீக்கப்படுகின்றன. இதனால் கிருமித்தொற்று முற்றாக நீக்கப்பட்டவுடன் பற்தேத்தைக்குரிய அறிகுறிகள் தானாக மறைந்து பல்வலியும் முற்றாக நீங்கிவிடும். முற்றாக அந்தப் பல்லில் எந்த விதமான நோய் அறிகுறிகளும் தென்படாத பட்சத்தில் வேர்க்குழாய் மச்சைக்குழி என்பன இறுக்கமாக அடைக்கப்பட்டு வெளிப்புற பன்முடியிள்ள சூத்தைபட்ட பகுதியை சிமெந்தினாலோ அல்லது பன் முடியைச் சுற்றிப் பல்லின் நிறுத்தினாலோ அல்லது உலோகத்தினாலோ உறை ( Crown) போட்டு சிகிச்சை செய்யப்படும்.
இந்தச் சிகிச்சை முறையின் போது மருத்துவர்களால் அழைக்கப்படுவர். ஒவ்வொரு தடவையும் பல் மருத்துவர் பல்வேர்க்குழாய் மச்சைக்குழி என்பவற்றின் கிருமித் தொற்றை நீங்க மருந்திட்டு நீங்கள் உட்கொள்ளவும் மருந்தகள் கொடுப்பார். இந்தச் சிகிச்சை முறைக்குப் பல்லின் எக்ஸ்றே ( X – Ray) படங்களும் தேவைப்படும்.
பல்வேர் சிகிச்சை செய்யப்படவேண்டிய சந்தர்ப்பங்கள் பல சமயங்களில் ஏற்படுகின்றன. விபத்தின் போதோ அல்லது நேரடியாக பல்லை ஒருவர் தாக்கும் போதோ வெளிப்புறமாக பல்லின் பாகங்கள் உடையாவிட்டாலும் காலப்போக்கில் பல் இறந்து நிறம் மாறி பழப்பாகும் சந்தர்ப்பங்கள் உண்டு. உடலிலேயே மிகவும் சிறப்பான துவாரம் பலவேர்க்குழாயின் நுனியினுள்ள இரத்தக்குழாயும் நரம்புகளும் அறுந்து விடும். காலப்போக்கில் பல் மச்சைக் குழாயிலுள்ள இழையங்கள் சிதைவுற்று கிருமித் தொற்று ஏற்படுகின்றன. இந்த சிதைவுறும் பதார்த்தங்கள் பன்முதலில் உள்ள சிறு மயிர்க்குழாயினூடாகப் பரவி பல்லுக்கு பழுப்பு நிறத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்தப் பற்கள் வேர் முறைச் சிகிச்சை செய்யப்பட்டு பன்முடியைச் சுற்றி பல்லின் நிறத்திலான உறை போடப்பட்டு பாதுகாக்கப்படலாம். பல்விபத்தின் பின் மருத்துவரிடம் சென்றால் அவர் தீர்மானித்து உடன் வேர்முறைச் சிகிச்சை செய்வதால் நிறம் மாறுவதைத் தவிர்ப்பார்.
வேர் முறைச் சிகிச்சை பல்லின் வேர்க்குழாயை அடைந்திருக்கும். பதார்த்தம் வாழ்நாள் முழுக்க நிரந்தரமாகவிருக்கும். ஆனால் பன் முடியை சுற்றி நாம் போடும் உறையை அல்லது சிமெந்தை நீண்ட வருடங்களின் பின் மாற்ற வேண்டி வரலாம். பல்லில் வேர்கள் வளைந்து காணப்படின் அல்லது பல்வேர்க்குழாய்களில் முற்றாக கல்சியப்படிவு காணப்படின் அல்லது பல்வேர் ஆயுதங்களைக் கொண்டு கத்தரிப்பில் இயலாமை ஏற்படும். அச்சந்தர்ப்பத்தில் வேர்முறைச் சிகிச்சை செய்வது இயலாதகாரியமாகும்.
தற்போது பல்மருத்துவர்களது அதிகூடிய சொற்களினாலும் இது பற்றி ஆராய்ச்சிகளினால் கிடைக்கப்பெற்ற மேலதிக அறிவும் இதற்குப் பயன்படுத்தும் அதிநவீன உபகரணங்களின் உதவியும் விறைப்பூசியின் வினைத்திறனும் வேர்முறைச் சிகிச்சையை மிகவும் எளிய நோவற்ற முறையாக மாற்றியுள்ளது. உங்கள் சொந்தப்பற்களை வேர்முறைச் சிகிச்சை செய்து வாழ்நாள் முழுவதும் பாதுகாக்க வேண்டுமானால் அதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய பணம் சிறிது அதிகம் தான்
“ பற்களை நீங்கள் பாதுகாத்தால் பற்கள் உங்களைப் பாதுகாக்கம்”
வைத்தியர். வ. தேவானந்தம்
(பல் மருத்துவர் யாழ் போதனா வைத்தியசாலை)
முன்னாள் விரிவுரையாளர்
(உடற்கூற்றியல் துறை மருத்துவபீடம். யாழ்ப்பாணம்)