உலகளாவிய ரீதியில் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக பெப்ரவரி 4ம் திகதி முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. புற்றுநோயானது உலகளாவிய ரீதியில் முன்னிலையில் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்திற்குகிணங்க 84 மில்லியன் மக்கள் இந்த நோயால் 2005 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சாவடைவார்கள் என்ற கருத்து உள்ளது. உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் போது புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் போது புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தலும், எப்படியெல்லாம் புற்றுநோயை கண்டு பிடிக்கலாம், குறைக்கலாம். தடுக்கலாம் என்பன பற்றிய பொதுமைப்பாடான அவதானிப்பு மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
புற்றுநோய் தொடர்பான முதலாவது விழிப்புணர்வு தினம் 2006ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அந்நாளிலிருந்து இந்நாள் வரை விழிப்புணர்வு தினத்தின் போது எவ்வாறெல்லாம் புற்றுநோயின் வீரியத்தைக் குறைப்பது மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் வாழ்க்கைத் தரத்தைப் பேணுவது என்றெல்லாம் அலசி ஆராயப்பட்டு வருகின்றது. இவ் விடயங்கள் யாவும் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மூலம் மக்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்தத் தினத்துக்காக பொதுவான இலச்சினையும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.மொத்தத்தில் மருத்துவத்துறையினர் மட்டுமன்றி எல்லாத் தரப்பட்டவர்களும் புற்றுநோய் தொடர்பில் அக்கறை கொண்டிருக்கவேண்டும்
மேற்கூறப்பட்டவாறு முன்னேற்றமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் புற்றுநோய் தொடர்பான மூட நம்பிக்கைகள் மக்கள் மனதிலிருந்து அகல வேண்டும். இதுவே இந்த ஆண்டுக்கான முக்கிய குறிக்கோளாகும். இக் குறிக்கோளை வெற்றிகரமாக அடைய வேண்டுமெனில் புற்றுநோய் பற்றிய மூட நம்பிக்கைக்கு எதிரான உண்மையையும் நாயம் அறிந்திருக்க வேண்டும்.
மூட நம்பிக்கை 1 – புற்றுநோய் பற்றி நாம் கதைக்கத் தேவையில்லை.
உண்மை 1 – சில கலாசார அமைப்புகளின் அடிப்படையில் புற்றுநோய் பற்றிக் கதைப்பது கடினமாகிலும், இதைப்பற்றி திறந்தளவில் ஆராய்வது தனிப்பட்ட மற்றும் சமூதாய மட்டத்தில் நல்ல பெறுபேற்றைத்தரும் . உதாரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் பயம், கவலை, அதிர்ச்சி, தனிமை எனும் உணர்வுகளைக் குறைக்க உதவலாம்.
மூட நம்பிக்கை 2 – புற்று நோய்க்கு எந்தவோரு குணங்குறிகளும் இல்லை.
உண்மை 2 – பலவகையான புற்றுநோய்களுக்கு (மார்பு, கருப்பை வாசல், வாய், குடல் – குதக்கால்வாய் என்பவற்றில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் சிறுவர் பராய புற்றுநோய்கள்) எச்சரிக்கையுடன் கூடிய குணங்குறிகள் தென்படுவதுண்டு. ஆரம்பத்தில் கண்டுபித்தலானது நோயின் உக்கிரத்தைக் கட்டுப்படுத்தும். உதாரணமாக மார்பக பரிசோதனையானது ஆரம்ப கட்ட சுகாதாரப் பணியாளர்களாலே மேற்கொள்ளப்பட்டு ஆரம்ப குணங்குறிகள் அடையாளம் காணப்படுகின்றன.
மூட நம்பிக்கை 3 – புற்றுநோய்க்கெதிராக நான் ஒன்றுமே செய்ய முடியாது.
உண்மை 3 – இது பொய்யான நம்பிக்கையாகும். ஏனேனில் தனிப்பட்ட சமூக மட்டத்தில் சட்ட ரீதியாக பல வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணமாக அற்ககோல் பாவனை, சுகாதாரமற்ற உணவுப்பழக்க முறை, குறைவான உடற்பயிற்சி போன்ற காரணிகளை மாற்றியமைத்தல் என்பன எல்லோரது கடமையாகும்.
புகையிலைப் பாவனையானது 71 வீத நுரையீரல் புற்றுநோயால் இறப்புக்களை ஏற்படுத்துகின்றது. மிதமிஞ்சிய அற்ககோல் பாவனையால் வாய், தொண்டை, வாதனாளி, களம், குடல், மார்பு, ஈரல் போன்ற இடங்களில் புற்று நோயைத் தோற்றுவிப்பதுடன் அதீத உடற் பருமனால் குடல் மார்பு, கருப்பை வாசல், சதையி, களம், சிறுநீரகம் பித்தப்பை போன்ற இடங்களில் புற்றுநோய் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே மேற்கூறப்பட்ட காரணிகள் அல்லாத. சுகாதாரமான சுற்றாடலை அமைப்பது எமது கடமைதானே!.
மூடநம்பிக்கை 4 – புற்று நோயிற்கான கவனிப்பைப் பெற எனக்க உரிமை இல்லை.
உண்மை 4 – புற்றுநோயிற்கான சிகிச்சையை உரிய விளக்கத்துடன், நவீன தொழில்நுட்ப சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளைத் தகுந்த பாதுகாப்பான சூழலில் இனம் மத வேறுபாடின்றி பெறுவதற்கு எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. ஆகவே புற்று நோய் எனும் அரக்கனுக்கெதிராக எம்மையும், எம்முடன் சார்ந்தோரையும் பாதுகாத்துக்கொள்ள ஆவன செய்வோம்
சி.சஸ்ரூபி
B.Sc (Nursing) M.Phil (Reading)