முகப்பருக்களைக் குறைக்க
முகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பருக்களும் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. இளம் வயதினரிடையே இது ஒரு முக்கிய பிரச்சினையாகவும் இருக்கிறது. சிலருக்கு மாறாத வடுக்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. பொதுவாக முகப்பருக்கள்
- எமது தோலின் கீழ் காணப்படும் நெய்சுரப்பிகளால் சுரக்கப்படும் Sebum எனும் திரவப்பொருள் அதிகமாக சுரக்கும்போது முகப்பருக்கள் தோன்றும் வாயப்பு உண்டு. சுரக்கப்படும் அளவை பொறுத்து பருக்களின் அளவும் வேறுபடும்.
- இலிங்க ஓமோன்கள் இளம் பருவத்தில் அதிகமாகச் சுரப்பதாலும் பருக்கள் இப்பருவத்தில் அதிகமாக தோன்றும்.
- எமது தோலில் காணப்படும் பக்ரீரியாக்கள் தோலின்கீழ் உள்ள நெய்சுரப்பிகளில் தொற்றுக்களை ஏற்படுத்துதல்.
- சிலருக்கு பாரம்பரிய காரணிகள் செல்வாக்கு செலுத்துதல்.
- எமது சருமத்தை மிருதுவாக்கப் பயன்படும் அழகு சாதனப் பொருள்கள் உதாரணமாக Tars, Chlorinated Hydroc abons போன்ற பொருள்கள்
- அதிக வெப்பம்
- முகத்தில் அதிகளவில் எண்ணெய் இருப்பது இதனால் அழுக்குகள் படிந்து அப்படியே சருமத்தில் தங்கவைத்து விடுகின்றன. இதனால் தோலின் துளைகளில் அடைப்புகள் ஏற்பட்டு பருக்கள் ஆக மாறிவிடுகின்றன.
- மலச்சிக்கல்
- சுற்றுப்புறச் சூழல் மாசுபடுதல் போன்ற பல காரணங்களால் முகப்பருக்கள் ஏற்படுகின்றன.
எனவே முகப்பருக்களைக் குறைக்க நம் கடைப்பிடிக்க வேண்டியன சில.
- ஒரு நாளைக்கு 5 – 6 முறை முகத்தை சுத்தமாக கழுவுதல், எண்ணெய் பசை அதிகமாக உள்ள சோப்புக்கள் பாவித்தலைத் தவிர்த்தல்.
- அதிகளவு நீர் அருந்துதல்
- பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைவகைகள் உணவில் அதிகமாக எடுத்தல்.
- எமது தோலுக்கு பாதுகாப்பு அளிக்ககூடிய விற்றமின் ”ஏ” விற்றமின் ”ஈ“ நியாசின் நாகம் உள்ள உணவுப் பொருள்களை எடுத்தல்.
- சருமம் வரண்டு போகாமல் இருப்பதற்கு கிளிசரின், olive oil பாவித்தல்.
- உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்ககூடிய உணவுகள் பானங்கள் எடுத்தல்
- நீராவி முகத்துக்க பிடித்தல்
- பருக்கள் தோன்றினாலும் அவற்றைக் கிள்ளவோ, நசுக்கவோ, உடைக்கவோ கூடாது. இதனால் வடுக்கள் வருவதற்குரிய வாய்ப்புக்கள் உண்டு. வைத்தியரிடம் காட்டி ஆலோசனை பெறுதல் அவசியம்.
- காற்றோட்டமான சூழலில் வசித்தல்
- தீவிரமாக இருப்பின் வைத்திய ஆலோசனை பெறுதல்
எஸ்.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்
Posted in செய்திகள்