வெண்டிக்காய் கட்லட்
செய்முறை
வெண்டிக்காயயை சுத்தப்படுத்தி ( வெண்டி விதையை) கொதித்த தண்ணீரில் வைத்து
அமிழ்த்தி மூடிவிடவும். இறைச்சியை சிறிதளவாக வெட்டி அதனுடன் வெட்டி
அதனுடன் வெண்டி விதையையும் போட்டு பிரட்டல் கறிபோல வைக்கவும் (பற்றிஸ்கறி)
அதன்பிறகு வெண்டிக்காய்க்குள் கறியை வைத்து முட்டை அல்லது கடலை
மாவினுள் நன்றாக தேய்த்து எடுத்து றக்ஸ் தூளில் பிரட்டி பொரித்தெடுக்கவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
வெண்டிக்காய் | ¼ Kg |
கோழி இறைச்சி ( எலும்பில்லாது) | ¼ Kg |
வெங்காயம் | 1 (பெரிது) |
உள்ளி | 2 பல்லு |
இஞ்சி, உப்பு தூள், மிளகாய் தூள் | சிறதளவு |
முட்டை 1 அல்லது கடலைமா | |
றக்ஸ் தூள் | தேவையான அளவு |
நல்லெண்ணை | பொரிப்பதற்கு அளவாக |
மாலைநேர தேனீருடன் குழந்தைகளுக்கு பரிமாற ஏற்ற உணவு
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms ஜோய் சத்தியராஜன்
Posted in சிந்தனைக்கு