நீங்கள் உப்பை உட்கொள்வதை எப்படிக் குறைக்கலாம்?
- சமைக்கின்றபோது குறைந்தளவு உப்பையே சேர்ப்போம். உணவுகளில் சுவையை வாசனையை அதிகரிக்க வாசனை ஊட்டும் திரவியங்களையும், மூலிகைகளையும் பயன்படுத்திக் கொள்வோம்.
- சாப்பாடுகளைத் திட்டமிடும்போது உடனடியாக உண்ணக்கூடிய பக்குவம் செய்யப்பட்ட உணவுகளைவிட சோடியம் குறைவாகக் கொண்டுள்ள உடன் புதிய உணவுகளை கருத்தில்கொள்ளுவோம்.
- உப்பிட்ட, தகரத்தில் அடைக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உற்பத்திகளைவிட உடன் மீன், கோழி மற்றும் இறைச்சிகள் போன்றவற்றில் சோடியம் குறைவாகவுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்வோம்.
- தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தெரிவுசெய்யும் போது குறைந்த அல்லது உப்பே இல்லாது தயாரிக்கப்பட்டவற்றையே தெரிவு செய்வோம்.
- உணவுக்கு சுவையூட்டும் குழமபு (Sauce) ஊறுகாய், தேசிக்காயும் உப்பும் சேர்ந்த கலவைகள், சட்ணி, பச்சடிக்கலவைகள் கெச்சப் ( Ketch -up) போன்ற சேர்க்கப்பட்ட உப்பைக்கொண்டுள்ள உணவுகளைக் கட்டுப்படுத்துவோம்.
- உப்புச் சேர்க்கப்பட்ட உடனடியாக உட்கொள்ளக்கூடிய உணவுகளுக்குப் பதிலாக குறைந்த சோடியத்தைக் கொண்டுள்ள உடன் புதிய காய்கறிகளையும், பழங்களையும் தேர்ந்தெடுப்போம்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும், பொதியாக்கப்பட்ட உணவுகளிலும் பதப்படுத்தலின் போது அதிகளவிலான உப்பு சேர்க்கப்படுவதை ஞாபகத்தில் வைத்திருப்போம்.
- குழந்தைகளுக்கும் இளம்பிள்ளைகளுக்கும் உப்பினை அறிமுகப்படுத்துவதில் தாமத்தை ஏற்படுத்துவோம். இதனால் குறைவான உப்புக்கு திருப்தி அடைவதுடன், சுவைகளைப் பழகிக்கொள்வதிலும் தாமதத்தை ஏற்படுத்தும். இவர்கள் எப்பொழுதும் உப்புச்சுவையை அறிய விரும்புவார்கள்.
- நீங்கள் குறைவான அளவில் உப்பினை பாவிப்பதன் மூலம் அந்த அளவில் நாங்களும் திருப்தியடைவோம்.
மருத்துவர் திருமதி. பிரதீபனா செல்வகரன்
நீரிழிவு சிகிச்சைநிலையம்
யாழ். போதனா வைத்தியசாலை
Posted in சிந்தனைக்கு