செய்முறை
உழுந்து பருப்பை ஊறவைத்து கோது நீக்கி உப்புப்போட்டு அதை கிரைண்டரில் அரைத்து எடுத்து அவித்த பயற்றம்மாவுடன் குழைத்து வைக்கவும் ( 3மணி) பின் ஒருபாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுகொதிக்கவிடவும். கொதித்தபின் வெங்காயம் போட்டு வதக்கவும். பின் கடுகு, கடலைப்பருப்பு, சோம்பு, கரட் (துருவியது) சேர்த்து வதக்கி எடுத்து மாக்கல்லில் போட்டு கிளறி குண்டு அச்சுச்சட்டியில் எண்ணெய்யை விட்டு மாக்கலவையையும் இட்டு சுட்டு எடுக்கவும்.
தேவையான பொருட்கள் | அளவு |
உழுத்தம்பருப்பு | ½ கப் |
பயிற்றம்மா | 1 கப் (அவித்தது) |
உப்பு | தேவையான அளவு |
கறிவேப்பிலை | தேவையான அளவு |
வெங்காயம் | 1 பெரியது |
செத்தல் | 3 |
கரட் (துருவல்) | சிறிதளவு |
ந.எண்ணெய் | தேவையான அளவு |
கடுகு | தேவையான அளவு |
கடலைப்பருப்பு | தேவையான அளவு |
சோம்பு | தேவையான அளவு |
மிளகுத்தூள் | சிறிதளவு |
சீரகத்தூள் | சிறிதளவு |
குழந்தைகளுக்கு காலை உணவாகவோ அல்லது மாலை உணவாகவோ கொடுக்ககூடிய உணவு
இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms கிருபனா பிறேம்குமார்