இன்று சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றது. அவை ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் மிகவும் சாதாரணமாக நடைபெறுகின்றது. இவ்வாறான செய்திகள் பத்திரிகைளிலோ, வானோலியாலோ, தொலைக்காட்சியிலோ கேட்கவோ, வாசித்தோ, பார்க்கும் போது அட இவ்வளவு பேருக்கு இந்த நோயம் வைத்தியசாலையில் சரியான வசதிக் இல்லை அல்லது சரியான மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை மருந்துகள் சரியாகக் கிடைப்பதில்லை. என இன்னோரால் செய்திகளை ஆச்சரியத்துடன் நோக்குவதுடன் முன்னர் இப்படியல்ல இப்பதான் நடைபெறுகின்றது. என்பதுடன் இதற்கு அரசாங்கமும், அரசாங்க அதிகாரிகளும் தான் முழு அளவில் காரணம் என்பது போல் எண்ணத்தை வளர்ப்பதுடன் அதனை சாதாரணமாக எல்லோரும் ஏற்றுக்கொள்வது போல் இருப்பதும் அவதானின்னத்தக்கது. இது மட்டுமல்ல வைத்தியசாலைகளுக்கு நோய்க்கு சிகிச்சை பெறச் செல்லும் போதோ அல்லது உறவினர் ஒருவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் போதோ சரியான உரிய சிகிச்சையோ, வசதிகளோ செய்து கொடுக்கப்படுவதில்லை என கவலையடைதலோ அல்லது கோபமடைதல் அல்லது அங்குள்ளவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுதல் அவதானிக்கத்தக்கது.
ஆனால் நாம் இவ்வாறான முக்கிய விடையங்களை அத்துடன் நிறுத்திக் கொள்வதுடன் அவைபற்றி மேலதிகமாக ஆராய்வது ஏன் இது இவ்வாறு இருக்கிறன்றது? இதற்கான காரணங்கள் என்ன? இவ்வாறான பிரச்சினைகளுக்கு யார் பொறுப்பு? இதனை எவ்வாறு மாற்றி அமைக்கலாம், அதனை எவ்வாறு செயற்படுத்துவது இவ்வாறான விடையங்களை நம்மில் எத்தனைபேர் சிந்தித்து பார்க்கின்றோம். இவைபற்றி மற்றவர்களுடன் விவாதிக்கிறோம். விவாதிக்கப்பட்ட விடயங்களிலும் எத்தனை விடயத்தை செயற்படுத்த முற்படுகிறோம்.
நாம் இவ்வாறு செயற்படாததிற்குரிய விடையங்களை ஆராய்வதற்கு இவ்கட்டுரையின் நோக்கம், இதற்கான முதற்காரணம் எனக்கூறக்கூடிய சுகாதார சம்பந்தமான அறிவு மக்களிடம் குறைவாக அல்லது குறைந்தளவில் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படுவதாகும். நாம் இவ்வாறான அறிவு மக்கள் மத்தியில் குறைவாகக் காணப்படுவதற்கு காரணங்கள் எவை என ஆராய்வோம்.
பொதுவாக எம்மத்தியில் ஒரு விடையம் பற்றிய அறிவினை வழங்கக்கூடிய வழிகள், கட்டமைப்புகள் குறைவாகக் காணப்படுகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ்வாறான வசதிகள், கட்டமைப்புகள் பெருமளவில் செயற்படுவது கண்கூடு. இவற்றில் பெரும்பாலானவை பொது அமைப்புகளினால், மக்களினால் , நோயாளிகளினால் ஏற்படுத்தப்பட்டவை அவற்றுடன் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டவையும் செயற்படுகின்றன. ஆனால் எம்மிடம் அவ்வாறான வசதிகள் குறைவாககாணப்படுகின்றன. அரசாங்கத்தினால் குறைந்தளவு வழங்களையே இதற்கு ஒதுக்கக்கூடியதாகவுள்ளது. இவ்வாறு குறைந்தளவில் ஒதுக்கப்பட் வளங்களும் சரியான தகவல்களை சரியானவர்களை சென்றடைகின்றதா என்பது கேள்விக்குரியது.
பொது அமைப்புகளினதோ அல்லது தனியார் அமைப்புகளினது பங்குனி இவ்விடையத்தில் குறைந்தளவிலேயே செயற்படுத்தப்படுகின்றது. அவ்வாறான செயற்பாடுகளில் எவ்வளவு விடையங்கள் சரியான முறையில் மக்களைச் சென்றடைகின்ற என்பது கேள்விக்குரியதே.
ஆனால் இன்று அவதானிக்ககூடிய விடையம் என்னவெனில் பல்வேறு பொது அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் இவ்விடையம் சம்பந்தமாகக் கூடியளவு கவனத்தை செலுத்துகின்றமை அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது.
ஆனால் இவ்வாறான முயற்சிகளில் எவ்வளவு விடையங்கள் சரியாக மக்களைச் சென்றடைகின்றன என்பது அடுத்த மிகப் பெரியபிரச்சினை இன்று பல ஊடகங்களும் சுகாதாரம் சம்பந்தமான விடையங்களுக்கு முக்கியத்தும் கொடுத்துவருகின்றன. இதில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அளவு மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி ஆராய்வது இன்னொருவிடையமாகும் ஆனால் ஊடகங்களினால் மக்களிற்கு கொடுக்கப்படும் சுகாதார தகவல்களில் எவ்வளவு உண்மையாக மக்களைச் சென்றடைகின்றன என்பது இன்னொருவிடையம். அனேகமான சுகாதாரம் சம்பந்தமான தகவல்கள் மக்களைச் சென்றடைவது குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு பல காரணங்கள் கூறப்படலாம்.
1. மக்கள் மத்தியில் இவைபற்றிய அறிவை பெருக்கிக் கொள்வதில் உள்ள ஆர்வமின்மை
2. இவ்வாறான விடையங்கள் மக்களை கவரக்கூடியவிதத்தில் மாற்றியமைக்கப்படாமை.
எனவே நாம் இன்று மக்களிற்கு சுகாதாரசேவைகள் பற்றிய அறிவை மக்களுக்கு வழங்கவேண்டியவர்களாக உள்ளோம். மக்களுக்கு சுகாதாரம் பற்றிய அறிவூட்டல் ஆனது எதிர்கால சுகாதார விருத்திக்க மிகவும் அவசியமானது. அவ்வாறான அறிவூட்டல் ஆனது சரியான ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் மக்களை சென்றடைய வேண்டும். வழங்கப்படும் தகவல்கள் சரியானவையாக எமது பிரதேசங்களிற்கு ஏற்றவையாக அமைதல் வேண்டும். இது மட்டுமல்லாது மக்கள் இவ்விடையங்களை அறியும் ஆவலை தூண்டுதல் அவசியம். உதாரணமாக பத்திரிகைகளில் இவ்வாறான தகவல்கள் தரும் விடையமுயை பக்கத்தை வாசிக்கக்கூடிய ஆர்வத்தை தூண்டுதல் அவசியமானதாகும். பலர் பத்திரிகையில் வரும் சிலபகுதிகளைள வாசிப்பதில்காட்டும் ஆர்வத்தை சுகாதாரம் சம்பந்தப்பட்ட பந்திகளை வாசிப்பதில் காட்டுவதில்லை.
அத்துடன் சுகாதாரம் சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்குபவர்களும் அவற்றை மக்களை வாசிக்கத்தூண்டுதல் அவசியம். இவ்விடையம் சரியான முறையில் தற்போது கையாளப்படாமையே அண்மையில் பல தொற்றுநோய்கள் பற்றிய அறிவு மக்களுக்கு வழங்கப்பட்டும் மக்கள் அவ் நோய்களின் கட்டுப்பாட்டில் ஆர்வமின்றிக்காணப்படுகின்றமை கண்கூடு. மிகவும் முக்கியமாக டெங்கு நோய் பற்றிய கட்டுப்பாடு பற்றிய பல கட்டுரைகள், செய்திகள், மக்களுக்குத் தெரியப்படுத்திய பின்னரும் மக்கள் அதிகளவு அக்கறை செலுத்தாமல் வருடத்திற்கு வருடம் அந்நோயின் அளவு அதிகரித்துச் செல்கின்றது. எனவே சுகாதார தகவல்களை சரியான முறையில் மக்களைச் சென்றடையச் செய்தல், மக்களை சுகாதார முன்னேற்றத்திற்கு பங்குபற்றும் முக்கிய விடயம். இதனை சரியான முறையில் செய்வதை உறுதி செய்வோமா??
Dr.இ.சுரேந்திரகுமாரன்