1. பச்சையாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்ககூடிய காய்கறி
2. உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கக்கூடியது.
3. இதில் 90 வீதம் நீர் காணப்படுவதால் நீங்கள் தண்ணீர் குடிப்பது குறைவாயினும் அதனை ஈடுசெய்யக்கூடியது.
4. உடல்சூட்டுக்கு நிவாரணம் கிடைக்கும்.
5. சருமத்தில் இதனை தடவினால் சூரிய கதிர்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
6. வெள்ளரிக்காயில் இருக்கும் நீர் உடலிலுள்ள கழிவை நீக்க உதவுவதுடன் இதனை சீராக சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை குறைக்கும்.
7. வெள்ளரிக்காயில் உடலுக்கு தேவையான பல விற்றமின்களும் (விற்றமின் A,B,C) பல கனியுப்புக்களும்( பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் சிலிக்கள்) அடங்கியுள்ளன.
8. உடல் ஏடையை குறைக்க விரும்புவர்கள் இதனை சாப்பிடலாம். ஏனேனில் இதில் நீர் அதிகமாகவும் கலோரி குறைவாகவும் காணப்படுகின்றது.
9. இதில் காணப்படும் நார்பொருட்கள் மலச்சிக்கலை தவிர்க்கக் கூடியது.