இனிக்கும் சர்க்கரை ஆரோக்கியத்தை கசக்கச் செய்யும். நாம் உண்ணும் உணவிலிருந்து நம் உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அளவை கலோரிகள் என்று கணக்கிடுகிறோம். அந்த கலோரி கணக்கின் படி தற்போது ஒருவர் உட்கொள்ளும் உணவில் சேர்க்கப்படும் செயற்கை சீனி அளவானாலும் பழச்சாறு, தேன் போன்றவற்றில் இயற்கையிலேயே இருக்கும் சீனியானாலும் ஒட்டுமொத்த சீனியின் அளவு 20 கிராம் அதாவது 5 தேக்கரண்டிகளாக குறைக்கப்படவேண்டும் என தற்போது பிரிட்டனின் உணவுக்கான அறிவியல் ஆசோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது. காரணம் ஒருவரின் உணவில் சீனியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அவரது உடல் பருமன் அதிகரிப்பதுடன் நீரிழிவுநோயும், இதயநோயும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் பல மடங்கு அதிகரிப்பதாக இவ் அமைப்பின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.